11/13/2010

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதயம் . படுவான்கரை மக்களின் வாழ்வில் முதலமைச்சர் ஒளி பாச்சிய நிகழ்வாகும் . மட்டு. கல்விமான்கள் புகழாரம்

 
img_5343கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் பாரிய மயில்கல்லென கல்வியாளர்கள்  புகழாரம் . கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அயராத அற்பணிப்புடனான முயற்சியின் பலனாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 5வது கல்வி வலையமான மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உப அலுவலகம் இன்று முதலமைச்சர் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுனரின் பங்குபற்றலுடன் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இப்புதிய கல்வி வலயத்தின் உதயமானது கிழக்கு மாகாண கல்வி  வளர்ச்சியில் முக்கிய மயில்கல்லாக அமையும் என்று மக்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை என்றழைக்கப்படும் இப்பகுதியில் இருந்துதான் கடந்த காலங்களில் பல திறமை மிகு மாணவர்களும் கல்வியாளர்களும், அதிகாரிகளும் உருவாகினர் ஆனால் கடந்த காலங்களில் அசாதாரண நிலமை காரணமாக அப்பகுதி கல்வி வளர்ச்சியில் முக்கிய தேவையான கல்வி வலயம் உருவாகுவது பாரிய சவால்மிக்கதொன்றாகவே இருந்து வந்தது, ஆனால் முதலமைச்சரின் தூரநோக்குள்ள கல்விச் சிந்தனை காரணமாகவும் விடா முயற்சி காரணமாகவும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவு இன்று நனவாகியுள்ளது. இப்புதிய கல்வி வலயத்தில் 66 பாடசாலைகளும் 800 ஆசிரியர்களும் 17000க்கு மேற்பட்ட மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். இக்கல்வி வலயத்தின் பதில் வலயக்கல்வி பணிப்பாளராக பட்டிருப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதோடு. இவ்வலயத்திற்கான புதிய உப வலயக்கல்வி அலுவலகம் குறிஞ்சாமுனையில் முதமைச்சரின் தலைமையில் ஆளுனரின் பங்குபற்றலுடன்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணமானது முதலமைச்சர் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்ட பின் கல்வி ரீதியில் பாரிய மறுமலச்சியை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.
முதலமைச்சரின் கல்வியல் ரீதியான தூரநோக்கு செயற்றிட்டத்தின் பயனாக பாலர்பாடசாலை பணியகம் புதிய ஆசிரியர் நியமனங்கள் ஆளணிச்சீராக்கல் பாடசாலைகளின் பௌதீக தேவைகளுக்கான முன்னுரிமை போன்ற கல்வி ரீதியிலான சாதனைகளுடன் இப்புதிய கல்வி வலயமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
img_5283
img_5298
img_5309
img_5369
img_5384

0 commentaires :

Post a Comment