11/22/2010

மட்டகளப்பு மாவீரர் குடும்பங்களை கவனிக்க யாருமில்லையா? ஜெயானந்த மூர்த்தியின் சுடலை ஞானமா? நீலிகண்ணீரா?

    மட்டக்களப்பு மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யுமாறு நான் பிரித்தானியா உட்பட சில நாடுகளில் இயங்கிவரும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.  என பொருமி வெடித்து ஒப்புதல் வாக்குதல் வழங்கியுள்ளார்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்   ஜெயானந்தமூர்த்தி அவர்கள். 
தமிழீழத்தின் பெயரிலும் தமிழ் தேசியத்தின் பெயரிலும் கோடி கோடியாக சம்பாதித்த புலிகளின் பினாமி அமைப்புகளிடம் மட்டக்களப்பு  மாவிரர் குடும்பங்களுக்காக கையேந்தி பிச்சை கேட்டும் பிரயோசனம் அற்ற நிலையில்  " நானே எனது பணத்தை அதாவது ஓய்வூதியத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவீரர்களின் குடும்பங்களுக்கு   வழங்குவதென முடிவெடுத்தேன்."  என தெரிவித்துள்ள ஐயா ஜெயானந்தமூர்த்தி அவர்களே,  இப்போ புரிகிறதா? அவர்களை பற்றி .அவர்களுக்கு படுவான்கரை பாலகர்களின் வாழ்வு எக்கேடு கெட்டாலென்ன? உங்களால், உங்களின்  பென்சன் பணத்தால் எத்தனை மாவிரர் குடும்பங்களுக்கு வாழ்வளிக்க முடியும்? அதுவும் கூட கேவலம் உங்கள் பாசையில் சொன்னால் சிங்கள அரசாங்கம் தருகின்ற பிச்சைக் காசேதான் என்பது புரிகிறதா? வாகரையில் இருந்து வடமுனை ஈறாக கஞ்சுகுடியாறு வரைக்கும் குழந்தைகளை  துரத்தித் துரத்தி புலிகள் பிடித்துச் சென்றபோது கண்ணிருந்தும் குருடர்களாக, வாயிருந்தும் ஊமைகளாக கள்ள மெளனம் காத்தீர்களே. அப்போது நீங்கள் ஏதும் புரியாத அப்பாவி பிரசை அல்ல. பேனாவை கையில் வைத்துக்கொண்டு பத்திரிகையாளராக வலம் வந்தீர்கள். இறந்துபோன கிழக்கின் துரோகி சிவராம் என்கின்ற தராகியுடன் சேர்ந்துகொண்டு புலிகளின் ஆள்பிடிப்புக்கு  "தமிழரின் படைபலம் பெருகுகிறது என்று"  புகழாரம்  சூட்டி மகிழ்ந்தீர்கள். இளம் சிறார்களை பலியிட்டு புலிகளின் சமாதிகள் பெருகியபோது நடுகற்களை வணங்குவோம் என்று புறநானூற்று காலத்திற்கு தமிழனின் வரலாற்றை பின்கொண்டு சென்றீர்கள். 

அப்போது யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் அரசியல் பற்றி உங்களுக்கு புரிந்திருக்க நியாயமில்லைதான் என்றாலும் கிழக்கு பிளவு நிகழ்ந்தபோது கருணா அம்மானுடன் கூட நின்று அவரை கிழக்கின் தேசபிதா என்று துதி பாடியபின்னர், குழிபறித்துவிட்டு ஓடிநனீர்களே, அது உங்கள் சுயநலம். அந்த சுயநலமே உங்கள் அறிவுக்கண்ணை மறைத்தது. வெருகலாற்று படுகொலை நடந்தேறிய போது வன்னி வீரம் என்று முரசுகொட்டிய போது  கொல்லப்பட்டவர்கள் எல்லாம் மட்டக்களப்பு சிறுவர்கள் இல்லையா?  அந்தக் குடும்பங்களை  யார் பார்ப்பது?   மாவீரர் குடும்பங்கள் என்று புலிகள் வழங்கிய சான்றிதழ்கள் பற்றி மட்டும்தான் உங்களுக்கு கவலை. மாறாக உண்மையான மக்கள் பற்றோ, மனிதநேயமோ உங்களிடம் இல்லை என்பது அப்பட்டமாகின்றது. அரசியலில் அனாதைகளாகிவிட்ட உங்களைப் போன்ற புல்லுரிவிகளுக்கு செய்தி தேவை என்பதற்காக வாய்துறந்திருக்கிறீர்கள். எனவேதான் மட்டக்களப்ப மாவீரரர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என்கின்றோம். 
உங்கள் பென்சன் பணம் கிழக்கு மாகாணத்து ஏழைக்குடும்பங்களின் அவலங்களுக்கு முன்னால் எம்மாத்திரம் சேவையாற்ற முடியும். பிரித்தானிய புலிப்பினாமி அமைப்புகளுக்கு மட்டக்களப்பு மாவிரர் குடும்பங்களைப் பற்றி அக்கறையில்லை அவர்கள் அக்கறையெல்லாம் ருத்திர குமாரின் பெயரிலா, நெடியவனின் பெயரிலா யாரின் பின்னால் நின்றால் தங்கள் கோடிகளைக் காப்பாற்றலாம் என்பதே. 
ஆகவே இனிமேலாவது இவர்களுக்கு துதிபாடுவதையும், ஆலாபரணம் செய்வதையும் அடியோடு நிறுத்துங்கள். மட்டக்களப்பு மக்களுக்கு சேவை செய்வதாயின் ஊருக்கு திரும்பிவாருங்கள். 


கு.சாமித்தம்பி.  (மட்டக்களப்பு)

0 commentaires :

Post a Comment