வருடாந்தம் 80 மில்லியனினால் உலக சனத்தொகை அதிகரிப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேகத்தின்படி அடுத்த வருட நடுப்பகுதியாகும் போது உலக சனத்தொகை 7 பில்லியனை தாண்டிவிடும் என்கிறது ஐ. நா. புள்ளிவிபரங்கள்.
சனத்தொகை அதிகரிப்பின் சுமையை உலகம் ஏற்கெனவே உணரத் தொடங்கிவி-ட்டது. ஒருபக்கம் நீர் வளம் குறைந்து வருகிறது. மீள் அறுவடை குறைக்கிறது. தினமும் ஒரு பில்லியன் மக்கள் பட்டினியில் வாடுகின்றனர்.
உணவுப் பற்றாக்குறை, யுத்தம், நோய்கள் என்பன சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டாலும் அது அவ்வாறு அமையவில்லை. போசாக்கு மற்றும் சுகாதார மேம்பாட்டினால் மனிதனின் ஆயுள் எதிர்பார்ப்பு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
சிறுவர் மரண வீதமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணிப்பீடுகள் கூறுகின்றன. 18வது நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் 20 ஆவது நூற்றாண்டில் ஆசியாவிலும் பெண் ஒருவருக்கு 6 பிள்ளைகள் வீதம் இருந்தன. ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற அடிப்படையிலே பிள்ளைகள் இருக்கின்றன.
இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு 2.6 என்ற அடிப்படையில் பிள்ளைகள் காணப்படுவதோடு ராஜஸ்தான் மத்திய பிரதேசம். பீகார், உத்தர பிரதேஷ் போன்ற பகுதிகளில் ஒரு பெண்ணுக்கு 4 பிள்ளைகள் என்ற அளவில் சனத்தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்பொழுது அதிக சனத்தொகை கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் உள்ளது. 1966ல் இந்திய சனத்தொகை 50 இலட்சம் மட்டுமே. இன்று அந்த நாட்டு சனத்தொகை 1.2 பில்லியனாக உள்ளது. சனத்தொகை குறைந்த பாடில்லை. 2050ல் இந்திய சனத் தொகை 1.6 பில்லியனாகும் என நம்பப்படுகிறது. 2030ல் இந்திய சனத்தொகை சீனாவை முந்திவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2045ல் உலக சனத்தொகை 9 பில்லியனாக உயரும் என்கிறது ஐ. நா. ஆனால் 2050ல் சனத்தொகை 10.5 பில்லியன் ஆகவோ 8 பில்லியனாகவோ மாறலாம். பெண்ணொருவருக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்தாலே சனத்தொகை 8 மில்லியனாக குறைய வாய்ப்பு இருக்கிறதாம்.
தற்பொழுது குழந்தை பெறக்கூடிய வயதுடைய பெண்கள் 1.8 பில்லியன் வாழ்கின்றனராம். இப்படியே போனால் பூமி தாங்காது. இப்பொழுதே வேற்றுக்கிரகங் களில் இடம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியதுதான்.
0 commentaires :
Post a Comment