11/03/2010

தமிழ்ச்செல்வன் சிலை விவகாரம்: இலங்கையின் கோரிக்கையை பரிசீலிக்கின்றது பிரான்ஸ்

தமிழ்ச் செல்வனுக்குச் சிலை அமைக்கும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை குறித்துப் பரிசீலிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையிலும், பிரான்ஸிலும் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தின் உறுப்பினருக்குச் சிலைநிறுவ அனுமதிக்கக் கூடாது என்று பிரான்ஸ் அரசை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளமை குறித்துப் பரிசீலிப்பதாக அறிவிக்கப்பட்டு ள்ளதென்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.
பிரான்ஸில் உள்ள இலங்கைத் தமிழர்கள் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனுக்குச் சிலை எழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்குச் சிலை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று அரசாங்கம் பிரான்ஸ் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும் இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தின் ஊடாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment