யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் வீட்டுக்கடன் மற்றும் சுயதொழில் கடனாக இரண்டரை இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
நான்கு வீத வட்டியுடன் 10 வருடத்தில் அறவிடக்கூடிய வகையில் இந்தக்கடன் வழங்கப்படுவதுடன் யுத்தத்தினால் பாதிப்படைந்த சகலரும் இதற்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இலங்கை வங்கியுடன் இணைந்து புனர்வாழ்வு அதிகாரசபை இச்செயற்றி ட்டத்தை முன்னெடுப்பதுடன் அடுத்த வாரத்தில் வீட்டுக்கடன் மற்றும் சுயதொழில் கடனுக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவி த்தார்.
யுத்தம் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. பெருமளவிலான பிரதேசங்களில் மீள்குடியேற்றங்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் மீள்குடியேற்றப்பட் டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவ தற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் தற்போது நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நஷ்டஈடு மற்றும் வீட்டுக்கடன்களை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அதேபோன்று கிழக்கில் இக்கடன் திட்டம் சம்பந்தமான நடவடிக்கைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும் என புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் பதுறுதீன் தெரிவித்தார்.
கடன் பெறுவதற்காக விண்ணப்பிப் போருக்கு இலங்கை வங்கியூடாக அக்கடன்கள் வழங்கப்படுமெனவும் அக்கடன் தொகை 4 வீத வட்டியுடன் பத்து வருடத்திற்குள் அறவிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment