ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இம் மாதம் துருக்கியில் நடைபெறுமென ஈரான் வெளிநாட்டமைச்சர் மொனாச்சர் மொட்டாசி தெரிவித்தார். இதில் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன, பிரான்ஸ், ரஷ்யா, சீனா என்பவற்றுடன் ஜேர்மனியும் கலந்து கொள்ளவுள்ளது. இம் மாநாடு நவம்பர் 15, 17 ம் திகதிகளில் வியன்னாவில் நடைபெற முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
இதை துருக்கியில் நடத்த ஈரான் விரும்புகின்றது. இதையடுத்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடத்தையும், திகதியையும் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் ஈரான் வெளிநாட்டமைச்சர் விளக்கினார். யூரேனியம் செறிவூட்டலைத் தொடரும் ஈரான் அணு ஆயுதங்களை இரகசியமாக உற்பத்தி செய்வதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
இவை பற்றி பேசும் பொருட்டே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஐ. நா. அதிகாரிகள் சோதனையிட ஈரான் அனுமதிக்க வேண்டுமென அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.
0 commentaires :
Post a Comment