12/31/2010

'விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்"- அலரி மாளிகையில் புத்தக வெளியீடு

விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது. 


»»  (மேலும்)

சிறுமியை தாயாக்கிய குற்றத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் சிறுமி ஒருவரை கர்ப்பிணியாக்கினார் என்ற சந்தேகத்தில் 64வயதுடைய      முன்னாள் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இது தொடர்பில் தெரியவருவதாவது,
 
தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த குறித்த சிறுமி செட்டிபாளையத்தில் உள்ள சிறுமியர் இல்லத்தில் இருந்து செட்டிபாளையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த 10ஆம் மாதம் இவர் குழப்படி அதிகம் என்ற காரணத்தினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
 
அதன் பின்னர் அவர் தும்பங்கேணியில் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இவருடைய வயிறு பெரிதாக இருப்பது கண்டு வைத்தியரிடம் சோதனை நடத்திய போது இவர் கர்ப்பிணி என்பது தெரிய  வந்துள்ளது.
 
அதனைத் தோடர்டந்து சிறுமியிடம் விசாரித்த வேளை குறித்த  சிறுமியர்           இல்லத்துக்கு அருகில்         இருந்த        தோட்டத்தில்              இருந்துவந்த              குறித்த          நபர் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்டவர் நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார
»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், டென்மார்க்கில் வாழும் புலன் பெயர்ந்த எலிகளும்


Children  6
கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கடந்த (21.12.2010)ந் திகதியன்று டென்மார்க் வந்திருந்தார். அவரின் வருகைபற்றி அறிந்திருந்த டென்மார்கில் வாழும் புலன் பெயர் எலிகள் கூட்டமொன்று அவர் (சந்திரகாந்தன்) ஒரு பயங்கரவாதியெனவும் அவரை கைதுசெய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமெனவும் தமது வழமையான நடவடிக்கைகளில் இறங்கினர். அதற்கமைய டென்மார்க்கின் உள்துறை அமைச்சு, வெளியுறவு அமைச்சு போன்ற நிர்வாகத்தினருக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களையும், (E,Mail) மற்றும் (Fax) போன்றவற்றினையும் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அனுப்பிக்கொண்டிருந்தனர். கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரித்தானியாவில் அமைந்துள்ள பிரபலம்வாய்ந்த பல்கலைக்கழகமான ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் விசேட உரைநிகழ்த்துவதற்காக அங்கு கல்விபயிலும் மாணவர்களின் அழைப்பின்பேரில் வருகைதந்தபோது அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை லண்டனில் வசிக்கும் பெருச்சாளிகள் சில மேற்கொண்டமையினால் பல்கலையில் உரையாற்றும் நிகழ்வு இடம்பெறாது நிறுத்தப்பட்டது.
PeruchshliElikal
அதே பாணியில் டென்மார்க்கிலும் தங்களது அடாவடித்தனத்தினை அரங்கேற்ற முடியுமென கனவு கண்ட டென்மார்க்கில் வசிக்கும் புலன் பெயர்ந்த எலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் புஸ்வாணமாகியது. முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் அவர்களும், அவருடன் இணைந்து செயற்படும் மனிதநேயவாதிகளும் திட்டமிட்டபடி அவரது விஜயம் திருப்திகரமான முறையில் நிறைவேற்றப்பட்டது.
டென்மார்க்கை தளமாகக்கொண்ட குளோபல் மெடிக்கல் எயிட் என்னும் நிறுவனத்துடன் இலங்கைக்கு (விசேடமாக கிழக்கு, மற்றும் வடக்கு) மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களின் வைத்திய தேவைகளை (மருந்துப் பொருட்கள் பூர்த்தி ) செய்வதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதற்கமைய மேற்படி பிரதேச மக்களினதும் இலங்கையில் வாழும் ஏனைய மக்களினதும் தேவைகளை முடிந்தவரை நிறைவு செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உடன்படிக்கை கைச்சாத்தாவதற்கு முன்னர் கடந்த நவம்பர் மாதம் இலங்கை ரூபா (66.மில்லியன்) பெறுமதியான மருந்துப்பொருட்கள் அனுப்பப்பட்டு அவற்றினை கிழக்கு மாகாண நிர்வாகத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.
தொடர்ந்து அனுப்பப்படும் மருந்துப் பொருட்களை கிழக்கு மாகாண நிர்வாகம் பொறுப்பேற்று மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகளை நேரடியாக கண்காணிப்புச்செய்து பகிர்ந்தளிப்பதற்கான இணக்கப்பாடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய டென்மார்க்கில் ஒரு வாரகாலமாக தங்கியிருந்த முதலமைச்சர் நேற்று முன்தினம் (28.12.2010) தாயகம் திரும்பினார்.
குமாரதுரை –ஆசிரியர் மஹாவலி.கொம்
»»  (மேலும்)

கிழக்கில் எங்கும் வெள்ளக் காடு: மூன்று இலட்சம் மக்கள் பாதிப்பு

அடைமழையினால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்: வீடுகள், வயல்கள், வீதிகள் வெள்ளத்தில்
கிழக்கு மாகாணத்தில் பல தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பார்க்கும் இடங்களெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுவாசல்களை இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளன. மக்கள் குடியிருப்புகள், வீதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இனிமேலும் தொடருமானால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமென அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் பகல் 12 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35847 ஆகும். இவர்கள் 81068 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த பாதிப்புத்தொகை நேற்று மாலை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
இருபதுக்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
1704 குடும்பங்களைச் சேர்ந்த 6408 பேர் நலன்புரி நிலையங்களிலும், 10829 குடும்பங்களைச் சேர்ந்த 41702 பேர் நண்பர்கள், உறவினர் கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மட் டக்களப்பு மாவட்டத்தின் அனைத் துக் குளங்களும் நிரம்பி வழிவதால் குளங்களை அண்டிய பிரதேசங்கள் வாவிக்கரையோரங்களை அண்மித்த கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியு ள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை அபாயகர மாகவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அக் கிராமங்க ளுக்கான போக்குவரத்தை நடத்த கடற் படையினரின் உத வியை நாடியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
நலன்புரி நிலையங்களில் தங்கியு ள்ளவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதுடன் சகல பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டு வருவதாகவும், அரச சார்பற்ற நிறுவ னங்களும், இவர்களுக்கு உதவி வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிர தான நீர்ப்பாசனக் குளங்களான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள், நவகிரி, உறுகாமம், வாக னேரி போன்ற குளங்களின் வான் கதவுகளும், நேற்றுக்காலை திறந்து விடப்பட்டதாக பிராந்திய நீர்ப் பாசன பணிப்பாளர் எஸ். மோகன் ராஜ் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டார்.
நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 145.6 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு மாவ ட்டத்தில் பெய்துள்ளதாக மட்டக்க ளப்பு வானிலை அவதான நிலை யம் தெரிவித்தது.
இதேவேளை அம்பாறை மாவட் டத்தில் மழை சற்றுத் தணித்திருந்த போதிலும் நேற்று முன்தினம் முதல் அடைமழை பொழிகிறது. இம் மாவட்டத்திலும் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தாழ் நிலப் பிரதேச மக்கள் மேட்டு நிலப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவ துடன் தமது உறவினர்களில் வீடுக ளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
கல்முனை தமிழ் பிரிவு சாய்ந் தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் பிரிவு கள் அடைமழை காரணமாக வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகளும் மழை வெள்ளத் தினால் சூழப்பட்டுள்ளன. தொடர்ச் சியாக மழை பெய்யுமானால் திங்கட்கிழமை முதலாம் தவணை நடவடிக்கைகளுக்காக பாடசாலை களை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என அதிபர்கள் தெரிவிக் கின்றனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள சொறிக்கல் முனை கிராமத்தைச் சேர்ந்த மயான வீதியில் உள்ள இரு வீடுகள் இடி ந்து விழுந்துள்ளன. எனினும் உயி ரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.
வயல் நிலங்கள் யாவும் வெள்ள க்காடாக காட்சியளிக்கின்றன. குட லைப் பருவத்தில் உள்ள வயல் நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதனால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருமலையில் போக்குவரத்து துண்டிப்பு
அடைமழை காரணமாக திருகோ ணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திற்கான கிண்ணியா ஊடான போக்குவரத்தும், திருகோணமலை ஊடான கடற் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதனால் மக்கள் பிரயாணம் செய்ய முடியாத நிலை யில் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, பாலமுனை, பூநொச்சி முனை, கல்லடி போன்ற பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேறி பாடசாலைகளிலும் பள்ளிவாயல்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ் கிக் கிடக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் இன் னும் சில வாரங்களில் அறுவடை க்காக காத்திருந்த பல்லாயிரக்கணக் கான ஏக்கரில் செய்கை பண்ணப் பட்ட வேளாண்மைப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய் ந்தமருது, கல்முனைக்குடி, கல் முனை, மருதமுனை நற்பிட்டி முனை, உகனை போன்ற பிரதேசங் களில் உள்ள பல நூற்றுக்கணக்கான மக்களின் குடியிருப்புகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.
பிரதான வீதிகள் மற்றும் கிராம ப்புற வீதிகள் பல நீரில் மூழ்கியு ள்ளதால் போக்குவரத்துக்கள் ஸ்தம் பிதம் அடைந்துள்ளன.
தொழிலாளர்கள் வருமானம் இழப்பு
மீனவர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். -கிxஞி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உலருணவு அடங்கிய நிவாரணப் பொதிகளை உடனடி யாக வழங்க மீள்குடியேற்ற அமை ச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ளப் பிரதேசங்களுக்குச் சென்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
மின்னல் தாக்கி பெண் காயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு ஒரு பெண் பலியாகி உள்ளதுடன் பலர் காயத்துக்குள்ளாகியுள்ளனர்.
திருப்பெருந்துறையைச் சேர்ந்த திருமதி நேசத்துறை வயது 50 என்ற பெண்மணியே பலியாகியுள்ளார்.
மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி, சிகரம், நாவற்குடா, கல்லடி, பூநொச்சிமுனை, முகத்து வாரம், செங்கலடி, களுவாஞ்சிகுடி, குருக்கள் மடம், வாழைச்சேனை, ஏறாவூர், சித்தாண்டி ஆகிய பகுதிகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற் பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதா கவும் சுமார் ஐயாயிரத்திற்கு மேற் பட்டோர் இடம்பெயர்ந்து ள்ளதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
ஏறாவூர் நகர பிரதேசம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.
போக்குவரத்துச் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
வாகரை, கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர்ப் பற்று, ஏறாவூர் நகர் காத்தான்குடி மற்றும் வவுணதீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நூற்றுக்கண க்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
»»  (மேலும்)

வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர், ஆலயகுரு கொலைகள்: அரசு மீது அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி உரிமைகளுக்கான வலையமைப்பின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம்

தனது கருத்தை வெளிப்படுத்தியமை காரணமாக யாழ். வலிகாமம் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை என்ற தலைப்பில் உரிமைகளுக்கான வலைய மைப்பு (னிலீtworking ஜீor ஞிights) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை முற் றிலும் தவறானது என்று அரசாங்க தக வல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாய கம் ஆரியரட்ன அத்துகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கையொ ன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது யாழ்ப் பாணத்தில் உள்ள வலிகாமம் வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும் அந்த அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.
அறிக்கையின்படி பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம், கடந்த 26ஆம் திகதி 2004இல் இடம்பெற்ற சுனாமியை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட வேண்டுமென்று கூறிய சுற்று நிருபத்தை பகிரங்கமாக விமர்சித்தமை காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான எந்தவொரு சுற்றுநிருபமும் எந்தவொரு அரசாங்க அதிகார மையத்தினாலும் விடுக்கப்படவில்லை. எனவே அவ்வாறான சுற்று நிருபத்தை உயிரிழந்தவர் விமர்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்றிருக்க முடியாது.
குறிப்பிட்ட அமைப்பின் அறிக்கையின்படி மேற்படி கொலை சம்பவம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றதாக தமிழ் இணைய தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ள போதும் இவ்வமைப்பு கூறுவது போல் பிறக்குற்றச்சாட்டுகள் இடம்பெற்றில்லை. இதேவேளை சங்கானை முருகமூர்த்தி கோவிலின் பிரதான குருக்கள் நித்தியானந்த சர்மா கடந்த 15ஆம் திகதி கொல்லப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக குறித்த வலையமைப்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இதுவும் அடிப்படையற்றது. இதனையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் கொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை சங்கானை முருகமூர்த்தி கோயிலின் பிரதான குருக்க ளின் கொலை தொடர்பாக பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேற்படி இரு கொலை சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் தலையீடு செய்யும் ஒரு முயற்சியாகவே இந்த வலையமைப்பின் அறிக்கை தென்படுகிறது. மேற்படி துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு தேவயற்ற அரசியல் சாயம் பூசும் வகையிலும் இதன் மூலம் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் அந்த முயற்சி அமைகிறது.
மேற்படி அமைப்பின் செயற்பாட்டு குழுவில் ஊடகவியலாளர் உள்ளிட்ட பல இலங்கையர்கள் உள்ளனர்.
இவர்கள் தற்போது சுயமான விருப்பத்தின் பேரில் மேற்கத்திய நாடுகளில் தாய்நாட்டை விட்டு வெளியேறியோர் என்று தம்மை கூறிக் கொண்டு வருபவர்களாவர். இலங்கையின் ஊடக மற்றும் மனித உரிமைக்காக வெளியில் இருந்து செயற்படும் வலையமைப்பு என்று இவர்கள் தம்மைக் குறிப்பிடுகின்றனர். மேற்படி அமைப்பு விடுக்கும் தவறான தகவல் மூலம் இலங்கையில் ஊடக மற்றும் மனித உரிமைகளுக்கான காரணங்களை கொச்சைப்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்
»»  (மேலும்)

12/30/2010

An Interview with The Chief Minister Sivanesathurai Chanthirakanthan

»»  (மேலும்)

சுதந்திர தெற்கு சூடானை உருவாக்க உதவுவேன் என்கிறார் ஒமர் அல்பஷிர்

தெற்கு சூடானுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்க உதவப்போவதாக சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தெரிவித்தார். சூடானின் தெற்குப் பிராந்தியத்துக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க ஜனவரி 09 ஆம் திகதி சர்வசன வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தொலைக்காட்சியில் உரையாற்றினார். சூடானின் தென்பகுதியைக் கட்டியெழுப்ப நான் உதவி செய்வேன்.
தென்பகுதி மக்களுக்கு சகோதர நாடொன்றை உருவாக்குவதில் எமக்கு ஆட்சேபனையில்லை. அங்கு பிரச்சினையிருந்தால் எமக்கும் பிரச்சினையே. இதனால் உறுதியான நட்பு நாடொன்றை உருவாக்க வேண்டும்.
இதற்கு மக்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு மக்கள் வாக்களித்தால் சுதந்திரமான தெற்கு சூடானை உருவாக்கியவர் என்ற முதற் பெயருடையவராக நானே இருப்பேன். இப்போது பந்து மக்கள் வசம் உள்ளதென்றார்.

»»  (மேலும்)

மார்ச்சில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

* 21 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 268 பிரதேச சபைகளுக்கு தேர்தல்.
* ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
* அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்.
நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் கலைக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யவென எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் நடாத்தப் படும் எனவும் அமைச்சர் கூறினார்.
உத்தேச வட்டார முறைப்படி தேர்தலை நடாத்துவதற்குக் காலம் போதாதிருப்பதால் தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைப்படியே தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவங்களை கட்சியின் தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை உத்தேச வட்டார முறைப்படி நடாத்துவதாயின் அதற்கு எல்லைகளை நிர்ணயிக்கவென குறைந்தது இரு வருடங்களாவது காலம் எடுக்கும். ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் கடந்த வருடம் முடிவுற்ற போதிலும் ஒரு வருட காலம் நீடிக்கப்பட்டது. அதனால் மேலும் காலத்தை நீடிக்காது தேர்தலை நடாத்துவதற்கே திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
தற்போது நாட்டில் 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள், 270 பிரதேச சபைகள் உள்ளன. இதேவேளை ஹம்பாந்தோட்டை நகர சபையும், தம்புள்ள மற்றும் கடுவெல பிரதேச சபைகளும் மாநகர சபைகளாக தர முயர்த்தப்பட்டிருப்பதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

»»  (மேலும்)

12/29/2010

7 பில்லியனை நெருங்கும் உலக சனத்தொகை தாங்குமா பூமி

வருடாந்தம் 80 மில்லியனினால் உலக சனத்தொகை அதிகரிப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேகத்தின்படி அடுத்த வருட நடுப்பகுதியாகும் போது உலக சனத்தொகை 7 பில்லியனை தாண்டிவிடும் என்கிறது ஐ. நா. புள்ளிவிபரங்கள்.
சனத்தொகை அதிகரிப்பின் சுமையை உலகம் ஏற்கெனவே உணரத் தொடங்கிவி-ட்டது. ஒருபக்கம் நீர் வளம் குறைந்து வருகிறது. மீள் அறுவடை குறைக்கிறது. தினமும் ஒரு பில்லியன் மக்கள் பட்டினியில் வாடுகின்றனர்.
உணவுப் பற்றாக்குறை, யுத்தம், நோய்கள் என்பன சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டாலும் அது அவ்வாறு அமையவில்லை. போசாக்கு மற்றும் சுகாதார மேம்பாட்டினால் மனிதனின் ஆயுள் எதிர்பார்ப்பு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
சிறுவர் மரண வீதமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணிப்பீடுகள் கூறுகின்றன. 18வது நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் 20 ஆவது நூற்றாண்டில் ஆசியாவிலும் பெண் ஒருவருக்கு 6 பிள்ளைகள் வீதம் இருந்தன. ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற அடிப்படையிலே பிள்ளைகள் இருக்கின்றன.
இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு 2.6 என்ற அடிப்படையில் பிள்ளைகள் காணப்படுவதோடு ராஜஸ்தான் மத்திய பிரதேசம். பீகார், உத்தர பிரதேஷ் போன்ற பகுதிகளில் ஒரு பெண்ணுக்கு 4 பிள்ளைகள் என்ற அளவில் சனத்தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்பொழுது அதிக சனத்தொகை கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் உள்ளது. 1966ல் இந்திய சனத்தொகை 50 இலட்சம் மட்டுமே. இன்று அந்த நாட்டு சனத்தொகை 1.2 பில்லியனாக உள்ளது. சனத்தொகை குறைந்த பாடில்லை. 2050ல் இந்திய சனத் தொகை 1.6 பில்லியனாகும் என நம்பப்படுகிறது. 2030ல் இந்திய சனத்தொகை சீனாவை முந்திவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2045ல் உலக சனத்தொகை 9 பில்லியனாக உயரும் என்கிறது ஐ. நா. ஆனால் 2050ல் சனத்தொகை 10.5 பில்லியன் ஆகவோ 8 பில்லியனாகவோ மாறலாம். பெண்ணொருவருக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்தாலே சனத்தொகை 8 மில்லியனாக குறைய வாய்ப்பு இருக்கிறதாம்.
தற்பொழுது குழந்தை பெறக்கூடிய வயதுடைய பெண்கள் 1.8 பில்லியன் வாழ்கின்றனராம். இப்படியே போனால் பூமி தாங்காது. இப்பொழுதே வேற்றுக்கிரகங் களில் இடம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியதுதான். 
»»  (மேலும்)

இளைஞர் பரிசளிப்பு விழா 2010

 dsc04948    மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் பரிசளிப்பு விழா 2010 ற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும்; மகாணப் பணிப்பாளர்  P.தவராஜா, மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்கப் படுவதையும். மாகாணசபை உறுப்பினர் உரைநிகழ்துவதையும்; பரிசில்களை வழங்கிவைப்பதையும். கலைநிகழ்சியில் பங்கு பற்றிய ஒரு பகுதி இளைஞர்களையும் படத்தில் காணலாம்.
»»  (மேலும்)

வாகரை குளங்களில் 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் _

கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சினால் வாகரை குளங்களில் 40 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. 

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப பொருளாதார அமைச்சின் வழிகாட்டலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெக்டெப் திட்ட த்தினால் இந்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நான்கு குளங்களில் 1 இலட்சத்து 20 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. 6 மாதங்களில் இவற்றை அறுவடை செய்யமுடியுமென மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி அதிகாரி ஜெயரூபன் தெரிவித்தார்
»»  (மேலும்)

ஸ்தான்புல் பேச்சுவார்த்தை ஈரான் மேற்குலக முரண்பாடுகளை களையும் ஈரான் உயரதிகாரிகள் டமஸ்கஸில் தெரிவிப்பு

ஸ்தான்புலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை கள் நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வாய் அமையுமென ஈரானின் யுரேனியம் தொடர்பான பேச்சாளர் ஜாலிலி தெரிவித்தார். சிரியாவின் ஜனாதிபதி பஷிர் அல் அஸாத்துடன் தலைநகர் டமஸ்கஸில் ஈரான் உயரதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் மெஹ்ராபி ஜாலிலி ஆகியோர் ஈரான் சார்பாகக் கலந்துகொண்டனர்.
யுரேனியம் செறிவூட்டல் அணு விவகாரம் அனைத்துக்கும் இவர்களே பொறுப்பாயுள்ளனர். இவ் விருவரும் கூட்டாக இணைந்து நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்ததாவது, ஜனவரி 05ல் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் மேற்குல கிற்கும் ஈரானுக்குமிடையிலான நீண்டகால முரண்பாடுகளை முடித்துவைக்கும்.
இருதரப்பு நலன்களையும் பாதுகாக்கும் ஆனால் அவசரமாக ஐ.நா. ஈரான் மீது நான்காவது தடவையாகவும் பொருளாதாரத் தடை விதித்தமை ஆரோக்கிய மான முடிவல்ல எனத் தெரி வித்தனர்.
கூட்டுப் பொறுப் பையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த இந்தப் பேச்சுவார்த் தையை மேற்கு நாடுகள் பாவிக்க வேண்டுமென ஈரான் ஜனாதிபதி மஃமுத் அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார். டிசம் பர் மாதமும் இவ்வாறான பேச்சுவார்த்தை நடந்தது. ஜனவரியில் நடைபெறவுள்ளது இரண்டாவது பேச்சுவார்த்தை யென்பது குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்கா - பிரிட்டன் பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜேர்மன் என்பன இதில் பங்கேற்கும்.

»»  (மேலும்)

கடலை ரசித்தபடியே மீண்டும் தமிழகத்துக்கு கப்பல் பயணம்

இலங்கைக்கும், இந்தியாவிற்குமான கடல் வழிப் போக்குவரத்து என்பது இன்று நேற்றைக்கு ஏற்பட்டதல்ல. புராண காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையில் கடல் வழி போக்குவரத்து நிலவி வந்துள்ளது.
ராமாயண காலத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து தான், வானரப் படைகள் அமைத்த பாலத்தின் வழியாக ராமன் இலங்கை சென்றதாக புராணம் கூறுகிறது. பெரும் கப்பற்படையை கொண்டிருந்த சோழ மன்னர்கள், கடல் வழியாக இலங்கைக்கு படையெடுத்துச் சென்றனர் என்று வரலாறு எடுத்துரைக்கிறது.
இந்த கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தின் போதும் இந்தியா- இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையே 1914 ம் ஆண்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. சரியாக, 50 ஆண்டுகள் நடந்து வந்த இந்த கடல் வழிப் போக்குவரத்து, 1964ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
கடந்த 1964ம் ஆண்டு வீசிய புயலுக்கு முன்வரை சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு ‘இந்தோ- சிலோன் போட் மெயில்’ என்ற பெயரில் ஒரு ரயில் இயங்கி வந்தது. எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்து, பின் தனுஷ்கோடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று வந்தனர்.
அந்த காலத்தில், தெற்கு ரயில்வே நிர்வாகமே தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடையே எஸ். எஸ். கோஷன் மற்றும் எஸ். எஸ். எர்வின் என்ற இரண்டு நீராவிக் கப்பல்களை இயக்கியது.
இந்தோ, சிலோன் போட் மெயில் மூலம், தனுஷ்கோடி செல்லும் பயணிகளுக்கு கடவுச்சீட்டு மற்றும் அனுமதி ஆகியவை தனுஷ்கோடி ரயில்வே நிலையத்திலேயே வழங்கப்பட்டன. போட் மெயில் மூலம் தனுஷ்கோடி செல்லும் பயணிகள், தனுஷ்கோடி ரயில்வே நிலையத்தில் இறங்கியதும், அவர்களிடம் குடியுரிமை மற்றும் சுங்கச் சோதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்றனர். இந்த கப்பல் போக்குவரத்தானது தமிழகத்தை சேர்ந்தர்கள் குறைந்த கட்டணத்தில் இலங்கை சென்று வருவதற்கு பேருதவியாக இருந்தது. கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி வங்கக் கடலில், தெற்கு அந்தமான் அருகே ஒரு வலிமையான புயல் சின்னம் உருவாகியது. 19ம் திகதி இந்த புயல் மேலும் வலிமை பெற்று, தெற்கு நோக்கி நகர்ந்தது. 22ம் திகதி இலங்கையின் வவுனியா அருகே, மணிக்கு 250 கி. மீ வேகத்தில் இந்த புயல் கரையை கடந்தது.
இதனால் ராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடியும், புயலின் கோர தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ஆண்டு டிசம்பர் 22, 23ம் திகதிகளில் இப்புயல் தனுஷ்கோடியை பயங்கரமாக தாக்கியது.
22ம் திகதி இரவு 11.55 மணிக்கு பாம்பனில் இருந்து 110 பயணிகளுடனும், ஐந்து ஊழியர்களுடனும் புறப்பட்டு தனுஷ்கோடி நோக்கி வந்துகொண்டிருந்த பாம்பன், தனுஷ்கோடி பயணிகள் ரயில் தனுஷ்கோடி ரயில்வே நிலையத்துக்குள் நுழைய சில நூறு அடிகள் தூரமே இருந்த நிலையில், மிகப் பெரிய ஒரு அலை அதைத் தாக்கியது. இதில் அந்த ரயில் சூறையாடப்பட்டு, அதில் பயணம் செய்த 115 பேரும் இறந்து போயினர். தனுஷ்கோடியைக் கொடூரமாகத் தாக்கிய அந்த புயல், ஒட்டுமொத்த ஊரையே தரைமட்டமாக்கிவிட்டு சென்றது.
இதைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசு தனுஷ்கோடியை ‘மறைந்த நகரம்’ என்று அறிவித்தது. அந்த காலகட்டத்தில் தனுஷ்கோடி அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு பிரசித்தி பெற்ற நகரமாக இருந்தது. ஹோட்டல்கள், புடவை, நகை கடைகள் தர்ம சத்திரங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு நிறுவனங்கள் தனுஷ்கோடிக்கு வந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் சேவை செய்து வந்தன.
ஆனால், 1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி இரவு வீசிய புயல் இந்த குட்டி தீவின் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்து கட்டுமானங்களையும் நாசப்படுத்திவிட்டு சென்ற புயலுக்கு பின் ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
இந்திய கப்பல் கூட்டுத்தாபனம் எம். வி. ராமானுஜம் என்ற கப்பலை இலங்கை- இந்தியா இடையே இயக்கி வந்தது. சிறு வியாபாரிகளுக்கு இந்த கப்பல் போக்குவரத்து பெரும் பயன் அளித்து வந்தது. ‘திரைகட லோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கேற்ப பல்வேறு வகையான வணிகர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் இலங்கை சென்று பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.
இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. ஆனால் இலங்கையில் தீவிரமடைந்த உள்நாட்டு போரினால் இந்த கப்பல் போக்குவரத்தும் 1983ம் ஆண்டில் முடிவிற்கு வந்தது.
ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து நடந்து வந்த காலத்தில் பயணம் மேற்கொண்ட பொள்ளாச்சியை சேர்ந்த முருகேசன் கூறுகையில், “1980ம் ஆண்டு நானும், எனது நண்பர்களும் குடும்பத்துடன் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்டோம்”. திண்டுக்கலில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் மூலம் சென்றடைந்தோம்.
ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன், அங்குள்ள பயணச்சீட்டு கருமபீடத்தில் இலங்கை செல்வதற்கான கப்பல் பயணச்சீட்டு வழங்கப்பட்டது. பயணச்சீடை பெற்றுக்கொண்டவுடன், குடியுரிமை, சுங்கச் சோதனை நடந்தது. நாங்கள் முதல் வகுப்பில் (அப்பர் டெக்) பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை வாங்கியிருந்தோம்.
பயணச்சீட்டின் விலை ரூ. 60 மட்டுமே. கப்பலில் ஏறியதும் 3.30 மணி நேரத்தில் தலைமன்னார் சென்றடைந்தோம். கப்பலில் நல்ல உணவகம் இருந்தது “சைவ, அசைவ உணவுகள் தாராளமாக கிடைத்தன. குடிநீரைத் தவிர மற்றவை விலை கொடுத்து வாங்கினோம். கப்பலின் மேல் தளத்தில் இருந்து கடலை பார்த்து ரசித்தது ஒரு சுகமான அனுபவம். தலைமன்னார் சென்றடைந்ததும்.
அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி, கொழும்பு நகரைச் சென்றடைந்தோம். “இலங்கையின் பல்வேறு நகரங்களை 10 நாட்களுக்கு மேலாக சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கப்பல் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தோம். இந்த பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது என்றார்.
அந்த காலத்தில் இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன் கூறுகையில், “50 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை, மாமா ஆகியோர் இலங்கைக்குச் சென்று தங்க நகைத் தொழில செய்து வந்தனர். அந்தக் காலகட்டத்தில் வெளிநாடு செல்வது என்பது மிகவும் பெரிய விஷயமாக கருதப்பட்டது.
‘அவர்கள் செல்லும் போதும், திரும்பும்போதும் உறவினர்கள் எல்லாரும் சென்று அவர்களை ரயில்வே நிலையத்தில் வழியனுப்புவதும், வரவேற்பதும் வழக்கம். என் தந்தை இலங்கையில் இருந்து வருகிறார் என்றவுடன், நாங்கள் அனைவரும் ரயில்வே நிலையத்துக்குச் சென்று காத்துக்கொண்டிருப்போம். ‘போட் மெயில் ரயிலில் முதல் வகுப்பில் அவர் வந்து இறங்குவார்.
அவரைக் குதிரை வண்டியில் ஏற்றி, வீட்டிற்கு அழைத்து வருவோம். எங்களுடன் அவர் இருக்கும் நேரங்களில் கப்பல் பயணத்தை பற்றி பல்வேறு சுவையான தகவல்களை கூறுவார். ‘ராயிலுக்கு பயணச்சீட்டு எடுத்தாலே, அதில் கப்பலிலும் பயணம் செய்யலாம் என்று அப்போது இருந்தது. பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
தற்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விரும்புபவர்கள் விமானம் மூலம் மட்டுமே செல்ல முடியும். சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து இலங்கைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து கொழும்பு செல்ல சிக்கன வகுப்பில் 7,300 ரூபாயும், உயர் வகுப்பில் 11 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இது ஒரு வழிக்கட்டணமே. சென்றுவர குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், விரைவில் தொடங்கவுள்ள கப்பல் போக்குவரத்தின் மூலம் மிகவும் குறைவான கட்டணத்திலேயே சுற்றுலா பயணிகள் இலங்கை சென்று வரலாம். விமானக் கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு குறைவாகவே கப்பல் கட்டணம் இருக்கும்.
இலங்கை- இந்தியா இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதால், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்து தொடங்க வசதியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1.5 கோடி ரூபா செலவில் பயணிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு அங்கு 400 பேர் வரை அமர சொகுசு இருக்கைகள் போடப்படவுள்ளன. இப்பணிகள் அனைத்தும், இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படுமென, தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவர் சுப்பையா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, துறைமுகத்திற்குள் கிரீன் கேட் மற்றும் புளுகேட் இடைப்பட்ட பகுதியில், 1.5 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே கட்டப்பட்ட கப்பல் பயணிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு, ஒரே நேரத்தில் 300 முதல் 400 பேர் வரை அமரலாம்.
கப்பல் போக்குவரத்து அறைக்கான தளம் அமைக்கும் பணி முடிந்து விட்டது- 15 நாட்களில் கடலோரக் காவல் படை, மத்திய உளவுத்துறை, சுங்கத்துறை, துறைமுக அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு பாதுகாப்பிற்கு எந்த மாதிரியான வசதிகள் செய்துதர வேண்டுமென கேட்கப்பட்டு, அவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் வரும் 31ம் திகதிக்குள் முடிக்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக செயற்பட்டு வருகிறோம். கப்பலில் வரும் பயணிகள் தூத்துக்குடி நகருக்குள் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் அதுபோல, கப்பலில் செல்லும் பயணிகளை ஏற்றிவருவோரின், கார்களை நிறுத்த தனியாக இடமளிக்கப்படும். மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் கூறியுள்ளது போல, மூன்று மாதத்தில் இக்கப்பல் போக்குவரத்தைத் தொடங்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு சுப்பையா கூறினார்.
தூத்துக்குடி- கொழும்பு இடையே 152 கடல்மைல் தூரம் உள்ளது. இங்கிருந்து 12 மணி நேரத்தில் கொழும்பு செல்லலாம். விமானக் கட்டணத்தை விட, கப்பல் கட்டணம் குறைவாகவே இருக்கும். பயணக்கட்டணம் எவ்வளவு, ஒரு கப்பலில் எந்தனை பேர் செல்வர். ஒரு வாரத்திற்கு எத்தனை கப்பல்கள் இயக்கப்படுமென்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
»»  (மேலும்)

12/28/2010

கிரான் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 11 வயது சிறுமி பலி

மட்டக்களப்பு கிரான் தொப்பிகல பகுதியை அண்மித்த ஈராளக்குளம் வேரம் பிரதேச த்தில் வெள்ளத்தில் மூழ்கி 11 வயதுடைய சிறுமியொருவர் மரணமடைந்துள்ளார்.
வேலாயுதம் நந்தினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர். இச்சம்பவம் நேற்று 27ம் திகதி பிற்பகல் நடைபெற்று ள்ளது. இச்சிறுமியின் சகோதரனான அனுடின் (வயது 2 1/2) மலசல கூடக் குழியொன்றில் விழுந்ததையடுத்து அவரைக் காப் பாற்ற முயற்சி செய்த வேளையில் இச்சிறுமி மூழ்கி உயிரிழந்ததாகத் தெரி விக்கப்படுகிறது.
இச்சிறுமியின் தாய் வீட்டுப்பாவ னைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சித்தாண்டிப் பிரதேசத் திற்கு கடந்த ஞாயிறுக்கிழமை வந் துள்ளார்.
இவர் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
போக்கு வரத்து வள்ளமும் பழுத டைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரணமடைந்த சிறுமியின் சடலம் தற்போது சித்தாண்டி பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது
»»  (மேலும்)

இந்திய பாதுகாப்பு செயலர் நேற்று இலங்கை வருகை


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்திருக்கும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இரு நாட்டுக்கும் இடையி லான பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான பேச்சுவார்த் தைகளில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவிருக்கும் அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்திக்கவிருப்பதுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிசையும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

»»  (மேலும்)

12/27/2010

ஆழிப்பேரலை அனர்த்த ஆறாம் ஆண்டு நினைவு தினம் நிகழ்வு 2010

lnithi58yahoo-1
கடந்த 2004.12.26 ஏற்பட்ட சுனாமிப்பேரலையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப்பிதேசத்தில் உள்ள கதிரவெளிக் கிராமத்தில் பேரலையின்போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும்வகையில் அவர்களின் உற்றார் உறவினர்களும் சேர்ந்து மற்றும் கதிரவெளிக்கிராம ஏற்பாட்டுக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
 இதில் பிரதேசத்தின் செயலாளருமான செல்வி.ராகுலநாயகி அவர்களும் மற்றும் கிராமசேகர் உத்தியோகத்தர்களும் பிரதேசத்தின் இராணுவப்பொறுப்பதிகரியும் அத்துடன் சமுர்த்தி உத்தியோத்தர்களும் கிராமத்தின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
 இன்நிகழ்வு சரியாக பிரதேச செயலாளரின் முதலாவது நினைவுச்சுடர் 9.15மணிக்கு ஏற்றப்பட்டு அத்தோடு பேரலையில் காலம்சென்றவர்களின் உறவினர்களாலும் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தபட்டது.lnithi58yahoo-2
lnithi58yahoo-3
»»  (மேலும்)

ஐவரிகோஸ்ட் நிலைமைகள் மோசமடைவதால் வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படும் சாத்தியம் 14 ஆயிரம் பேர் தப்பியோட்டம்

ஐவரிகோஸ்டில் நிலைமைகள் நாளாந்தம் மோசமடைந்து செல்கின்றன. ஐவரிகோஸ்டின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து இதுவரைக்கும் 14 ஆயிரம் பேர் ஸைபீரியாவுக்குத் தப்பி யோடியுள்ளனர்.
அரசியல் வன்முறைகளால் இதுவரைக்கும் இருநூறுக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆபிரிக்க நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஜனாதிபதி கபகோ பதவி விலக வேண்டுமென ஐ. நா. செயலாளர் மற்றும் அமெரிக்க வெளிநாட்டமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளையும் கபகோ நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் மூன்று ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஐவரிகோஸ்ட் புறப்பட்டுள்ளனர். நவம்பர் 28ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கபகோவும் எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இருவரும் வெற்றிக்கு உரிமைகோரினர்.
அரசாங்கத்தின் இராணுவம், ஊடகம் உட்பட இன்னும் முக்கியமானவற்றை இரண்டுவேட்பாளர்களும் கட்டுப்படுத்த முனைந்தனர்.
இதனால் அங்கு பெரும் அரசியல் பிளவுகள் ஏற்பட்டு வன்முறைகள் தலையெடுத்துள்ளன. இத்தனைக்கும் எதிர்க்கட்சி வேட்பாளரின் வெற்றியை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. கபகோ பதவி விலக வேண்டுமென மேற்குலக நாடுகள் கோரியுள்ளன. நாட்டின் மத்திய வங்கியை குவற்றாவுக்கு ஆதரவு வழங்குமாறு ஐ.நா. கோரியுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைகள் களையிழந்தன.
மக்கள் அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறவில்லை. நாங்கள் தாக்கப்படாதிருக்க வேண்டுமானால் எங்கள் தலைகளை உயர்த்த வேண்டும். எங்கள் மீது அநியாயமான போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதென்று கபகோவின் மனைவி தெரிவித்தார்.
இவ்வாறுள்ள நிலையில் குவற்றாவின் ஆதரவாளர்கள் வீடுகளில் இறங்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். நிலைமைகளை சமாளிக்க வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
»»  (மேலும்)