மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்காடு வைத்திய சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியர் விடுதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ் சுபைர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்க நிதி நிறுவனத்தின் உதவியுடன் சுமார் 35இலட்சம் ரூபாய் செலவில் மேற்படி வைத்தியர் விடுதி அமைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ. பரசாந்தன், எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் தவசாளர் சுப்பிரமணியம் ஆகியோருடன் கிழக்கு மாகாண சகாதாரப் பணிப்பாளர் டாக்டர் தேவராஜன் மற்றும் சுகாதரப் பணிமனை உத்தியோகஸ்ததர்களும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment