ஈரான் ஜனாதிபதி அஹமதிநெஜாத்
ஈரான் அணுசக்தி பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட வேண்டுமானால், இந்த பிரச்சினையில் ஈரானை மிரட்டுவதை உலக வல்லரசு நாடுகள் கைவிட வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி அஹமதிநெஜாத் கேட்டுக் கொண்டுள்ளார்.அசர்பைஜான் நாட்டுக்கு சென்றுள்ள ஈரான் ஜனாதிபதி அங்கு நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது,
ஈரானுக்கும் உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஈரான் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை அடுத்தமாதம் நடக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. பேச்சுவார்த்தையில் பயன் ஏற்பட வேண்டுமானால் உலக வல்லரசு நாடுகள் ஈரானை மிரட்டுவதை கைவிட வேண்டும். எங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் சாதகமான பலன்களை அடையமுடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் மிரட்டுகிறார்கள். இந்த பழைய நடைமுறைகளை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பலன்களும் அதே பழைய விதமாக தான் இருக்கும்.
ஈரான் வளமான நாடு அதனால் தான் எங்கள் மீது பொருளாதார தடை விதித்த போதிலும் எங்கள் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் நடைபோட்டு உள்ளது. பேச்சுவார்த்தையை துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் வைத்துக் கொள்ளலாம் என்று நாங்கள் கூறி இருக்கிறோம். அவர்கள் ஜெனீவாவில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேற்றுமை உள்ளது என்றார்.
0 commentaires :
Post a Comment