அண்மையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் திடீர்விஜயம் மேற்கொண்டிருந்தார். சிறைச்சாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் கைதிகளின் நலன்கள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்து கொண்டார். இடவசதி மிகவும் போதாது உள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்வந்தார். எதிர்வரும் ஆண்டில் அதற்கான பிறிதொரு இடத்தினை ஒதுக்குவது தொடர்பில் தாம் உத்தேசித்திருப்பதாகவும் மட்டக்களப்பின் எதிர்கால பிரதான திட்டத்தில்(மாஸ்டர் பிளான்) அது உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் சந்திரகாந்தன் தெரிவித்தார். அத்தோடு குறிப்பிட்ட சில குறைபாடுகளை நேரடியாக தான் பார்த்ததன் அடிப்படையில் அவற்றினை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை தாம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இவ் விஜயத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பின் பூ. பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
0 commentaires :
Post a Comment