12/13/2010

கொசோவோவில் முதற் தடவையாக நேற்று பொதுத் தேர்தல் 120 எம்.பி.க்களை தெரிவு செய்ய 70 ஆயிரம் பேர்

கொசோவோவில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முதன் முறையாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற்றது.
120 எம். பிக்களை தெரிவு செய்ய மொத்தம் 70 ஆயிரம் பேர் வாக்களி த்தனர். 2008 ம் ஆண்டு சேர்பியாவி லிருந்து கொசோவோ பிரிந்து சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டபின் நடை பெறும் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். மொத்தமாக வுள்ள 16 இலட்சம் மக்களில் (1,6 மில்லியன்) 70 ஆயிரம் பேரே வாக்க ளிக்கத் தகுதி பெற்றனர்.
மொத்தம் 2280 வாக்களிப்பு நிலைய ங்கள் 37 மாநகர சபைகளில் வைக்கப் பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 3.30 மணிக்கு முடிவடைந்தது. பாதுகாப் புகள் கடுமையாக்கப்பட்டன. குறிப்பி டக் கூடிய வன்முறைகள் எதுவும் இடம் பெறவில்லை. இரண்டு பிர தான வேட்பாளரிடையே கடுமையான போட்டிகள் நிலவின.
எனவே நிலை மைகள் கடுமையாக இருந்தன. நாளை முடிவுகளை எதிர்பார்க்க முடியும் என கூறப்பட்டாலும் உத்தியோகப்பற்றற்ற முடிவுகள் நேற்றிரவு வெளியாக ஆரம்பித்தன.
கொசோவோ ஜனநாயகக் கட்சி (பி. டி. கே.) க்கு முன்னாள் கொரில்லா தலைவரும் இடைக்காலப் பிரதமராகவு மிருந்த ஹாkம்தாகி தலைமை தாங்கி களத்தில் குதித்தார். கொசோவோ ஜனநாயக முன்னணிக்கு (எல். டி. கே.) இஸா முஸ்தபா தலைமை யேற்று தேர்தலில் குதித்தார். இவர் மாநகர சபையின் மேயருமாவார். ஊழலை ஒழிப்பது.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற கோஷங்களை இவர் முன் வைத்தார். சம்பள உயர்வு, வளமிக்க வரவு, செலவுத்திட்டம் என்பற்றை முன் வ¨த்து ஹாஸிம்தாகி பிரச்சாரம் செய்தார். அல்பானிய இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகவே கொசோவோ பிரிந்து சென்றது. கடந்த செம்டம்பரில் தேர்தலுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட் போதும் அவை வெற்றியளிக்கவில்லை.
நாங்கள் மிக ஆவலோடு சென்று வாக்களித் தோம். பொழுது புலரு முன்னரே வாக்களிக்கச் சென்றுவிட்டோம்.
இவ்வாறு வாக்களிக்கச் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

0 commentaires :

Post a Comment