11/25/2010

கிராமங்கள்தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறியும் கிழக்கு முதல்வர்.

img_6131கிழக்கு  மாகாணத்தில் உள்ள கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் எதிர் கொண்டு வருகின்றார்கள். அவர்களது பிரச்சினைகள் பெரும்பாலானவை அன்றாட வாழ்வியலோடு தொடர்பான பிரச்சினைகளாகவே இருக்கின்றது. இவைகள் கட்டாயம் இலகுவாக தீர்த்துக்கொள்ளக் கூடியவைகளாகவும் இருக்கின்றது. ஆனால் கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பலவேறு இடர்பாடுகளைச் சந்திக்கின்றார்கள். இதனைக் கருத்திற் கொண்டு விடுமுறைநாட்களில் ஒவ்வொரு கிராமங்களாக சென்று மக்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கான தீர்வுகளை வழங்கி வருகின்றார். கடந்த சனிக்கிழமை செங்கலடிப் பிரதேச சேயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச் சேனைக்குச் சென்ற முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அம்மக்களது தேவைகளைக் கேட்டறிவதனைப் படத்தில் காணலாம்.

0 commentaires :

Post a Comment