நைஜீரியாவில் அடுத்த வருடம் நடைபெறவிருந்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்கள் பின் போடப்பட்டுள்ளன.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல் களை நடத்த நைஜீரிய தேர்தல் திணைக்களம் தீர்மானித்திருந்தது. அரசியலமைப்பில் மாற்றம் செய்து புதிய முறையில் தேர்தலை நடத்த பாராளுமன்றம் அனுமதியளித்தது. அரசியலமைப்பை மாற்றம் செய்ய நாட்கள் தேவைப்படுமென்பதால் ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்து வதென தேர்தல் திணைக்களம் தீர்மானித்தது.
இதன்படி ஏப்ரல் மாதம் 09ம் திகதி ஜனாதிபதி தேர்த லையும் 16ம் திகதி பாராளுமன்ற தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியலமைப்பை மாற்றம் செய் வதனூடாக தேர்தலில் ஊழல் மோச டிகள் இடம்பெறுவதை தடுக்க நைஜீரிய அரசாங்கம் எண்ணியு ள்ளது.
நைஜீரிய வரலாற்றில் தேர்தல் நேர்மையாக நடந்த சரித்தி ரம் இல்லை. இதற்கு அந்நாட்டு அரசியலமைப்பும் ஒரு காரணமாயு ள்ளது. இதையுணர்ந்த அரசாங்கம் முதலில் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய எண்ணியுள்ளது. நைஜீரியா வில் 2007ம் ஆண்டு இறுதியாக ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல் கள் இடம்பெற்றன. இதில் உமரு யாரு ஜனாதிபதியாக தெரிவு செய் யப்பட்டார்.
0 commentaires :
Post a Comment