12/05/2010

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சந்திப்பு

eu-trinco-cm-visit-021220101
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்கள். இச் சந்திப்பானது சிநேகபூர்வ அடிப்படையிலான ஓர் சந்திப்பதாக அமைந்திருந்ததாக முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இச் சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்றிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் செயற்றிடடங்கள் என்பான தொடர்பாகவும் பேசப்பட்டது. எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ள இருக்கின்ற அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண சபை பூரண ஒத்துழழைப்பினை வழங்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.eu-trinco-cm-visit-021220102

0 commentaires :

Post a Comment