12/06/2010

195மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்;படவுள்ள கிழக்கு மாகாணத்திலே முதற்தர நூலகம்

கிழக்கு மாகாணத்தில் பலதசாப்த காலமாக எந்தவொரு பாரிய பொதுக் கட்டிடடங்களும் மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அயராத முயற்சியின் பயனாக மட்டக்களப்பு நகரிலே மிகவும் நவீனத்துவம் நிறைந்த முறையில் மிகப்பெரும் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரைக் கோடி ரூபாய் செலவில் மேற்படி பஸ் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது நிறைவுறும் தறுவாயில் இருக்கிறது. இதனை மட்டக்களப்பின் அபிவிருத்தியில் ஓர் பாரிய மைல்கல் என்றே குறிப்பிட வேண்டும்.
அதேபோல் மட்டக்களப்பு நகரிலே பல்வேறு காலங்களாக சகல வசதிகளுடன் கூடிய நவீன முறையிலான பொதுவான ஓர் நூலகம் அமைந்திருக்கவில்லை. இக் குறையினை தனது ஆட்சியில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது தற்துணிவோடு இன்று மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் நட்டு வைத்தார். சுமார் 195மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்;படவுள்ள மேற்படி நூலகக் கட்டிடமானது கிழக்கு மாகாணத்திலே முதற்தரமான ஓர் நூலகமாகத் திகழ வேண்டும் என்பது முதல்வர் சந்திரகாந்தனின் கனவாகும். இது 2012ம் ஆண்டு மக்களது பாவனைக்கு விடப்பட வேண்டும் அதற்கிடையில் முற்று முழுதாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். அத்தோடு எமது நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இதாற்கான பூரண ஓத்துழைப்பை வழங்குவார் என முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். இப்பாரிய தற்துணிவான முதல்வரின் முயற்சியானது மட்டக்களப்பின் அபிவிருத்தியில் இரண்டாவது மைல்கல் என்றால் அது மிகையாகாது.
மட்டக்களப்பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன் மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை மாகாண கட்டிடங்கள் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி அ. வேல்;மாணிக்கம், முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க. பத்மராஜா அகியோர் கலந்து கொண்டார்கள்._mg_7830-1
_mg_7844
_mg_7877

0 commentaires :

Post a Comment