திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(02.11.2010) பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாணவர்களை பாராட்டி நினைவுப்பரிசில்களை வழங்குவதையும் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவி சுபதாவையும் பாராட்டி நினைவு பரிசில் வழங்குவதையும் படங்களில் காணலாம். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் த.ம.வி.பு கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு சத்திய சீலன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment