12/01/2010

புதுப்பொலிவு பெறும் வாகரை






வாகரைப் பிரதேச அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மக்களின் பாவனைக்காக இன்று கையளிப்பு.
  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது ஏழரைக் கோடி ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீள்கட்டமைக்கப்பட்ட கோறளைப் பற்று வடக்கிற்கான அபிவிருத்தித் திட்டங்கள் 30.11.2010. இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதோடு, மக்களின் பயன்பாட்டிற்காக இத்திட்டங்கள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களால் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வானது இன்று கொட்டும் மழைக்கும் மத்தியில் வெகு விமர்;சையாக நடைபெற்றது. கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நா. திரவியம், பூ. பிரசாந்தன், ஆகியோரும் கோரளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்வி கோகுலநாயகி, பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் முதலமைச்சர் செயலக உத்தியோகஸ்த்தர்கள் கலந்து கொண்டார்கள்.
கீழ் வருகின்ற செயற்றிட்டங்கள் இன்று பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
01.பாலமாங்கேணி வீதி .
02.மாங்கேணி குறுக்கு வீதி.
03.மாவடியோடை உள்வீதி.
04.புணரமைக்கப்பட்ட கிரிமிச்சைக் குளம்.
05.புணரமைக்கப்பட்ட பாலையடியோடைக் குளம்.
06.கிரிமிச்சை வீதி.
07.பெரியசாமிகோயில் கொங்றிட் வீதி.
08.வம்மிவட்டவான் உள்வீதி.
09.இலங்கை போக்குவரத்து சபையின் வாகரைக் கிளையின் நிருவாகக் கட்டிடம்.
10.மாங்கேணி விளையாட்டு மைதானம்.

kirimichchai-30112010-2
30112010
bammi-vaddavan-rd30112010
ctb-vaharai-30112010
puliyan-22
puliyan-30112010

0 commentaires :

Post a Comment