ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களுக்கோ கேளிக்கைகளுக்கோ ஆன தினமல்ல எல்லா மதத்திலும் ஒவ்வொரு பண்டிகைகளும் மனித மேம்பாட்டுக்கு தேவையான அரிய தத்துவங்களையும் வாழ்க்கை நெறிகளையும் கொண்டுள்ளதுடன் பண்டிகைகளின் ஊடாக அவை மனித வாழ்வில் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றே கொண்டாடப்படுகின்றது.
அவ்வரிசையில் இஸ்லாமிய சகோதரர்களால் கொண்டாடப்படுகின்ற ஹஜ் பண்டிகையானது தியாகம் எனும் அதி உன்னதமான தத்துவத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. பிற சகோதரனின் நலனுக்காக ஒரு சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக விட்டுக்கொடுப்புகளும் தியாகங்களும் அவசியமாகின்றன. இதனைத்தான் இப்பண்டிகை உணர்த்தி நிற்கின்றது.
இப் பண்டிகையானது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கோ இனத்திற்கோ சொந்தமானதல்ல முழு மனித சமூகத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. யுத்தம் முடிவடைந்து அனைத்து சமூக மக்களும் நீடித்த நிலைத்த அமைதியையும் சகோதரத்துவத்தையும் அபிவிருத்தியையும் எதிர்பார்த்து நிற்கின்ற எமது நாட்டில், இவைகளை எய்த வேண்டுமானால் விட்டுக் கொடுப்புகளும் தியாகங்களும் அவசியமாகின்றது. கடந்த கால யுத்தத்தில் அழிவடைந்தது நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தியும் மட்டுமல்ல, சகோதர இனங்களுக்கிடயிலான நல்லுறவும் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்புகளும்தான். எனவே இன்றைய காலகட்டத்தில் பாகுபாடுகளை மறந்து ஏற்ற தாழ்வுகளை ஒழித்து அனைவரையும் இந்நாட்டு மக்கள் என்ற மனோ பக்குவத்துடன் செயற்படுவதற்கு விட்டுக்கொடுப்புகளும் தியாக உணர்வும் மிக இன்றியமையாதது.
எனவே ஹஜ் பண்டிகை உணர்த்துகின்ற இவ் அதி உன்னத தத்துவத்தை எம் வாழ்வில் கடைப்பிடித்து நாடும் நாமும் முன்னேற வேண்டுவதுடன், மீண்டும் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

முதலமைச்சர்,
கிழக்கு மாகாணம்.
கிழக்கு மாகாணம்.
0 commentaires :
Post a Comment