ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வைபவத்தில் 59 அமைச்சர்களும் 31 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மற்றுமொரு அமைச்சர் பாராளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்
இந்த அமைச்சரவையில் 10 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தி.மு. ஜயரட்னவும் இதில் அடங் குவார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும்பாலானோர் அதே அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுள்ளனர்.
இதேநேரம், முன்பு அமைச்சர்களாக இருந்த 9 பேரின் அமைச்சுப் பொறுப்புக் களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், 16 பிரதி அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த அமைச்சரவையில் வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம், லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் புதியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான பiர் சேகுதாவூத், ஏ.ஆர்.எம். அப்துல் காதர், ஏர்ள் குணசேகர ஆகியோர் பிரதிய மைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன புத்த சாசன மத அலுவல்கள் அமைச்சராகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராகவும் டியூ. குணசேகர மனிதவள அமைச்சராகவும் ஏ.எச்.எம். பெளஸி நகர அபிவிருத்தி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய நீதியமைச் சராகப் பதவியேற்றார்.
சிரேஷ்ட அமைச்சர்கள் 9 பேரின் அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள் ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், ஏ.எல்.எம். அதாஉல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை. அதேவேளை பிரதியமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரZதரன், முத்து சிவலிங்கம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களிலும் மாற்றம் ஏற்படவில்லை.
புதிய பிரதியமைச்சராக ஏ.ஆர்.எம்.ஏ. காதர், பiர் சேகுதாவூத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா வகித்த சுற்றாடல் பிரதியமைச்சர் பதவிக்குப் பதிலாக தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறை பிரதி அமைச்சராக அவர் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அதாவுத செனவிரட்ன, டியூ. குணசேகர, பி. தயாரட்ன, ஏ.எச்.எம். பெளஸி, எஸ்.பி. நாவின்ன, பியசேன கமகே, திஸ்ஸ விதாரண, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க போன்றோரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பிரதியமைச்சர்களான சரத் அமுனுகம, சந்திரசிறிகஜதீர, ரெஜினோல்ட்குரே, சாலிந்த திசாநாயக்க, டிலான் பெரேரா, ஜகத் புஷ்பகுமார, டி.பி. ஏக்கநாயக்க, மஹிந்த அமரவீர, எஸ்.எம். சந்ரசேன, குணரத்ன வீரக்கோன், மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அலுத்கமகே, தயாசிறித திசேரா, ரஞ்சித் சியம்பலாபிடிய, ஜகத் பாலசூரிய, நவீன் திசாநாயக்க, ஆகியோர் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராகவும், வாசுதேவ நாணயக்கார தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சராகவும் லக்ஷ்மன் செனவிரட்ன, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
முன்பு பிரதியமைச்சர்களாகவிருந்து அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களாகியுள்ள சரத் அமுனுகமவிற்கு சர்வதேச நிதி விவகார அமைச்சும் சந்திரசிறி கஜதீரவிற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சும், ரெஜினோல்ட் குரேவுக்கு சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சும் சாலிந்த திசாநாயக்கவிற்கு சுதேச மருத்துவ அமைச்சும் டிலான் பெரேராவிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சும் ஜகத் புஷ்பகுமாரவிற்கு தெங்கு அபிவிருத்தி, ஜனதா தோட்ட அபிவிருத்தி அமைச்சும் டி.பி. ஏக்கநாயக்கவிற்கு கலை, கலாசார அமைச்சும், மஹிந்த அமரவீரவிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சும், எஸ்.எம்.சந்திரசேனவிற்கு கமநல சேவைகள் வனவிலங்குகள் தொடர்பான அமைச்சும் குணரத்ன வீரக்கோனுக்கு மீள்குடியேற்ற அமைச்சும் மேர்வின் சில்வாவிற்கு பொது சன உறவுகள் மற்றும் பொதுசன விவகார அமைச்சும், மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு விளையாட்டுத் துறை அமைச்சும் தயாசிறி திசேராவிற்கு அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சும் ஜகத் பாலசூரியவிற்கு தேசிய மரபுரிமை அமைச்சும் நவீன் திசாநாயக்கவிற்கு பொது முகாமைத்துவ சீர்த்திருத்த அமைச்சும் வழங்கப்பட்டுள்ளன.
நேற்றைய இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவும் பிரதியமைச்சர் சுனில் விஜேசேகரவும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை.
0 commentaires :
Post a Comment