11/08/2010

வடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித நடவடிக்கை

வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட் டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாட சாலைகளே இந்த திட்டத்தின் கீழ் தர முயர்த்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
இவ்வாறு தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்களை பட்டியல் இடுவது தொடர்பாக ஆராயும் இறுதி கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, முமாரசுவாமி மண்ட பத்தில் நடைபெறவுள்ள இக்கலந்து ரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங் கோவன், மாகாண கல்விப் பணிப்பாளர் பி. விக்ணேஷ்வரன், பாடசாலை அதிபர்கள், உட்பட உயர் அதிகாரிகளும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 commentaires :

Post a Comment