கிழக்கு மாகாண சபையின் 2011ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23.11.2010 அன்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று வரவு செலவுத்திட்ட ஆரம்ப உரை முதல்வர் சி. சந்திரகாந்தனால் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு முதல் நாளான நேற்று ஆளுணர் செயலகம், பிரதம செயலகம்,பொது நிருவாக சேவைகள் செயலகம் தொடர்பான நிதி ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பிற்பகல் கூடிய சபை அமர்வின்போது முதலமைச்சரின் கீழ் வருகின்ற அமைச்சுக்கள் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. உள்ளுராட்சி திணைக்களம், கிராமியஅபிவிருத்தி, உல்லாசத்துறை, மீள்குடியேற்றம், மனிதவலு தொடர்பான நிதி ஒதுக்கீடு சார்ந்த விவாதம் மிகவும் காரசாரமாக இடம் பெற்றது. இச் சபையானது இரவு 10.00மணிவரை இடம் பெற்றது விசேட அம்சமாகும். இறுதியில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது சபையில் இருந்த அனைவருமே ஏகமானதாக ஏற்றுக் கொண்டார்கள். எதிர்க்கட்சி சார்பில் அப்போது அவையிலிருந்தவர்களான துரைரெட்ணம்,றஸாக்,வரதன்,மஜீத் ஆகியோர் ஆதராக தங்களது வாக்குகளை அளித்தார்கள்.
இன்று(24.11.2010) இரண்டாம் நாளாக கூடிய சபையில் விவசாயஅமைச்சு மற்றும் கல்வி அமைச்சு தொடர்பான ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இன்று இரவு 8.00மணிவரை இடம்பெற்ற அமர்வானது. நாளை காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடும் என தவிசாளர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment