புதிய அமைச்சரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22ம் திகதி) காலை 10.00 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள விருக்கின்றது.
இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காக கடந்த 19ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அதற்கு ஏற்ப புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறின.
இச்சத்தியப் பிரமாண நிகழ்வின் போது புதுமுகங்களும் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின் போது இன்று நண்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி புதிய அமைச்சரவைக்கு விபரிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment