12/23/2010

அரசியலிலும் பெண்களின் பிரவேசம் அதிகரிக்கப்பட வேண்டும்

dsc083382கி.மா.ச. உறுப்பினர் பூ.பிரசாந்தன்.
ஆண்களுக்கு ஈடாக பெண்களும் அனைத்து துறைகளிலும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என சீடோ உடன்படிக்கையின்படி 1979ம் வருடம் டிசம்பர் மாதம் சர்வதேசம் ஏற்றுக் கொண்டது. 1981 ஒக்டோபர் மாதம் இலங்கையும் அச்சானத்தில் கைச்சாத்திட்டது. எழுத்துருவில் சட்ட வரைபுகள் இருந்தாலும் நடைமுறையில் அதனைச் செயற்படுத்துவது அவரவர் கைகளிலேயே தங்கியுள்ளது. அதிகாரம் என்பது யாரும் வந்து அள்ளித்தருவது அல்ல தாங்களாக தங்களின் ஆளுமைக்கு ஏற்ப எடுத்துக் கொள்வதுதான். தமிழர்கள் பெண்களினைப் பொறுத்தவரை ஆண்களைவிடவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமூகத் தலைமை தாங்கலுக்கும் சில பிற்போக்கு சிந்தனையுள்ள ஆண்கள் தடையாக அமைந்ததாலும் அதிகம் பெண்களின் தாழ்வுமனப்பாண்மையும் ஏனைய பெண்களுமே தடையாகவுள்ளனர். தாழ்வு மனப்பாண்மையைத் தகர்த்தெறிய பெண்கள் பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் செயற்பாடுகளால் ஓரளவு நிவர்த்தி செய்தாலும் பெண்களுக்கான பெண்களின் தடைகளை நீக்க பெரும் வழிப்பூட்டல் தேவை. சக பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் வசைபாடல்களையும் பெண்களே தவிர்க்கவேண்டும். சமூக முன்னோடியாக பெண் முன்வரும்போது பெண்கள் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர முறையற்ற மனச் சலனங்களை ஏற்படுத்தும் சம்பவங்களைத் தூக்கி வீச வேண்டும். அரசியலிலும் பெண்களின் பிரவேசம் அதிகரிக்கப்பட வேண்டும் அப்போதுதான் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க முடியும்.
இன்றைய தொலைக்காட்சி நாடகங்களை தொடர்ந்து பார்த்தால் பெண்கள் மத்தியில் ஆளுமை வளர்வதற்கு குரோத உணர்வுகளே அதிகம் வெளிப்படுத்தப் படுகின்றது. மாமியார்,மருமள் கொடுமை அக்கா,தங்கை திருமணச் சண்டை, பரம்பரைச்சண்டை எனத் தொடர்கின்றது. எனவே இவைகளைத் தவிர்த்து ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என கி.மா.ச. உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவத்தார்.
கடந்த 17.12.2010 அன்று தொழில்துறைத் திணைக்களத்தினால் ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் 2010ம் வருடத்திற்கான பெஷன் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment