11/12/2010

அமைச்சரவை முடிவுகள்*கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரப் பிரிவிற்காக 44.6 மில்லியன் ரூபா

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரப் பிரிவிற்காக 44.6 மில்லியன் ரூபா செலவில் கேட்போர் கூடமொன்றையும் விரிவுரை மண்டபமொன்றையும் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தவிர 180 மில்லியன் ரூபா செலவில் களனி பல்கலைக்கழகத்தில் வாசிகசாலையொன்றை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
கொழும்பு பல் வைத்திய நிலையத்திற்காக 694 மில்லியன் ரூபா செலவில் 10 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.
ஏற்கனவே இருந்த பல் வைத்திய நிலையக் கட்டிடம் உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
403.7 மில்லியன் ரூபா செலவில் ஹோமாகம, காலி மற்றும் அநுராத புரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் திட் டங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
வடக்கில் தெரிவு செய்யப்பட்ட தேசிய, மாகாண வீதிகளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 173 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன் அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் கீழ் 142 கிலோ மீட்டர் நீளமான வீதிகள் புனரமைக்கப்படும்.
2010ல் ஆரம்பித்த 5 வருடங்களில் இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்படும்.
மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தை ஹோமாகமவுக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இங்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய நிறுவனம் அமைக்கப்படும்.
பதுளை, கந்தகெடியவில் சிறியநீர் மின் நிலையமொன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு உமாஓயா ஊடக நீர் வழங்கப்படும்.


0 commentaires :

Post a Comment