11/05/2010

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தையல் உபகரணம் வழங்கும் திட்டம்

திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்தும் நோக்கில் சுய தொழில் முயற்சிக்காக  கிழக்கு மாகாண முதலமைச்சரின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் தையல் இயந்திர உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சரால் பெண்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கப்படுவதனையும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான புஸ்ப்பராசா,பூ.பிரசாந்தன்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சத்தியசீலன்  ஆகியோரையும் படங்களில் காணலாம். முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இவ் தையல் உபகரணம் வழங்கும்  திட்டம் நடைமுறைப்படுத்தப்பாட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
img_3515
img_3520
img_3528

0 commentaires :

Post a Comment