கடந்த 2004.12.26 ஏற்பட்ட சுனாமிப்பேரலையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப்பிதேசத்தில் உள்ள கதிரவெளிக் கிராமத்தில் பேரலையின்போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும்வகையில் அவர்களின் உற்றார் உறவினர்களும் சேர்ந்து மற்றும் கதிரவெளிக்கிராம ஏற்பாட்டுக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பிரதேசத்தின் செயலாளருமான செல்வி.ராகுலநாயகி அவர்களும் மற்றும் கிராமசேகர் உத்தியோகத்தர்களும் பிரதேசத்தின் இராணுவப்பொறுப்பதிகரியும் அத்துடன் சமுர்த்தி உத்தியோத்தர்களும் கிராமத்தின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வு சரியாக பிரதேச செயலாளரின் முதலாவது நினைவுச்சுடர் 9.15மணிக்கு ஏற்றப்பட்டு அத்தோடு பேரலையில் காலம்சென்றவர்களின் உறவினர்களாலும் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தபட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசினரின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தினம் அனுஸ்டிப்பு.
மட் நாவலடி, டச்பார், திருச்செந்தூர் பகுதிகளில் இடம் பெற்ற சுனாமி 6ம் ஆண்டு நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், கிருஸ்ணானந்த ராஜா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் கைலேஸ்வரராஜா ஆகியோர் ஈகைச்சுடர் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்துவதனையும் இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக மரக்கன்று நடுவதனையும் அங்கு நடைபெற்ற நினைவுநாள் பூஜையில் கலந்து கொண்ட மக்களையும் படத்தில் காணலாம்.
மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தில் உயிர்நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை
மட்டக்களப்பு மாவட்டம் , இலங்கை, உலகளவில் சுனாமிப் பேரலை அனர்த்தில் கடந்த 2004ஆம்ஆண்டு உயிர்நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையுடனான யாகம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை நடைபெற்றது.
மாவட்டத்தின் பிரதான நிகழ்வாகவும் அமைந்த இந் நிகழ்வு நாவலடியிலுள்ள சுனாமி நினைவுத் தூபி அருகில் காலை முதல் நடைபெற்றது.
நாவலடி சுனாமி நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை யாக, திதியுடன் கூடிய நினைவு விசேட பிரார்த்தனை சோதிடர் சிவ ஸ்ரீ சி.சா.ராமதாஸ.; குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இவருடன் சிவஸ்ரீ முரசொலி மாறக் சிவஸ்ரீ குருக்கள், சிவஸ்ரீ விக்கேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீரங்க சர்மா குருக்கள், சிவஸ்ரீ பரமானந்த குருக்கள், சிவஸ்ரீ பகீரத சர்மா குருக்கள், சிவஸ்ரீ தயாபர குருக்கள், சிவஸ்ரீ அனோஜ சர்மா குருக்கள் ஆகியோரும் கிரியைகளை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பில் அதிகமான மக்கள் பலியான நாவலடியில் வருடா வருடம் பிதிர் கடமை நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இவ்வருடமும் மட்டக்களப்பில் உயிரிழந்த, இலங்கையில், உலகத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையுமு; நடைபெற்றது.
இப் பிரார்த்தனையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது இடங்களில் பிதிர்கடமைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் கலந்து கொள்வது வழக்கமாகும்.
இம் முறை இந்நிகழ்வில், மட்டக்களப்பின் பல இடங்களிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொண்டு தமது உறவனர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.
இதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், ஏ.கிருஷ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன், ரி.எம்.வி.பி.கடசியின் செயலாளர் நாயகம் கைலேஸ்வரராஜா ஆகியோரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாவலடியில் மாத்திரம் 925 பேர் சுனாமியில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை மட்டக்களப்பு நகரில் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுனாமிணில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுப்பிரார்த்தனைகள் நடைபெற்றன.
அந்தவகையில், திருச்செந்தூர், டச்பார், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டு.திர மலை மறைமாவட்ட துணை ஆயர் யோசப்பொன்னையா ஆண்டகை, அருட்திரு. யோசப் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை நடத்தினர்.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுனாமி நினைவுப் பிரார்த்தனைகள், மத அனுஸ்டானங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment