11/30/2010

இலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலிலும் சேரும் பாகிஸ்தான் ஜனாதிபதி கூறுகிறா

உலகிலே பயங்கரவாதம் இல்லாத ஒருசில நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது. உலகிலே அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இணைவதற்கும் தற்போது இலங்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிப் அலி சர்தாரி குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தின் மூலம் துன்புறுத்தப்படுகின்ற ஒரு நாடு என்ற வகையில் பயங்கரவாதத்தின் கொடூர செயற்பாடுகள் பற்றி பாகிஸ்தான் நன்கறியும் என்று குறிப்பிடுகின்ற சர்தாரி பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியுள்ள இலங்கைக்கு இன்று நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகிலே அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் உறவு பற்றி குறிப்பிட்ட பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, தாம் இங்கே வந்ததற்கான நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பினை மேலும் வலுப்படுத்துவதாகும். இந்த நாட்டின் டொலர்களை எமது நாட்டிற்கு கொண்டு செல்லும் நோக்கம் தமது பயணத்தில் கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் அழைப்பின் பேரில் நேற்று (29) கோட்டே பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகைதந்த பகிஸ்தான் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதியை வரவேற்றார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர் பார்த்து உள்ளதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானுக்கு வருகைத் தரு மென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். “பாகிஸ்தான் விமான சேவையைச் சேர்ந்த விமானங்கள் தற்போது இலங்கைக்கு வருகின்றன. எமது இரு நாடுகளுக்கும் இடையேயும் காணப்படும் நீண்டகால நட்புறவினை பேணி வருவது இரு நாடு களினதும் பொறுப்பாகும்.
இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார். இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.

0 commentaires :

Post a Comment