ஆனையிறவு உப்பளங்களின் உப்பு உற்பத்திகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 2000 பேருக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க முடியும் என அரசாங்கம் தெரிவிக்கிறது.
இதற்கு ஏதுவாக இப்பகுதியில் சுமார் 50 ஹெக்டயருக்கும் அதிகமான நிலப்பரப்பில் புதையுண்டுள்ள கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அடுத்த சில வாரங்களில் முற்றாக அகற்றிவிட முடியும் எனவும் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் சிறந்த நேர்மையான நிர்வாகத்தின் கீழ் அப்பகுதியில் புதையுண்டி ருந்த கண்ணிவெடிகளில் 70 வீதமானவை இராணுவத்தினரால் அகற்றப்பட்டிருப் பதனால், தற்போது, ஏறத்தாழ 95 சதவீதமான உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த வசிப்பிடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது ஆனையிறவு உப்பள ங்கள் அமைந்துள்ள பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி களை பாதுகாப்பு செயலாளர் அதி வேகமாக மேற்கொள்ளுமாறு கண்ணி வெடிகளை அகற்றும் அரசாங்க அமைப்புக்களுக்கும், அதன் பங் காளி அமைப்புக்களுக்கும் உத்தரவுக ளைப் பிறப்பித்துள்ளார்.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவி ருத்தி அமைச்சின் வேண்டுகோளு க்கு அமைய, இப்போது முடுக்கி விடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியின் மூலம், இப் பிரதேசத்தில் 50 ஹெக்டயருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் புதையு ண்டு இருந்த கண்ணிவெடிகள் அடுத்த சில வாரங்களில் முற்றாக அகற்றப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
ஆனையிறவு பிரதேசத்தில் கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்படு வதன் மூலம், இப்பகுதியில் மீண் டும் கைத்தொழில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் உப்பு உற்பத்தியை அடுத்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கவும் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 2,000 ற்கும் அதிகமானோ ருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை யும் பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
தற்போது இலங்கையில் புத்தளம், பாலாவி, அம்பாந்தோட்டை பிர தேசங்களிலேயே உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. உப்பு உற் பத்தி தொழிலில் சுமார் 25 முதல் 30 ஆயிரம் பேர் வரை வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். சில தனியார் நிறுவனங்களும் உப்பு உற்பத்தியில் தற்போது ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனையிறவை அண்டியுள்ள பிர தேசங்களில் இருக்கும் உப்பளங்கள் யுத்தத்திற்கு முன்னர் நாட்டின் உப்புத் தேவையில் 30 சதவீதத்தை ஈடுசெய்யக் கூடியதாக இருந்தன. ஆயினும், கடந்த 25 வருட கால மாக இப்பகுதியில் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனையிறவு உப்பளங்கள் பழுத டைந்து சீர்குலைந்த நிலையில் இப் போது இருக்கின்றன.
இப்பிரதேசத்தில் கண்ணிவெடி களை அகற்றும் பணிகள் முற்றாகப் பூர்த்தி செய்யப்பட்டவுடன் அரசா ங்கம் இங்குள்ள பழைய உப்பளங் களில் திருத்த வேலைகளை ஆரம் பித்து, அப்பணிகளை கூடிய விரை வில் முடித்து விடுவதற்கும் திட்ட ங்களை வகுத்து, அதற்கான நிதியை யும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த உப்பளங்களுக்குத் தேவை யான நீரை விநியோகிப்பதற்கும் அப்போது பாதுகாப்பு அமைச்சு, தேசிய நீர் விநியோக வடிகால் அமைப்பு சபையுடன் பேசி, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் விளைவாக ஆனையிறவு பிரதேச உப்பளங்கள் மூலம் வீட்டுத் தேவைக்கும் கைத்தொழிற்சாலை களின் தேவைக்குமாக 15,000 முதல் 20,000 மெட்ரிக்தொன், நிறையுடைய உப்பை வருடாந்தம் உற்பத்தி செய் யக் கூடிய வசதிகள் ஏற்படும்.
தற்போது நாட்டு மக்களின் உண வுப் பயன்பாட்டுக்காக மாத்திரம் 1 இலட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு தேவைப்படுகிறது.
இந்தளவு உப்பை உள்ளூரில் உற்பத்தி செய்ய முடியாது இருப்ப தனால் இதில் 40 சதவீதமான உப்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கென அரசாங்கம் வருடா வருடம் 370 மில்லியன் ரூபாவை செலவிட்டு வருகிறது.
ஆனை யிறவு உப்பளங்கள் உப்பை தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உப்பு உற்பத்தியில் இலங்கை தன்னி றைவை அடைய முடியும் என்ப தனால் உப்பு இறக்குமதியை அரசாங்கம் முற்றாக நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
0 commentaires :
Post a Comment