ஆரையம்பதித.ம.வி.பு கட்சியின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் அமரர் குமாசுவாமி நந்தகோபனின் இரண்டாம் ஆண்டு நினைவு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று த.ம.வி.பு கடசியினால் அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட நிகழ்வாக ஆரையம்பதி முருகப்பெருமான் ஆலயத்தில் அவரது ஆத்மாசாந்தி வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு. ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் மாபெரும் எழுச்சி பேரணி கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இதன்போது ஆரையம்பதி பிரதேசத்தில் 5ம் தர புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமரர் ரகு அவர்களின் நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு மாபெரும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்று த.ம.வி.பு கட்சியின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.வாழைச்சேனை
த.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர்அமரர் குமாரசுவாமி நந்தகோபன் அவர்களின் நினைவு தினததை ஒட்டி இன்று வாழைச்சேனை பேத்தாழையில் அமைந்துள்ள குகநேசன் கலாச்சார மண்டபத்தில் நினைவுநாள் நிகழ்வுகளும் ஒன்றுகூடல் ஒன்றும் இடம்பெற்றது. அவரது 2ம் ஆண்டு நினைவு நாளான இன்று வாழைச்சேனை பிரதேசத்தில் இருக்கின்ற வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு. அப்பிரதேசத்தை சேர்ந்த வறிய பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் தையல் இயந்திரமும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தற்போதைய தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment