சீன ஜனாதிபதி ஹியு ஜுண்டாவோ மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை பிரான்ஸ் பயணமானார்.
ஐரோப்பிய யூனியனூடான வியாபார முரண்பாடுகளைக் களைதல், ஜீ 20 நாடுகளின் தலைமையை பிரான்ஸ் வகிப்பது தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸியுடன் சீன ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜி 20 நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் தென் கொரியாவில் இடம் பெறவுள்ளது. இம் மாநாட்டையடுத்து ஜி 20 நாடுகளின் தலைமையை பிரான்ஸ் பொறுப் பேற்கவுள்ளது.
உலக நிதி நெருக்கடி தொடர்பாக மிக முக்கியமான தீர்மானங்கள் தென் கொரியாவில் இடம்பெறும் மாநாட்டில் எடுக்கப்படவுள்ளன.
இங்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுக்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கவுள்ளன. காலநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்குத் தீர்வு காண சீனா ஒத்துழைப்பு வழங்குவதில் பின் நிற்கின்றது.
சீனாவின் நாணயப் பெறுமானம் குறித்த ஐரோப்பிய யூனியனின் நிபந்தனைகளை ஏற்கும் நிலையில் சீனா இல்லை.
இதனால் இழுபறிகள் தொடர்கின்றன. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சீனாவின் நிதியமைச்சர், ஜி-20 மாநாட்டில் சீனா மீது பலப்பிரயோகம் செய்யப்படுவதை நாங்கள் வரவேற்க மாட்டோம். சீனாவின் நாணயப் பெறுமானம் சர்வதேச நிதி நெருக்கடிக்கு அதிசயமான தீர்வு பிரான்ஸ் ஜனாதிபதி பொறுமையாக இருந்து ஒவவொருவரையும் அவதானிக்க வேண்டுமென்றார்.
சீனா, பிரான்ஸ் வர்த்தக உறவுகள் 2008 இல் பாதிப்படைந்தன. சீனாவின் சர்ச்சைக்குரிய தலைவர், தலாய்லாமாவை பிரான்ஸில் சர்கோஸி சந்தித்ததால் இந் நிலையேற்பட்டது.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் சீன ஜனாதிபதி போர்த்துக்கல் செல்லவுள்ளார். சீன ஜனாதிபதியின் வருகையை யொட்டி பிரான்ஸின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment