வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்கள் தாயமாக உரிமை கோர முடியாது என்ற குரல் ஒருபுறத்திலிருந்து எழு கின்றது. இரண்டு மாகாணங்களும் தமிழ் மக்களின் பாரம்ப ரிய தாயகம் என்ற நிலைப்பாட்டிலிருந்து இம்மியளவும் விலக முடி யாது என்று இன்னொரு குரல் மறுபுறத்திலிருந்து வருகின்றது. இர ண்டு குரல்களும் வெவ்§று சமூகப் பிரிவினரிடையே வெகுஜன விரு ப்புவாத கோஷங்களாக வளர்ந்து வருகின்றன. இந்த வளர்ச்சிப்போ க்கு இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியின் முன் னெடுப்புக்குத் தடையாக அடைந்துவிடுமோ என்ற சந்தேகம் தோன் றுகின்றது.
எல்லா இனங்களையும் சேர்ந்தவர்களுக்கு இலங்கையே தாயகம் எனக் கூறுவதில் நியாயம் உண்டு. அதேநேரம், ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு தேசிய இனமும் பெரும்பான் மையாகச் செறிந்து வாழும் பிரதேசங்களில் தாயக உரிமை கோரு வதிலும் நியாயம் இல்லாமலில்லை. அந்நிய ஆதிக்கத்தின் கீழ் வாழ் ந்த காலத்தில் தாயக சிந்தனைக்கும் சுதந்திரத்துக்குப் பிந்திய காலத் தில் தாயக சிந்தனைக்குமிடையே உள்ளடக்கத்தில் வேறுபாடு உண்டு. அந்நிய ஆதிக்கத்தின் கீழ் நாடு என்ற உணர்வு மேலோங்குவதும் சுதந்திரத்துக்குப் பிந்திய காலத்தில் தேசிய இனம் என்ற உணர்வு மேலோங்குவதுமே இதற்குக் காரணம். ஒரு பிரதேசத்தில் பெரும் பான்மையாகச் செறிந்து வாழும் தேசிய இனம் அந்தப் பிரதேசத்து டன் தனக்குள்ள தனித்துவமான உறவு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. இந்த அங்கீகாரத்தைப் பொறு த்த வரையில் வார்த்தைப் பிரயோகங்கள் முக்கியமானவை.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதி யான வாழ்புலங்கள் என்பதை இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் ஒத்துக்கொண்டிருந்தது. இக் கருத்து நிலைக்கு எதிராகப் பெரிய அளவில் கிளர்ச்சி எதுவும் இடம்பெற வில்லை. இந்த ஒப்பந்தத்தை ஆட்சேபித்து நடைபெற்ற வழக்கிலும் இக் கருத்து நிலைக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை.
இந்த நிலையில், இப்போது இது ஒரு பிரச்சினையாக எழுவது ஏன் என்ற கேள்வியில் நியாயம் உண்டு.
தாயக அல்லது பாரம்பரிய வாழ்புலக் கருத்து நிலையைப் பிரிவினையா கப் பார்க்கும் மனோநிலை கணிசமான சிங்கள மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்டுவிட்டது. இந்த மனோநிலையை வளர்த்ததில் இருதரப் புக் கடுங்கோட்பாட்டு அரசியல்வாதிகளுக்கும் சமமான பங்கு உண்டு. தமிழ் அரசியல்வாதிகள் தாயகக் கோட்பாட்டையும் தனிநாட்டுக் கோரிக்கையையும் ஒன்றிணைத்து முன்வைத்தார்கள். தமிழ் மக்க ளின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்குப் பிரிவினைச் சாயம் பூசும் பேரினவாதிகளுக்கு இது வாய்ப்பான தீனியாகியது.
எந்த உரிமையையும் நடைமுறை ரீதியாகவே உறுதிப்படுத்த முடியும். கோஷங்களாலும் பத்திரிகை அறிக்கைகளாலும் உரிமைகளை உறுதி ப்படுத்த முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பங்களைத் தமிழ் தலைவர்கள் தட்டிக் கழி த்தார்கள். புலிகளின் அழிவுகரமான ஆயுதப் போராட்டத்துக்கு ஆத ரவாகச் செயற்பட்டதன் மூலம், இரு மாகாணங்களிலுமிருந்து பெரும் பாலானோர் புலம்பெயரும் நிலை தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார்கள். இப்போதும் மாகாண சபையை ஏற்கத் தயங்குகின் றார்கள்.
தமிழ்த் தலைவர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுவதற்கு இன்னும் காலங்கடந்துவிடவில்லை.
0 commentaires :
Post a Comment