11/27/2010

தென் கொரியாக்கு எச்சரிக்கை

அமெரிக்க படைகளுடன் சேர்ந்து ராணுவத்தை குவிக்கும் நடவடிக்கையில் இறங்கினால் தென் கொரியா மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல்கள் நடத்த தயங்க மாட்டோம் என வட கொரியா நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இதனால், கொரியா தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்து பதற்றம் அதிகரித்து இருக்கிறது. எனினும் வழக்கமான கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவே அமெரிக்க கப்பல் தென்கொரியா செல்வதாக கூறப்படுகிறது.
கொரிய கடற் பகுதியில் இரு நாட்டுப் படைகளும் அடுத்தவாரம் கூட்டு கடற்படை போர் பயிற்சி மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வட கொரியாவுக்கு சீனாவின் ஆதரவு இருந்து வருகிறது.
எனவே, இந்த விவகாரம் குறித்து சீனாவுடன் பேச தென் கொரியா முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
ஏனெனில், தென்கொரியாவுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொள்ள இருந்த சீன வெளியுவு அமைச்சர் யாங் ஜியாச்சி, தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டார். வட கொரியாவை சீனா பகிரங்கமாக கண்டித்தால் மட்டுமே இந்த போர் பதற்றம் தணியும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

0 commentaires :

Post a Comment