12/23/2010

பெரும் மதிப்பிற்குரிய தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராஜகோபால் (ஈழத்துப்பூராடனார்)அவர்கள் நேற்று 21-12-2010 அன்று மிஸ்ஸசாகாவில் இறைவனடிசேர்ந்தார்.

மட்டக்களப்பு செட்டிபாளயத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின்
நேரடிமாணவரான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மற்றும் சிறந்த தமிழ் அறிஞர்களிடம்
கல்வி பயின்றதுடன் ஒருபயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக இலங்கையில் கடமையாற்றி
ஓய்வு பெற்றவர்.
கடந்த 35 வருடங்களாக கனடாவில் வசித்து வந்த ஈழத்துப்பூராடனார் என அறியப்பட்ட
கலாநிதி க.தா. செல்வராசகோபால்  அவர்கள் கனடாவின் தமிழ் கலை, கலாச்சாரம்
மற்றும் தமிழ்இலக்கியத்தின் முன்னோடியாவார்.  கனடாவில் முதன்முதலாக அச்சியந ;திர
சாலை நிறுவி தமிழ்பதிப்புக்களை மேற்கொண்டதுடன்  “நிழல்” என்னும் வாரமலரையும்
கனடாவில் முதலில் வெளியிட்டவர். தமிழ் எழுத்துக்களை கணணியில் வடிவமைப்பதிலும்
தமிழ்மொழிக்கல்வியை இலவசமாக  தமிழ்மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதிலும்  தன்
மனைவி திருமதி பசுபதி செல்வராசகோபாலுடன் இணைந்து பணியாற்றிய ஒருசிறந்த
சமூகநல நோக்கம் கொண்ட உயர்ந்த தமிழறிஞர் ஆவார்.
கனடாவில் பல சமூகநல ஸ்தாபனங்களை அமைப்பதில் முன்னின்று உழைத்த
பூராடனார் அவர்களால் உலகத்தமிழர் பண்பாட்டுக்கழகம்,  சுவாமி விபுலாநந்தர்
கலைமன்றம் மற்றும் கிழக்கு  மக்கள் அபிவிருத்திச்சங்கம் என்பன அன்னாரது அயராத
முயற்சியால் உருவானவை.  உலகத்தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் தாய்ச்சங்க
உபதலைவராகவும் அதன் போ~கராகவும் பலகாலம் கடமையாற்றிய பூராடனார் என்றும்
எப்பொழுதும் தமிழ்மொழியிலும்  தமிழ்மக்கள் மேலும் மிகவும் கரிசனையுடன் மதம் இனம்
என்பனவற்றைக் கடந்து ஒரு நேர்மையான தன்மானமுள்ள தலைசிறந்த
குடும்பத்தலைவனாகவும்  சமூகத்தின்  பெருமதிப்பும் மரியாதைக்குரியவராகவும்  தன்
இறுதிநாள் வரை வாழ்ந்த ஒரு மகான்.
இவரது தமிழ்மொழிக்கான சேவையை இலங்கை இந்தியா தமிழ்நாடு சிங்கப்பூர்
மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்களாலும் அங்குள்ள
பல்கலைக்கழகங்களாலும் பலமுறைபாராட்டப்பட்டவர். இவரது தமிழ்மொழிக்கும்
இலக்கியத்துக்குமான சேவையினைப்பாராட்டி கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்  கலாநிதி
பட்டம் வழங்கி கௌரவித்தமை தமிழுக்கு செய்த சிறப்பாகும்.
சமூகத்தின்பால் சீரிய அக்கறைகொண்ட ஈழத்துப்பூராடனார் தமிழ் சிங்களம் ஆங்கிலம்
ஆகிய மொழிகளுடன் கிரேக்க மொழியையும் அறிந்தவர்.  சுமார் 500 நூல்களை எழுதி
வெளியிட்ட இப்பெருந்தகை இறக்கும் வரையில் தனது  83 வது வயதிலும்
எழுதிக்கொண்டிருந்த ஒருசரித்திர புரு~ராவார்.
அன்னாரது இழப்பு ஒட்டுமொத்த உலகத் தமிழனத்திற்கும் ஒருபேரிழப்பாகும். அன்னாரது
இழப்பால் ; சுவாமிவிபுலாநந்தர் கலைமன்றம் - கனடா மிகவும் வேதனையடைவதுடன்
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி  இவ்வேளையில் அவரது இழப்பால் துயருறும்
அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறிநிற்கின்றது.
அஜந்தா ஞானமுத்து
செயலாளர், சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் கனடா

0 commentaires :

Post a Comment