11/24/2010

கிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை.

கிழக்கு மாகாணத்திற்கான 2011ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது முதல்வர் சந்திரகாந்தன் ஆற்றிய உரை
கௌரவ அவைத்தலைவர் அவர்களே,
கௌரவ அமைச்சர்களே,
கௌரவ மாகாணசபை உறுப்பினர்களே,
மற்றும் மாகாணசபை அமைச்சுக்களின் செயலாளர்களே,
ஊடகவியலாளர்களே.
கௌரவம் மிக்க இம் மக்களவையில் கிழக்கு மாகாணத்தின் 2011ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

     கிழக்கு மாகாணமானது வன்முறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினால் பொறுப்பேற்கப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படுகின்ற மூன்றாவது வரவுசெலவுத் திட்டம் இதுவாகும். கிழக்கு மாகாணமானது மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டபின் இம்மாகாணத்தின் நிருவாகமானது எனது தலைமையிலான மாகாண அமைச்சரவையினால் பொறுப்பேற்கப்பட்டபோது இருந்த நெருக்கமான நிலைமையினை சற்றுத் திரும்பிப்பார்க்கிறேன்.
 வளம்மிக்க எமது கிழக்கு மாகாணமானது யுத்தத்தின் கோரப்பிடியிலும், ஆயுத அச்சுறுத்தலிலும், சகோதர முரண்பாட்டிலும் இருந்தது. இயற்கை கிழக்கு மண்ணிற்கு தனது அருட்கொடைகளை வாரி வழங்கியிருந்தது. அழகிய கடற்கரை, நெல் விளையும் விளைநிலங்கள், ஆறுகள், குளங்கள், மலைத்தொடர்கள் என அனைத்து விதமான வழங்கள் இருந்த போதிலும் அதனை முழுமையாக அனுபவிப்பதற்கோ, அதன் பலாபலன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் எமக்கிருக்கவில்லை.
 தொடர்ந்து கொண்டிருந்த கொடிய ஆயுதப் போராட்டத்தின் மூலம் எம்மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதனை உணர்ந்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தான் எமது மக்களுக்கான அரசியல் அதிகாரங்களையும், அபிவிருத்தியினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் உதயமானது. அதே நேரத்தில் எமது மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடு காரணமாக கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டு பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்து வளமான அபிவிருத்திக்கு வித்திட வேண்டும் என்ற அவரின் இலக்கிற்கு வலுச்சோப்;பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அவருக்கு முழுமையான ஆதரவினை வழங்கி இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து மாகாண சபையை கைப்பற்றி இருக்கின்றது. 
கிழக்கு மாகாணசபை ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நெருங்குகின்ற இத்தருணத்தில் வரலாற்றில் என்றும் இல்லாதவாறான பல வியக்கத்தகு அடைவுகளை எய்தியிருக்கின்றோம். பல்லின மக்கள் வாழுகின்ற கிழக்கு மாகாணம் இன்று சகோதரத்துவத்திற்கு முழுநாட்டிற்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. அதனோடு விவசாயத்துறையில் நாங்கள் ஒருமிகப் பெரிய அடைவை எய்தியிருக்கின்றோம். முழுநாட்டின் நெல் உற்பத்தியில் முப்பது வீதமான உற்பத்தியினை கிழக்கு மாகாணம் தந்திருக்கின்றது. கல்வித்துறையிலும் மிகப்பாரிய வியக்கத்தகு புரட்சியை நோக்கி கிழக்கு மாகாணம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி வளர்ச்சியை இலக்காகக்கொண்டு புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு தேவையான பௌதீக வளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, ஆசிரியர் தேவைகள் ஓரளவு நிறைவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்துப் பின்புலங்களும் மாகாண சபையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கௌரவமிக்க சபைத்தலைவர் அவர்களே,
இவ்வடைவுகளைவிட கடந்த ஒரு வருட காலத்தில் சுற்றுலாத்துறையானது கிழக்கு மாகாணத்தில் பாரிய முன்னேற்றம் கண்டுவருகின்றது. பல நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எமது முக்கிய சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தினமும் பலநூற்றுக்கணக்கான உள்@ர், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் கிழக்கு மாகாணத்தை தரிசிக்கின்றனர். இதன்மூலம் எமது மாகாண மக்களின் வர்த்தக நடவடிக்கைகளும், தனிநபர் வருமானமும் அதிகரிக்கின்றன, இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான வீதிகள் நவீன முறையில் செப்பனிடப்படுகின்றன. பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இவைகளெல்லாம் மக்கள் பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்ட பின்பு எமது மாகாணம் அடைந்த அடைவுகளாகும். இதனைவிட நீண்டகாலம் நிலைத்து நி;ற்கும் அபிவிருத்தியை நோக்காக கொண்ட சிறந்த திட்டமிடலில் எமது மாகாணம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல சவால்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் கிழக்கு மாகாணமானது பொருளாதார, கல்வி, சமூக அபிவிருத்தியில் முன்னேறிக்கொண்டிருப்பதற்கு எமது ஜனாதிபதியாகிய மகிந்த ராஜபக்ச அவர்களினதும், மத்திய அரசாங்கத்தின் பூரண உதவியும், ஒத்துழைப்பும் பக்கபலமாகவுள்ளது. அதனைவிட கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்கின்ற பேதங்களில்லாமல் எமது மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதே முக்கிய காரணமாகும். இவ் ஒத்துழைப்பும் உறுதிப்பாடும் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்பதே எனது பிராத்தனையாகும்.
 மாகாண முதலமைச்சர் என்ற தோரணையில் எனது நேரடி ஆளுகையின்கீழ் வருகின்ற உள்ளுராட்சித் திணைக்களம், கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஊடாக கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பாரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை உள்ளுர் மக்கள் பிரதிநிதிகளின் உதவியுடன் வெற்றிகராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று சுற்றுலாத்துறை, மனிதவள மேம்பாடு, புனர்வாழ்வுஇ மீள்குடியேற்றம் மூலமும் எமது மக்களின் அடிப்படை வாழ்வாதார, சமூகவியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. இவைகளைவிட  மத்திய அரசாங்கம்இ வெளிநாட்டு நிதிநிறுவனங்களின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தை வளமான மாகாணமாக்குவதற்கான திட்டங்களும் கிழக்கு மாகாண சபையில் செயற்படுத்தப்பட்டுள்ளன.
 நாம் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான பாரிய அடைவுகளை எய்வதற்கு என்றும் என்னுடன் தோள்கொடுத்துச் செயற்படும் கௌரவம்மிக்க மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட அனைத்து மாகாண அதிகாரிகளையும் பாராட்டி நன்றியுடன் நினைவு கூர்வதுடன் 2011ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்கிறேன்.
எதிர்வரும் 2011ம் நிதிஆண்டில் கிழக்கு மாகாணசபையின் எதிர்பார்க்கப்படும் மொத்தச்செலவீனம் ரூபா 13,492.753 மில்லியனாகும். இவற்றில் மீண்டுவரும் செலவீனங்கள் ரூபா 11,931.253 மில்லியனும் மூலதனச் செலவீனங்கள் ரூபா 1.561.500 மில்லியனுமாகும். இவற்றுக்கு மேலதிகமாக மாகாணசபையின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கின்ற  செயற்திட்டங்களுக்கு வெளிநாட்டு உதவிகளாக ரூபா 3768 மில்லியன் கிடைக்கவிருக்கின்றது.
மாகாணசபையின் மொத்தச் செலவீனங்கள் பின்வரும் நிதிமூலங்களின் மூலம் ஈடுசெய்யப்படவிருக்கின்றது.
 (ரூபா. மில்லியனில்)
01 மீண்டுவரும் செலவினம்
   மத்திய அரசினால் வழங்கப்படவிருக்கின்ற தொகுதி
  மானியம் (டீடழஉம புசயவெ)
10,872.253
   எதிர்பார்க்கப்படும் மாகாண வருமானம் 1,059.00
   11,931.253


02 மூலதனச் செலவினம்
   பிரமாண அடிப்படையிலான கொடை (ஊடீபு) 250.00
   மாகாண விசேட செயற்பாடுகளுக்கு குறித்தொதுக்கிய
  அபிவிருத்திக் கொடை (Pளுனுபு)
815.00
   மாகாண பாடசாலைகளுக்கான நவோதய கருத்திட்டம்
  (Nயுறுழுனுயுலுயு)
35.00
   கல்வித்துறை அபிவிருத்திக் கருத்திட்டம் (நுளுனுP) 80.50
   யுனிசெப் செயற்திட்டம் (ருNஐஊநுகு) 293.00
   யூ.என்.எப்.பீ.ஏ செயற்திட்டம் (ருNகுPயு) 88.00
   1,561.50
          
         எதிர்பார்க்கப்படும் மொத்தச் செலவினம்

13,492.753
வெளிநாட்டு உதவி செயற்திட்டங்கள்
          (ரூபா. மில்லியனில்)
01. மாகாண வீதிகள் செயற்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கி 1,175.00
02. மாகாண வீதிகள் செயற்திட்டம் - உலக வங்கி 863.00
03 கி.மா - கிராம வீதிகள் அபிவிருத்தி செயற்திட்டம் - ஜெவிக் 1,490.00
04. கி.மா –நீர் வழங்கல் அபிவிருத்தி செயற்திட்டம் - ஜெவிக் 240.00
மொத்தம் 3,768.00
கிழக்கு மாகாண சபைக்கு 2011ம் நிதியாண்டில் கிடைக்கவிருக்கின்ற மேற்படி நிதிகள் கிழக்கு மாகாண சபையின்கீழ் இயங்கும் அமைச்சுக்களுக்கும் அதன் கீழ் உள்ள திணைக்களங்களுக்கும் முன்னுரிமைத் தேவைகளின் அடிப்படையில் பின்வருமாறு ஒதுக்கிடப்பட்டுள்ளது.   
          (ரூபா. மில்லியனில்)
தொ.இல அமைச்சு ஃ செயலகம் மீண்டுவரும்
செலவினம் மூலதனச் செலவினம்
1. ஆளுனர் செயலகம், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு
மற்றும் மாகாண பேரவைச்செயலகம் 102.274 18.00
2. மாகாண நிதி மற்றும் திட்டமிடல், உள்ளுராட்சி, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், கிராம அபிவிருத்தி, சுற்றுலாத்துறை, சுற்றாடல்அமைச்சு
1,925.357
382.00
3. விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சு
343.453
118.50
4. கல்வி, கலாச்சார பண்பாட்டலுவல்கள், காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சு
6,509.402
534.50
5. சுகாதார, சுதேச வைத்திய, சமூக நல, சிறுவர் நன்னடத்தை, மகளீர் விவகார, இளைஞர் விவகார, தொழில் நுட்பக் கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வினியோக அமைச்சு
2,728.800
402.5
6. வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மானமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு
321.967
106.00
மொத்தம் 11,931.253 1,561.5

0 commentaires :

Post a Comment