11/25/2010

பொலிவியாவின் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ்

     பொலிவியா விரும்பும் எந்த நாடுகளுடனும் உறவைப் பேண எமக்கு உரிமையுண்டு இவ்விடயத்தில் வேறு நாடுகள் தலையிட முடியாதென அந்நாட்டின் ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ் தெரிவித்தார். பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஈவோ மொரல்ஸ் இதைத் தெரிவித்தார்.
அம்மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் பங்கேற்றார். கேட்ஸ் இங்கு உரையாற்றும் போது ஈரானுடன் இணைந்து பொலிவியா அணு ஆயுதத்தை தயாரிக்க முயல்வதாகத் தெரிவித்ததுடன் ஈரான், பொலிவியாவிடையிலான உறவுகளை வரவேற்க முடியாதென்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ் நாங்கள் எந்த நாடுகளுடனும் உறவுகளைத் தொடர்வோம் அல்லது துண்டிப்போம் இது எமது உரிமை. பொலிவியாவின் உள், வெளி நாட்டு விவகாரங்களில் தலையிட வேறு எந்த நாடுகளுக்கும் உரிமை கிடையாது எனத் தெரிவித்தார். ரஷ்யாவின் உதவியுடனே ஈரான் யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதத்தைத் தயாரிப்பதாக மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன.

0 commentaires :

Post a Comment