11/21/2010

இறுதிகட்ட யுத்தின் போது பொது மக்களை புலிகள் சுட்டனர் : வி. சண்முகராஜா _




  இறுதிகட்ட யுத்தின் போது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய பொது மக்களை புலிகள் சுட்டதாக முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வி. சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கையிலேயே சண்முகராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

2006 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் 2009 ஆம் ஆண்டு வரை நான் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அத்தியசட்சகராக கடமையாற்றினேன்.

இந்த காலப்பகுதிக்குள்ள நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி வந்த பொதுமக்களை புலிகள் சுட்டனர். ஆனால் நாங்கள் அங்கிருந்த வந்த மக்களை புலிகள், பொதுமக்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சிகிச்சை அளித்தோம். என தெரிவித்திருந்தார். _

0 commentaires :

Post a Comment