11/09/2010

பிரபாகரன் தமிழ் மக்களின்அவமானச் சின்னம் என்பதை மறந்து வரதர் வக்காலத்து.* வ. அழகலிங்கம்.

4.11.10 வியாழக்கிழமை வடகிழக்குமாகாண முன்னைநாள் முதலமைச்சர் வரராஜப் பெருமாள் ரி.பீ.சீ வானொலியில் கலந்து கொண்டார். அந்தக் கலந்துரையாடலில் அவர் பிரபாகரனை அமரர் பிரபாகரன் என்று அழைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வெகு சீக்கிரத்தில் தமிழ்மக்கள் கிட்லரையும் அமரர் கிட்லர் என்றும் முசோலினியை அமரர் முசோலினியென்றும் சில்லி சர்வாதிகாரி பினொச்சோவை அமரர் பினொச்சோவென்றும் பொல்பொட்டை அமரர் பொலபெட் என்றும் அழைக்கவேண்டும். அப்படியென்றால் கேதீசை, சுபத்திரனை, பத்மநாபாவைத் துரோகிகள் என்று அழைக்க வேண்டும்.

பிரபாகரன் தமிழ் மக்களுக்கு இளைத்த வரலாற்றுத் துரோகங்களை மறந்து வரதராஜபெருமாளின் பிரபாகரனை அமரர் என அழைக்குமாறு வேண்டுகோள் விடுப்பதன் பின்னணி யாது? பச்சிளம் பாலகர்களுக்கு சயனட் குப்பிகளையும் அவர்களது உடலில் வெடிகுண்டுகளையும் கட்டி விட்ட பிரபாகரன் எவ்வாறு மண்டியிட்டு மாண்டான் என்பதற்கான சான்றுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றது.

புரட்சியாளர்களின் வரலாறு சம்பிரதாயங்களோடு பிரபாகரனை ஒப்பிடுவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்தியத் தேசவிடுதலைத்தியாகியான பகத்சிங்கும் அவரோடு தண்டனை பெற்ற இரண்டு தோழர்களும் அவர்களைத் தூக்கிலிடும்பொழுது வழக்கமான பாணியில் முகத்தைக் கறுத்தச் சீலையால் மூடித் தூக்க எத்தனிக்கும்பொழுது தமது கண்களை மூட வேண்டாம் என்றும் தாம் தமது தேசத்தைப் பார்த்துக்கொண்டே சாக வேண்டும் என்றும் கூறி அப்படியே தூக்கப்பட்டுச் செத்தார்கள்.

1905 றைஸ்சியப் புரட்சியை அடுத்து மரணதண்டனையின் விழிம்பில் அந்தப் புரட்சியின் முதலாவது எதிரி ரொக்ஸ்சியாகும். இரண்டாவது எதிரி லெனின். ரொக்ஸ்சி ஏற்கனவே ஆயுள் தண்டனைபெற்று சைபிரியாவுக்கு நாடு கடத்தப் பட்டவர். அவர் அப்பொழுது கோட்டில் ஆற்றிய உரை வரலாற்றில் ஒப்புவமை இல்லாத புரட்சிக்கான அறைகூவலாகும். அவர் புரட்சி தனது பிறப்புரிமை என்றே அறைந்து கூறித் தண்டனையைப் பெற்றார்.

1942 இல் போகம்பரைச் சிறைக்குள் அடைக்கப்பட்ட என்.எம்.பெரேரா பிரித்தானியர்களே உங்களுக்கு இலங்கையில் என்ன உரிமை இருக்கிறது. நீங்கள் கடற்கொள்ளைக்காராராக வந்து இந்த நாட்டை அபகரித்தீர்கள் என்று பேசி மிக வீறாப்புடனேயே தண்டனையைப் பெற்றுக் கொண்டார்.

1959 இல் பிடில் காஸ்றோவின் கோட்டிலே பேசிய பேச்சு வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற புத்தகமாக உலக மொழிகள் எல்லாவற்றிலும் பவனி வருகின்றது.

1973 இல் துருக்கியில் Ibrahim kaypakkaya (இப்றகிம் கைபாக்கயா) என்ற புரட்சியாளன் கோறாம் என்ற மாகாணத்தில் பிறந்தவர். டயயாபக்கீர் னுலையியசமநநச என்ற கோட்டில் விசாரிக்கப்பட்டபொழுது எண்ணற்ற சித்திரவதைகளுக்குப் பின்னரும் கோட்டிலே நீ உன்னைக் கொம்யூனிஸ்ட் என்று சொன்னால் உனது காலை வெட்டுவோம் என்றார்கள். அப்பொழுதும் நான் என்னைப் பெருமையோடு கொம்யூனிஸ்ட் என்று சொல்லுவேன் என்றார். அவரது இடது காலை வெட்டினார்கள். பின்பும் அவர் தான் கொம்யூனிஸ்ட் என்றார். பின்பு அவரது வலது கையை வெட்டினார்கள். பின்பும் தன்னைக் கொம் யூனிஸ்ட் என்றார். அவரது வலது காலையும் வெட்டினார்கள். ஆதன்பின்பும் அவர் பெருமையோடு தன்னைக் கொம்யூனிஸ்ட் என்று கூறினார். அதன் பின்பு அவரது இடது கையையும் வெட்டினார்கள். அதன் பின்பே அவர் கொல்லப் பட்டார். இதே கோட்டில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த Deniz Gzmiz டெனிஸ் கிட்ஸ்மிட்ஸ் என்பவர் மரணதண்டனை பெற்றபின்பு அவரைத் தூக்கிய அலுகோசின் மூஞ்சையில் காறித்தப்பிவிட்டே மரணமானார். அக்காலங்களில் நூற்றுக்கணக்கான துருக்கிய புரட்சியாளர்களின் புரட்சிச் சம்பிரதாயங்களை வாசித்தாலே மயிர்க்கூச்சேறியும்

1983 மார்ச்சில் குட்டிமணிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது குட்டிமணி இலங்கை அரசிடம் விழுந்து கும்பிடவில்லை.
Before my death sentence is carried out, please remove my eyes and transplant them to a Tamil without eyesight. I will not able to see the free Tamil Eelam but, at least, let my eyes see it.'

மரணதண்டனையை நிறைவேற்று முன்னர் தயவு செய்து எனது இரண்டு கண்களையும் எடுத்து கண்ணில்லாத தழிழரொருவருக்கு அளிக்கும்படியும் தன்கண்கள் தமிழீழத்தைப் பார்க்கும் என்றும் கூறினார்.

பிரபாகரனை மாதிரிக் கோழையை உலக விடுதலைவரலாறு கண்டதே கிடையாது. பிரபாகரனின் சரணாகதி வரலாற்றை அவரது சர்வதேச எஜமானர்கள் எப்பாடுபட்டும் மறைக்கப் பார்க்கின்றனர். றாயபக்ஸ்ச அரசாங்கமும் இன்றுவரை புலியின் இரகசியங்கள் எதையும் வெளிவிடவில்லை. பொல்பொட்கொன்றவர்களின் மண்டையோடுகளை எடுத்து மலைபோல் குவித்துக் காட்டினார்கள். பொல்பொட் கொன்ற மண்டையோட்டுக் குவியல் 30000 என்றே கருதப் படுகிறது. புலி கொன்ற மண்டையோடுகளையெல்லாம் அரசாங்கமே தேடி எடுத்து எரித்தவிட்டது. புலியின் சித்திரவதைச் சிறைகளைக்கூட அரசாங்கம் தமிழ் மக்களுக்கக் காட்டாது மறைத்தவிட்டது. முள்ளிவாய்காலில் அரசாங்கம் கொன்ற மண்டை ஓடுகளும் எரித்துத் துப்பரவாக்கப் பட்டது. ஆனால் எதிர்கால வரலாறு பிரபாகரன் என்ற பேரை மகா கோழையை உவமைப்படுத்தவே பாவிக்கும் மொழியை அதன் வரலாற்றுப் பாவனையோடேயே விளங்கிக்கொள்ள வேண்டும். கலப்படமில்லாத றோவின் ஏஜண்டான வரதராஜப் பெருமாள் ஒருகாலத்தில் றோவின் ஏஜண்டாக இருந்த பிரபாகரனை அமரர் என்பதில் அதிசயம் ஏதும் இல்லை. அப்படிச் சொல்லாவிட்டால்தான் அது அதிசயமாகும்.

  நன்றி இலங்கைநெட்

0 commentaires :

Post a Comment