பனை அபிவிருத்திச் சபை யாழ். மாவட் டத்தில் ஒரு இலட்சம் பனம் விதைகளையும் பனம் நாற்றுக்களையும் எதிர்வரும் பதினைந்தாம் திகதி நாட்டவுள்ளது.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி நாடு முழுவதும் இடம்பெறும் மரம் நடும் தேசிய திட்டத்துக்கு அமைவாக யாழ்ப் பாணத்திலும் இந்நிகழ்வு நடைமுறைப் படுத்தப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரெட்னம் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 20000 நிழல்தரும் மரங்களும் அதே தினத்தில் நாட்டப்படவுள்ளது.
யாழ். மாவட்ட விவசாயத் திணைக்களம் அன்றைய தினம் 1900 பழ மரக்கன்றுகளையும் பயனாளிகளுக்கு குடாநாடு முழுவதும் வழங்கவுள்ளது.
0 commentaires :
Post a Comment