12/14/2010

இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் வடபகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டம்


வட இலங்கைக்கான 5 ஆண்டு கால குடிநீர் விநி யோகத் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆசிய அபி விருத்தி வங்கியின் உதவியுடன் 20,740 மில்லியன் ரூபா செலவில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், வட பகுதியில் உள்ள 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கு, சுத்தமான குடிநீரை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான சாத்தியக் கூற்று ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே உயரதிகாரிகளாலும் குடிநீர் விநியோக நிபுணர்களாலும் ஆராய்ந்து அங்கீகரிக் கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த குடிநீர் விநியோக திட்டம் 2015 ஆம் ஆண்டில் முற்றாக நிறை வேற்றப்படும். ஆயினும், 2011 ஆம் ஆண்டிலிருந்தே இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப் படுவதற்கு அமைய, நீர் விநியோகம் படிப்படியாக வட பகுதியின் பல்வேறு பிரதேசங்களுக்கு பெற்றுக் கொடுக் கும் செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும் தண்ணீர், அங்கிருந்து பாரிய நீர்ப்பாய்ச்சும் பம்புகளின் உதவியுடன் பரந்தன் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் படும். இதனடிப்படையில், 2015 ஆம் ஆண்டில் யாழ்ப் பாண மாவட்டத்திற்கு 13.1 சதவீதம் நீர்விநியோக மேம் பாடும் அதிகரிக்கப்படும். இதே அடிப்பபடையில் 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 22.74 ஆகவும், 2030 இல் 43 சதவீதமாகவும் அதிகரிக்கும்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டத்திற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெயிக்கா நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் வழங்கும். 20 ஆயிரம் மில் லியன் ரூபா இதற்கென செலவிடப்படும்.
இதனால், 3 இலட்சம் மக்கள் பயனடைவார்கள். பருத்தித்துறை நீர் விநியோகத் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் 515 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுக்கும். இதனால் 20 ஆயிரம் பேர் நன்மையடைவார்கள். வல்வெட்டித்துறை நீர் விநியோக திட்டத்திற்கு உலக வங்கி 225 மில்லியன் ரூபா வழங்கும். இதனால் 10 ஆயிரம் பேர் நன்மையடை வார்கள்.
மருதங்கேணிக்கு 25 மில்லியன் ரூபா கொடுக்கப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் பேர் நன்மையடைவார்கள். நெடுந் தீவுக்கு 12.75 மில்லியன் ரூபா வழங்கப்படும். இதன் மூலம் 4 ஆயிரம் மக்கள் நன்மையடைவார்கள்.
இந்த குடிநீர் விநியோகத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆறாவது அபிவிருத்தித் திட்டமாகும்.
தற்போது, வட இலங்கையில் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட் டத்தில் இருந்து கிணறுகள் மூலம் பெறப்படும் குடிநீரில் உவர்நீரும் கலந்து இருப்பதனால், அது மக்களின் தேகாரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என்பதனால், அப்பகுதி மக்கள் கிணற்று நீரை வடிகட்டி கொதிக்க வைத்த பின்னரே, மிகவும் பாதுகாப்பான முறையில் குடிப் பதற்கு பழகியிருக்கிறார்கள். இந்த உவர் நீரைக் குடிப்ப தனால், பெரும்பாலான மக்கள் சிறுநீரக அழற்சி நோய் களினாலும் பாதிக்கப்படுவதுண்டு.
இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தை மன்னார் மாவட்டத்திற்கும் விஸ்தரிப்பதற்கு இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வடபகுதியின் ஆளுநர் முன்னாள் மேயர் ஜெனரல் சந்திரசிறி, ஓராண்டு காலமாக எடுத்த முயற்சி யின் காரணமாகவே, இந்தக் குடிநீர் திட்டத்தை நிறை வேற்றுவது சாத்தியமாகி இருக்கிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒளியை பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் அரசாங் கத்திற்கு ஒரு சில சமூகவிரோதிகளின் தூண்டுதல்களை உண்மையான எதிர்ப்புகள் என்று நம்பி அவற்றை ஆத ரித்து, இங்குள்ள தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதைத் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்

0 commentaires :

Post a Comment