11/30/2010
| 0 commentaires |
இலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலிலும் சேரும் பாகிஸ்தான் ஜனாதிபதி கூறுகிறா
11/29/2010
| 0 commentaires |
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவு _
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. தற்போதைய துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் உள்ளிட்ட 12 பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தனர்.
தெரிவு சபையில் இருந்து 21 பேர் தலா 3 வாக்குகள் மூலம் வாக்களித்தனர். இவர்களில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹோல் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு பதிவாளரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவரை ஜனாதிபதி புதிய துணைவேந்தராக தெரிவு செய்வார்
| 0 commentaires |
ஐ. நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன ஒத்துழைப்பு தினம் இன்று
இதன்போதும் அதன் பின்ன ரும் இஸ்ரேலை விஸ்தரிப்பதற்காக மேற் கொண்ட மனித படுகொலைகள் மற்றும் கொடூரமான சித்திரவதைகள் என்பன தொடர் பான புகைப்படங்கள் பலஸ்தீன ஒத்துழைப் புத் தினமான இன்று கொழும்பு ஜயவர்தன நிலையத்தில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பலஸ்தீன தாயக பூமியிலிருந்து வெளி யேற்றப்பட்ட தாய்மார்கள், தந்தையர்கள், குழந்தைகள் தமது மூல வாசஸ்தலங்களுக்குச் செல்வதற்கு இன்னமும் ஆவலாய் இருக்கின்றனர்.
பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ள நிலப் பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலுக்கு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள வற்புறுத்தலும் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள வெறும் வார்த்தை களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளன.
உலக மக்களின் அபிப்பிராயம், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் என்ற வடிவில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தத் தீர்மானங்கள் அனைத்தும், உலக வல்லரசுகள் என்று கூறிக்கொள்வோரின் வீட்டோ அதிகாரங்களுக்கு முன்னால் வெறும் வார்த்தைகளாக மாத்திரமே காட்சியளிக்கின்றன.
‘ஜனநாயகம், நியாயத்தன்மை, மனித உரிமைகள் என்றெல்லாம் போற்றிப் பேசப்படும் இன்றைய யுகத்திலே, பலஸ்தீனமானது இன்னமும் காலனித்துவ நாடொன்றாகக் காணப்படுவது கவலைக் குரிய விடயமல்லவா?
பேர்லின் பெரும் சுவர் பூமியுடன் தரைமட்டமாக்கப்பட்டுள்ள இவ்வாறான தொரு யுகத்திலே, பலஸ்தீன பூமியைச் சுற்றி இனவாத மதிலொன்று கட்டப்பட்டு பாலஸ்தீன மக்கள், இன்று திறந்த சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டுள் ளனர்.
இதற்குள் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றினைக் கொண்டு செல்ல முடியாதவாறு தடைவிதிக்கப்பட் டுள்ளது.
இந்தத் தடைக்கு மத்தியில் பலஸ்தீனர்கள் நாளாந்தம் இனப்படுகொலை செய்யப்பட்டு வருவதனை நாம் காணுகின் றோம். குண்டுத் தாக்குதல்கள் தடைசெய்யப் பட்ட வாயுக்களினை பயன்படுத்தி மேற்கொள்ளும் பயங்கரத் தாக்குதல்கள் என்பவற்றினையும் நாம் காணக்கூடியதாக உள்ளன.
பலஸ்தீன மக்களுக்கு உணவுவகைகள், மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றினைக் கொண்டு செல்வதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் இன்று பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதையும் நாம் பார்க்கிறோம்.
இவற்றினைக் கண்டித்து வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கோல்ட் ஸ்வின் அறிக்கை பற்றியும் நாம் அறிவோம். எனினும் இவை அனைத்திற்கும் முன்னால், பலஸ்தீனத்தில் சுதந்திரம் மற்றும் சனநாயகம் என்பவற்றைத் தோற்றுவிப்பது பாரிய சவாலாக உள்ளது.
இவ்வாறான சவால்மிக்க சூழ்நிலையிலும் கூட, தாய் நாட்டின் சுதந்திரத்திற்கு போராட்டத்தினை பலமிக்க முறையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக மேற்கொண்டுவரும் பலஸ்தீன மக்களுக்கு, இலங்கை மக்களாகிய நாம் பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றினை அடைவதற்காக அவர்கள் கொண்டு செல்லும் போராட்டத்திற்கு எமது ஒத்துழைப்பினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். எனவே அவர்களின் விடுதலைக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்.
| 0 commentaires |
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 2)
ஜோர்ஜ் இ,குருஷ்சேவ்
தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதது போல. மக்கள் வதைமுகாமுக்குள் வதைக்கப்படுகிறார்களாம்? ஆடு நனைகிறது என்று இந்த இரத்தவெறி பிடித்த ஓநாய்கள் அழுகின்றன,
மனித உரிமை மீறல்கள்,,, அது பெண்;கள் மீதான வன்முறையாக இருந்தால் என்ன? தங்கள் வாழிடங்களில் வாழ முடியாமல் தடுத்து நிறுத்தப்படுவதாக இருந்தால் என்ன? குற்றம் சாட்டும் போது. ஆதாரங்களுடன் வெளியிடும் போது தான் அதற்கு வலிமை இருக்கும், அது குறித்து மேலதிகமாக நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க முடியும், புலன் பெயர்ந்த தமிழர்களைக் குசிப்படுத்துவதற்காக. தமிழக அரசியல்வாதிகள் பாணியில்,,, அங்கே தமிழ்ப் பெண்;களின் மார்பகங்கள் அறுக்கப்படுகின்றன என்று உணர்ச்சிப் பேச்சுப் பேசுவதால்; எந்தப் பயனும் இல்லை,
சரி. கற்பழிப்பு. கொடுமை என்கிறீர்கள், உங்களில் யார் சர்வதேச மன்னிப்புச் சபை. மனித உரிமைகள் கண்;காணிப்பகத்துடன் இங்கே தொடர்பு கொண்;டு. அங்கே இன்னாருக்கு இன்ன நடந்தது. இது குறித்து ஆவணப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நோக்கம் எல்லாம் இந்த தமிழ்ப் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு இந்த புலன் பெயர்ந்த கூட்டத்தைக் குசிப்படுத்தி காசு பண்ணுவது மட்டும் தான்,
எங்கள் எதிரி மீதான obsession எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்;டும் என்பதற்காக எங்கள் மூக்கை நாங்களே அறுத்துக் கொள்ள வைக்கிறது, அகதி முகாம்களை வதை முகாம்கள் என்றோம்,,, கிட்லரின் உழnஉநவெசயவழைn உயஅp வதை முகாம்களோடு ஒப்பிட்டு, அவர்கள் எல்லாம் விசவாயு அடித்துக் கொல்லப்படுவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று,
கனடாவிலும் அமெரிக்காவிலும் இரண்;டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியர்கள். ஜெர்மானியர்கள். இத்தாலியர்கள். உக்ரேனியர்கள் என நேசநாடுகளுடன் எதிர்த்துப் போரி;ட்ட நாடுகளின் வம்சாவளியினர் iinternment camps எனப்படும் முகாம்களில் உளவுக்குற்றச்சாட்டிலும் ஆதரவு வழங்கிய சந்தேகத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள், ழேலியல் விஞ்ஞானி டேவிட் சுசுகி கூட இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர் தான், இந்த வாரம் கூட ரொறன்ரோ ஸ்டாரில் இத்தாலியர்கள் கனடாவில் இவ்வாறு அடைக்கப்பட்டிருந்ததை ஆவணப்படுத்துவதற்கு மத்திய அரசு தடுத்து வைக்கப்பட்டிருந்த இத்தாலியர்களிடம் விபரம் கேட்டிருக்கிறது,
இப்படியான தடை முகாம்களை இனப்படுகொலை செய்வதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் க்pட்லரின் வதை முகாம்கள் என்று நாங்கள்,,, ஓநாய் வருகிறது என்று கூச்சல் போட்டுக் கொண்;டிருந்தோம், யாருமே கண்க்கெடுக்கவில்லை,
இந்த முகாம்களில் விபசாரம் நடக்கிறது என்று வாய் கூசால் அன்று அபலைகளாக வந்திருந்த எல்லாப் பெண்;கள் மீதும் விபசார முத்திரை குத்தினோம், எங்களுக்கு எங்கள் மூக்கு போனது பிரச்சனையில்லை, எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்;டும் என்பது முக்கியம்,
மகிந்த மீது இனப்படுகொலை மீதான விசாரணை; நடக்க வேண்;டும் என்று கூக்குரலிடுகிறோம், இங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது கூட. கனடிய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த தமிழ் புத்திசீவிகளும் இனப்படுகொலை என்று கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொண்;டிருந்தார்கள், காரணம் பொஸ்னியாவில். டோனில். றுவார்;டாவாவில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேசம் காட்டிய அக்கறையை எங்களிடம் காட்டும் என்ற அற்ப நம்பிக்கையில்,
இனப்படுகொலை என்பதற்கான வரைவிலக்கணம் என்ன? கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பது உண்;மை, ஆனால் தமிழர்கள் எல்லாரும் கொல்லப்படவில்லை, தமிழர்கள் என்ற வெறும் காரணத்திற்காக. போராட்டங்களில் எந்த சம்பந்தமும் இல்லாத எல்லாத் தமிழர்களையும் கொன்றால் அது இனப்படுகொலை, ஜெர்மனியில் யூதர்களுக்கும் றுவார்;டாவில் ருற்சிகளுக்கும் பொஸ்னியாவில் முஸ்லிம்களுக்கும் நடந்தது இதுதான்;, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டதை massacre, slaughter எனறு யுத்தக் குற்றங்கள் என்ற வரையறைக்குள் அடக்கலாமே தவிர. இனப்படுகொலை என்று நாங்கள் சர்வதேசத்தை நம்ப வைக்க முடியாது, தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கத்தில் அப்பாவி மக்கள் செறிந்த இடங்களில். தீவிரவாதிகள் மறைந்திருந்தாலும் குண்;டுதாக்குதல்கள் நடத்துவது யுத்தக் குற்றங்களுக்குள் அடங்கும், தெரிந்து கொண்;டு திட்டமிட்டு மக்கள் அழிவைக் கருத்தில் எடுக்காமல் நடத்தும் தாக்குதல்கள் சர்வதேச கண்;டனத்திற்குரியவை, அதைச் சாதகமாக்கி யுத்தக் குற்றங்களுக்கு விசாரணை; நடத்த வேண்;டும் என்று கோருவது நியாயமானது, ஆனால் இன அழிப்பு என்று கூச்சல் போடுவது அந்த நியாயத்தை மழுங்கடிக்கவே உதவும் என்பதை இவர்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை, தமிழர்கள் எல்லோரும் கொல்லப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் எப்படி கொழும்பு வந்து கனடாவில் அகதிளாகுகின்றீர்கள் என்று கேட்க மாட்டார்களா?
வை,கோ. சீமான் சொல்லும் தமிழ்ப் பெண்கள் கதறக் கதற கற்பழிக்கப்படுகிறார்கள். தமிழ்த் தாய்மாரின் மார்பகங்கள் அறுக்கப்படுகின்றன என்பதெல்லாம் இனஅழிப்பு விசாரiர்யில் சாட்சியமாகப் பயன்படுத்த முடியாது, யுத்தக்குற்றத்திற்கான ஆதாரங்களைத் தேட நீங்கள் எங்கே ஒற்றுமையாக இருக்கிறீர்கள் நீங்கள் ஆளை ஆள் துரோகி என்று புலிகளின் சொத்துக்களைக் கைவசப்படுத்த சண்;டை போட்டுக் கொண்;டிருக்கிறீர்கள்,
Genocide என்று கூச்சல் போட்ட நாங்கள் தான் முஸ்லிம்களை வெளியேற்றி ethnic cleansing செய்ததை எந்த முகத்தோடு நியாயப்படுத்தப் போகிறோம்? வெள்ளைக் கொடியோடு வந்த புலிகளின் தலைவர்களை படுகொலை செய்தது பற்றி நாங்கள் குமுறுகிறோம், சரணடைந்தவர்களைக் கொல்வது யுத்தக் குற்றம் தான்;, ஆனால் இதே புலிகள் தான் மக்கள் வெள்ளைக் கொடிகளோடு தப்பிச் செல்லும்போது சுட்டு விட்டு இராணுவம் சுட்டது என்று வெளிநாட்டில் செய்தி வெளியிட்டார்கள் என்ற உண்மையை மறந்து விடுகிறோம், மக்கள் போக விரும்பவில்லை. புலிகளோடேயே இருக்க விரும்புகிறார்கள் என்று சொன்ன நடேசன். எந்த முகத்தோடு வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்;டு தன்னுடைய உயிரைக் காப்பாற்ற எதிரியிடம் சரண்டைந்தார் என்ற கேள்வியை இன்று வரைக்கும் கேட்க ஒருவரும் தயாராயில்லை, காரண்ம். தங்களுடைய தறுதலைகளின் பொட்டுக் கேடுகள் வெளியில் வந்து விடும் என்ற பயம்,
யுத்தக்குற்றச்சாட்டுக்கள் பற்றிச் சொல்வோர் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள மறந்து விடுகிறார்கள், ஐ,நாவோ. சர்வதேச ச்முகமோ நாங்கள் கேட்பது போல. மகிந்தவை மட்டும் விசாரணைக்குட்படுத்தாது, இந்தக் கோரிக்கை double edged sword என்பது போல. எங்களையும் வெட்டித் துண்;டாடும், ஆரம்பத்திலிருந்தே ஐ,நாவும் மற்ற சர்வதேச அமைப்புகளும் புலிகள் மீதும் யுத்தக் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்;டும் என்றே கூறி வருகின்றன, அவ்வாறான நிலை வரும் போது. அரசு என்ன செய்யும். தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கே,பி தொடக்கம் புலிகளின் இடைமட்டத் தலைவர்களைப் பயன்படுத்தி. புலிகளின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தும், அதற்கு நாங்கள் தயாரா நாங்கள் தான் எதிரியின் சகுனம் பிழைக்க எங்கள் மூக்கை அறுக்கும் பழக்கமுடையவர்கள், எதிரியை அவமானப்படுத்த வேண்;டும் என்ற ஒரே நோக்கில் அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம்,
மகிந்தவை மட்டும் குறை சொல்லிக் கொண்;டிருக்கிறோம், யாழ்ப்பாண்த்திலிருந்து வந்திருந்த ஒரு குருவானவரிடம் கேட்டேன்,,, தமிழர்களை புலனாய்வுத் துறை கடத்திக் கொல்வதைப் பற்றி,
அவர் ஒரு வார்த்தையில் சொன்னார்,,, அட. இவங்கள் செய்யாத என்னத்தை அவங்கள் செய்தாங்கள்
அரசியல் வேலைக்காக என்று வந்து ஆடிய ஆட்டத்தால் அவ்வளவுக்கு புலிகளால் மனம் சலித்துப் போயிருந்தவர்கள் யாழ்ப்பாண்த்தவர்கள், புலிகளை விட. இராணுவம் பரவாயில்லை என்ற மனநிலையில் இருந்தார்கள், நாங்கள் இங்கே இருந்து கொண்;டு மகிந்த மீது கறுவிக் கொண்;டிருக்கிறோம்,,, எங்கள் தறுதலையின் சேட்டைகளைப் பற்றிக் கதைக்காமல்?
அடுத்ததாக. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் victims என்ற முகமூடியுடன் அனுதாபம் தேடத் தொடங்கியிருக்கிறோம், நாங்கள் அப்பாவிகளைப் போட்டு அடிக்கும் போது தட்டிக் கேட்பவர்களைப் பார்த்து. பேசாமல் உன்ரை வேலையைப் பார் என்று சொல்கின்ற நாங்கள் எங்களுக்கு அடி விழும்போது ஐயோ. இந்த அநியாயத்தை கேட்பார் யாருமே இல்லையா என்று ஒப்பாரி வைப்பது எங்கள் பழக்கமாகவே இருந்து வருகிறது,
உங்களுக்குத் தெரியும். பள்ளிக்கூடங்களில் சில மாணவர்கள் மற்றவர்களுடன் சொறிச்சேட்டைகளில் ஈடுபடுவார்கள், காரணமில்லாமல் அடிப்பார்கள், ஒரு பெடிப்பிள்ளை ஒருநாள் விசயம் தெரியாமல் ஒரு அப்பாவியின் மேல் கை வைத்திருக்கிறார், அதுவரை நாள் பொறுத்திருந்த அப்பாவி திருப்பி விளாசி விட்டான், இவர் அழத் தொடங்கியிருக்கிறார், வாத்தியார் கண்;டு வந்து கேட்டார், ஆர் சண்;டை தொடக்கினது அப்பாவி சொன்னான். அவன் தான் முதலில் எனக்கு அடிச்சான், மற்றவர் சொன்னார். இல்லை. அவன் தான் முதல்ல எனக்கு திருப்பி அடிச்சான்,
நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் இவ்வாறானது தான், சண்;டையைத் தொடங்கி அடி வாங்கி விட்டு அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா என்ற ஒப்பாரி, எங்கட தலைவருக்குத் திருப்பி அடிச்சுப் போட்டான் என்பது தான் எங்களின் பிரச்சனை, ஏன் தலைவர் முதல் அடிச்சார் என்று கேட்க மாட்டோம், ஏனென்றால் அது எங்கள் செல்லப்பிள்ளை,
ரொறன்ரோ நகரத்தைச் சுற்றி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது, நெஞ்சில் அடித்துக் கதறிக் கொண்;டே காப்பாத்து. காப்பாத்து என்று பகிரங்கமாக வெட்கத்தை விட்டு ஓலமிடுகிறோம், பார்த்தால். ரொறன்ரோவின் மையப் பகுதியின் முனையான யூனியன் சப்வே நிலையத்தின் முன்பாக. கெரில்லாச் சீருடையில் நெஞ்சை நிமிர்த்தி ஒரு கூட்டம் போஸ் கொடுக்கிறது, நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் மீது இரக்கம் கொண்;டு காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறோமா இல்லை. பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்ட இயக்கத்தை அங்கீகரித்து எங்கள் பயங்கரவாதத்தை அங்கீகரியுங்கள் என்கிறோமா
தலைவர் இறந்து விட்டார் என்றதும் கருப்பு உடைகளுடன் போய் பகிரங்கமாவே மரணச் சடங்கில் ஒப்பாரி வைத்தது போல கூத்துக் காட்டுகிறோம், நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஏன் புலிக் கொடி பிடிக்கிறோம்
யாழ்ப்பாணத்தவர்கள் தங்களை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அருவருப்பும் எரிச்சலும் தான் வருகிறது, வன்னி மக்கள் தாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருணை காட்டுமாறு கேட்பதில் நியாயம் இருக்கிறது, யாழ்ப்பாணத்தவர்களைப் போல மணி ஓடர் பொருளாதாரத்தை நம்பியிராமல். மண்;ணையும் மழையையும் நம்பி வாழ்ந்த மக்களை எதிரியிடம் கை ஏந்த வைத்தது யார்? அந்த பூமியை ஆக்கிரமித்து அவர்களின் பொருளாதாரத்தைக் கெடுத்ததுமல்லாமல். அவர்களின் குழந்தைகளைப் பிடித்துக் கொண்;டு போய் பலி கொடுத்த கூட்டம் அந்த அகதிகளைக் காட்டிப் பிச்சை எடுக்க முயற்சிப்பதைப் பார்த்து அருவருப்படையாமல் என்ன செய்ய முடியும்?
இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசியல்வாதி வந்தால் என்ன? வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் வந்தால் என்ன கண்ணீPரும் கம்பலையுமாய் காணாமல் போன தங்கள் பிள்ளைகளை. கணவன்மாரை கண்;டுபிடித்துத் தருமாறு கெஞ்சும் அந்த மக்கள் தங்களை பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது,
யாழ்ப்பாணம் தன்னை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறும்போது எரிச்சல் வராதா தன் கையில் அதிகாரமும் ஆதிக்கமும் இருக்கும் போது தனக்குக் கீழானவர்களை நாயிலும் கேவலமாக நடத்துவதில் யாழ்ப்பாணம் கை தேர்ந்தது, தன்னுடன் அதே பூமியில் வாழ்ந்த மக்களை தீண்;டத்தகாதவர்கள் என்று சொல்லி கோயில்களிலும் உணவகங்களிலும் சமமாக நடத்தாமல் திமிர் காட்டிய பூமி அது, அந்த மக்கள் தாங்களும் மனிதப் பிறவிகள் என்பதை நிலை நாட்ட எத்தனை போராட்டங்கள் நடத்த வேண்;டி வந்தது. அந்த மக்களை அடக்கி வைத்திருந்த இந்த யாழ்ப்பாணத்திற்கு தன்னை ஒரு பாதிக்கப்பட்டவர் என்று சொல்வதில் வெட்கமாயில்லையா?
மலையகத்திலிருந்து சின்னம் சிறுசுகளைக் கொண்டு வந்து அடிமைகளாக வைத்து வேலை வாங்கியது தானே இந்த யாழ்ப்பாண்ம். பழஞ்சோறு கொடுத்து. கொதி எண்;ணெய் ஊற்றி. நஞ்சு வைத்துக் கொன்று என யாழ்ப்பாணம் செய்த கொடுமைகளை நேரில் கண்;டவன் நான், அங்கே சாப்பாடு இல்லாமல் கிடந்ததுகளுக்கு கொண்டு வந்து சாப்பாடு குடுத்தனாங்கள் தானே என்று ஏதோ புண்ணியம் செய்த திமிர்க்கதை கதைத்து இந்த யாழ்ப்பாணம், இந்த சமூகத்திற்கு தன்னை ஒரு பாதிக்கப்பட்டவர் என்று ஒப்பாரி வைக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
அந்த மண்ணில் நூற்றாண்;டுகளாக வாழ்ந்த இஸ்லாமிய மக்களை சொத்துக்களைப் பறித்து மர்p நேரத்திற்குள் விரட்டிய போது. கயிறு கட்டிப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று கயிறு திரித்தது தானே இந்த யாழ்ப்பாணம், தன் மீது இரக்கம் காட்டு என்று சர்வதேச சமூகத்திடம் மன்றாட இந்த சமூகத்திற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
மட்டக்களப்பிலிருந்து ஈழத்திற்காகப் போராட என்று வந்த போராளிகளை எரியும் டயருக்குள் எறிநத் போது கோலாக் கொடுத்த சமூகம் தானே இது, வன்னியிலிருந்து பிள்ளைகளைப் புலிகள் பிடித்து கட்டாயப் படை சேர்ப்பில் ஈடுபடுகிறார்கள் என்று சர்வதேசமே குற்றம் சாட்டிய போது. அவர்கள் விரும்பிச் சேர்கிறார்கள் என்று புலுடா விட்ட கூட்டம் தானே இது,
ஐயோ. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா என்று புலம்ப இந்த சமூகத்திற்கு என்ன மனச்சாட்சி இருக்கிறது
அதிகாரத்திலிருக்கும் போது செய்த அநியாயத்திற்கு பட்டு அனுபவிக்கும்போது எவன் வருவான் உங்களை மீட்க..
அநாதைப் பிணத்தைக் காட்டி கிடைக்கும் காசைச் சுருட்டும் திருட்டுக் கூட்டம் போல. அந்த அப்பாவிகளைக் காட்டி புலிகளுக்கு அங்கீகாரம் தேடி. ஈழம் பெறும் முயற்சிதான் நடக்கிறது,
இப்படிக் குத்தி முறிந்து குளறியும் யாருமே ஏன் நாயே என்று கேட்கவில்லை,
விடுமா இந்தக் கூட்டம்
இனிமேல் ஆயுதப் போராட்டம் இல்லை, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டோம், இன்று முதல் அகிம்சைப் போராட்டம், பாராளுமன்ற அரசியல் தான் தீர்வு,
யுத்தம் முடிந்து பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது, கூட்டமைப்பா? குதிரையமைப்பா? என்ற போட்டி, புத்தருக்கு போதி மரத்துக்கு கீழே ஞானம் பிறந்தது போல. இவர்களுக்கும் ஞானம் பிறக்கிறது, யுத்த முடிவில் கே,பி சொன்ன ஆயுதங்களை அமைதியாக்கும் கதையல்ல இது,
ஆயுதப் போராட்டத்தை கைவிடுகிறோம், இனிமேல் அரசியல் தீர்வு தானாம்,
என்ன கதை ஐயா இது? உங்களிடம் எங்கே இருக்கிறது ஆயுதம். கீழே வைப்பதற்கு? அவன் தானே வந்து எல்லாவற்றையும் பிடுங்கி கௌபீனத்தோடு விட்டு விட்டான், இதென்ன புதக்கதை. இன்று வரைக்கும் உங்கள் புனிதப் போராளிகள் தான் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் காட்டிக் கொடு;த்துக் கொண்;டிருக்கிறார்கள்,
இது வரை காலமும் இங்கே உள்ள அரசியல் கற்றுக்குட்டிகள் எல்லாம். அரசியல் தீர்வு சரி வராது என்று தீர்க்கதரிசனத்தோடு முடிவு எடுத்துத் தான் தேசியத் தலைவர் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாக இங்கே உள்ள ஊடகங்களுக்கு கதை சொல்லிக் கொண்;டிருந்தார்கள், புலிகளின் ஆயுதப் போராட்டம் மக்களை அழிவுப்பாதைக்கு கொண்;டு செல்கிறது என்று முன்னெச்சரிக்கை செய்தவர்களைத் துரோகியாக்கி மண்;டையில் போட்டு புலி தாண்;டவம் ஆடிய போது. மெய் சிலிர்த்தவர்கள் இவர்கள், பாராளுமன்ற அரசியல் சரிவராது என்று தானே கூட்டணி உட்பட்ட சகல அரசியல்வாதிகளையும் போட்டுத் தள்ளினார்கள், இப்போது என்ன திடீரென்று
எம்,ஜி,ஆர். ஜெயலலிதா அரசுகளில் மந்திரியாக இருந்த திருநாவுக்கரசு பற்றி ஒரு கதை உண்;டு, இவருக்கு மனைவியின் தங்கை மீது ஒரு கண்;, ஒரு நாள் மனைவியைக் கோயிலுக்கு அனுப்பி விட்டு. மனைவியின் தங்கையை தன் இச்சைக்குள்ளாக்கி விட்டார், மனைவி கோயிலிலிருந்து திரும்பி வந்த போது சொன்னராம்,,,
இன்று முதன் உன் தங்கையும் என் மனைவி?
இதைப் போல இவர்களும் இன்று முதல் நாங்கள் அகிம்சைப் போராட்டம்?
ஆயுதம் கையிலிருந்த போது. புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கார் வேண்;டும் என்று சொன்னவர்களை எல்லாம் திட்டித் தீர்த்தவர்கள் இவர்கள், தலைவருக்கு எல்லாம் தெரியும், சர்வதேசம் எங்கள் விடுதலையை மழுங்கடிக்கப் பார்க்கிறது என்று வீரம் பேசியவர்கள் இவர்கள், திடீரென்று ஞானம் பிறந்து,,,
இன்று முதல் உன் தங்கையும் என் மனைவி?
ஆயுதங்களோடு பலம் வாய்ந்த நிலையில். இந்த ஆயுதப் போராட்டத்தால் நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. எங்கள் மக்களுக்கு அழிவு தான் மிஞ்சியது. இனிமேல் பேச்சுவார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காணப் போகிறோம் என்று சொல்லியிருந்தாலும் உலகம் மதித்திருக்கும்,
சமாதானப் பேச்சு நேரத்தில் புலிகள் மக்கள் படை அமைத்த போது. ஆணையிடு தலைவா. களமிறங்கக் காத்திருக்கிறோம் என்று ஊர்வலமாய் கொடி பிடித்தவர்கள் என்று. ஆயுதங்களை மட்டுமல்ல. ஆடைகளையே களைந்த பின்னால். பெரிய எடுப்பில். இனிமேல் ஆயுதப் போராட்டம் இல்லை என்றால் என்ன கதை இது
சரி. ஆயுத ஒப்படைப்பு முடிந்தது, புதிதாகத் தொடங்கியிருக்கிறது,,, நாடு கடந்த அரசாங்கம், மக்களவை, சர்வதேசப் பரப்பில் எங்கள் ஆயுதமில்லாத அரசியல் விரிவடைகிறது,
எங்களை பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்பாரி வைத்துப் பார்த்தோம், ஏனென்று யாரும் கேட்பதாய் காணோம், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுகிறோம். இனிமேல் அரசியல் தீர்வு தான் என்றும் சொல்லிப் பார்த்தோம், இந்தப் பருப்பு இங்கே வேகாது என்று தெரிந்ததும் ஆரம்பிக்கிறது வாக்களிப்புக் கூத்து, நாங்கள் எல்லாரும் வாக்களித்தால் சர்வதேசம் திரும்பிப் பார்க்குமாம், ஆகா,, ஜனநாயகத்தைக் கண்;டுபிடித்து விட்டார்கள்,
இதுவரை காலமும் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் தமிழீழத்தைக் கண்;டுபிடித்தார் என்று கதை விட்டுக் கொண்;டிருந்தவர்கள் திடீரென்று தமிழர்கள் புலிகளுக்கு முன்பாகவே ஈழத்துக்கு ஆதரவு அளித்தார்கள் என்று வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு ஆரம்பித்தார்கள்,
உலகெங்கும் 99 வீதமான தமிழர்களின் ஆதரவுடன் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு பெருவெற்றி,
மூன்று லட்சம் தமிழர்கள் வாழுகின்றார்கள் என்று மிரட்டும் கனடாவில் முப்பதாயிரம் பேர் வாக்களிப்பு, வெறும் பத்து வீதத் தமிழர்கள் தான் வாக்களிக்க வந்தார்கள் என்பதை மறைத்து 99 வீத சுத்தல் நடந்தது, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் சூத்திரதாரிகளை மண்;டையில் போட்டு விட்டு வட்டுக்கோட்டைப் பிர்த்தை தோண்;டியெடுத்து கூத்து நடந்தது,
பின்னால் நாடு கடந்த ஈழ வாக்கெடுப்பு,,, பிறகென்ன,,, எங்கட ஒற்றுமையை. பலத்தைக் காட்டியிட்டம், இதோ ஆதாரம்,,, நாங்கள் எல்லாம் ஈழத்துக்குத் தான்,,, சர்வதேசம் அங்கீகரிக்காமல் இருக்கட்டும் பாப்பம்? பிறகு நடக்கிறதை? இனிமேல் அபே ஆண்;டுவ தான்? பொங்கிப் பூரித்துப் போயிருக்கிறோம்,
திபெத்தியர்கள் கூட சமீபத்தில் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள தர்மசாலாவில் தேர்தல் நடத்தினார்கள், அவர்களுக்கு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக தலாய் லாமா உள்ளார், எங்களுக்கு எங்களுடைய முகமது பின் துக்ளக் தான் இருக்கிறார்,
ஐரிஸ் குடியரசு இராஹவத்தின் அரசியல் பிரிவான சின் பெயின் அமைப்பின் ஜெரி அடம்ஸ் ஒவ்வொரு சென்,பற்றிக்ஸ் தினத்திற்கும் வெள்ளை மாளிகைக்கு அழைத்துக் கௌரவிக்கப்பட்டிருந்தார், இனிமேல் உருத்திரகுமாரனை அடுத்த பொங்கலுக்கு ஒபாமா வெள்ளை மாளிகை நீள்வளைய அலுவலகத்தில் அழைத்து விருந்து வைப்பார் என்று இந்தத் தமிழர்கள் கனவு கண்டு கொண்;டிருக்கக் கூடும், காணும் கனவோடு கனவாக. ஐ,நா சபையில் பார்வையாளர் அந்தஸ்து பெற்று அரபாத் உரையாற்றியது போல. பான் கி மூனும் உருத்திரகுமாரனை அழைப்பார் என்று கனவைக் காணட்டும்,
இந்த நாடு கடந்த ஈழத்திற்கு புலன் பெயர்ந்தவர்களின் அங்கீகாரமும் இல்லை, ஈழத்தில் உள்ளவர்கள் ஐயோ. எங்கள் நிம்மதியைக் குலைக்காதீர்கள் என்று ஓலமிடுகிறார்கள், ஆனால் இவர்களோ சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்ற கனவில் பிரதமர். மந்திரிசபை என்று கும்மாளம் போடுகிறார்கள், ஒரு அமர்வு முடிவதற்கு முன்னாலேயே எதிர்க்கட்சி பிறந்து விட்டது, மந்திரிப்பதவி கிடைக்காதவர்கள் அரசிலிருந்து வெளியேற்றம், எங்களுக்கு வந்து கிடைத்திருக்கிற முகமது பின் துக்ளக்கு புத்தி இருந்திருந்தால். எல்லாருமே இலாகா இல்லாத மந்திரிகள் என்றிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும்,
இப்போது நாடு கடந்த அரசும் எதிர்க்கட்சியும் பாராளுமன்ற அமர்வுக்கு வெளியில் மொட்டை நோட்டீஸ் விட்டுக் கொண்;டு திரிகிறார்கள்,
இவ்வளவு திருக்கூத்து நடத்துபவர்களுக்கு இன்னமும் இன்றைய தங்கள் நிலைக்கு காரணம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு விபரமும் இல்லை, துணிச்சலும் இல்லை, இவ்வளவு கூத்து நடந்தும் இன்னமும் இவர்கள் ஒரு முழு அளவிலான உளவிசாரணைக்கு. எங்கள் மாற்றுக்கருத்து நண்;பர்களின் பாசையில் சொல்வதாயின். சுயவிமர்சனத்துக்கு தயாராக இல்லை,
ஆங்காங்கே குசுகுசுக்கிறார்கள், பொருமுகிறார்கள், முணுமுணுக்கிறார்கள், யாரும் முழுமையாக இந்த இழிவுநிலையின் அடிமுடியைத் தெரிந்து கொள்ளத் தயாராக இல்லை, காரணம்,,, தங்கள் மீது வன்முறை நிகழலாம் என்ற பயம், இதுவரையும் மற்றவர்களை வன்முறையைக் காட்டிப் பயப்படுத்தியவர்கள் என்று தங்களுக்குள் நிகழும் வன்முறைகள். மிரட்டல்கள் குறித்து மூக்கால் அழுகிறார்கள்,
புதினப்பலகையில் ஒரு கட்டுரை வருகிறது,,, புலன் பெயர் ஊடகங்கள் எல்லாம் புலிகளின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்காக இயங்கினவே தவிர தமிழ் மக்களின் நலன் சார்ந்து அல்ல, புதிய கண்;டுபிடிப்பு,
கனடிய வானொலி அறிவிப்பாளர் ஒருவர் கட்டுரை எழுதுகிறார்,,, கனடாவில் மக்களின் சொத்துக்கள் தனியார்களின் கையில் உள்ளன, அதாவது புலிகளின் சொத்துக்கள் பினாமிகளின் கையில் உள்ளன, இன்னொரு மகத்தான கண்;டுபிடிப்பு, என்னால் இன்னமும் கண்;டுபிடிக்க முடியாத ஒரு உண்;மை இருக்கிறது, இந்த மக்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார் மக்களிடம் சொத்துக்களை திருப்பிக் கொடுக்க வேண்;டும் என்றால் யாரிடம் திருப்பிக் கொடுப்பது
எங்கள் ஊரில் ரயில் என்ஜின் ராசையா அர்;iர் என்று ஒருவர் இருந்தார், சித்த சுயாதீனம் இழந்தவர், இவர் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் போலவே உடுத்தியிருப்பார், தன்னை ஒரு ரயில் சாரதியாகவே நினைத்துக் கதை சொல்லிக் கொண்;டிருப்பார், ஒரு தடவை தண்;டவாளத்தில் படுத்திருந்த யானையை தான் எப்படி ரயிலை நிறுத்தி பின்னால் போய் பெட்டிகளை கழற்றிவிட்டு வேகமாய் வந்து அடித்துக் கொன்றார் என்பதை வர்ணித்துக் கொண்;டிருந்ததை சிறுவயதில் கேட்டுக் கொண்;டிருந்தேன், தான் அடித்த அடியில் நெய் சிதறிக் கிடந்தது என்ற போது நானும் விசயம் விளங்காமல் நெய் என்றால் என்ன என்று நான் கேட்ட போது மூளை என்று சிம்பிளாய் பதில் சொன்னார்,
எங்கள் ஊரில் யாரோ இறந்த போது. பாடை கட்டி ஊர்வலமாய் கொண்;டு போய் மயானத்தில் சிதையின் மேல் உடலை வைத்து இறுதிக் கிரியைகள் செய்து கொண்;டிருக்கிறார்கள், அங்கே வந்த ராசையா அண்;ணை பிணத்தின் கையைத் தூக்கிப் பார்த்து விட்டுச் சொன்னார்,,,, ஆள் முடிஞ்சுது?
அதாவது ஊர் முழுக்கத் தெரிந்த உண்மை அப்போது தான் ராசையா அண்;ணைக்கு தெரிந்திருக்கிறது,
அதைப் போல. இருபது வருடங்களாக நாங்கள் சொல்லிக் கொண்;டிருந்த உண்மை இப்போது தான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது,
புலிகளின் ஆயுதப் போராட்டம் அழிவுக்கு வழி வகுக்கிறது, புலன் பெயர்ந்த ஊடகங்கள் புலிகளுக்கு சரியான வழியைக் காட்டாமல் சீரழிக்கின்றன, போராட்டத்திற்காக சேர்த்த பணத்தை பலர் கையாடுகிறார்கள்,
இத்தனை வருடங்களாக இதை நாங்கள் சொல்லிக் கொண்;டிருநத போது எங்களைத் துரோகிகள் என்று தூற்றியவர்கள் இன்று ராசையா அண்;ணையைப் போல இந்த உண்;மையைக் கண்;டு பிடித்துக் கொண்;டிருக்கிறார்கள்,
இருபது வருடங்களுக்கு முன் தாயகத்தில் எழுதியிருக்கிறேன்,,, யாழ்;ப்பாணத்து பிராங்கென்ஸ்டைன் பற்றி, யாழ்ப்பாணம் ஒரு பிராங்கன்ஸ்டைன் மிருகத்தை உருவாக்குகிறது, அது தன்னை உருவாக்கியவர்களையும் அழித்து தன்னையும் கடைசியில் அழிக்கும் என்று, பட்டுத்துகிலுக்கு ஆசைப்பட்டு கோவணத்தையும் இழக்கப் போகிறோம். நாயர் பிடித்த புலிவால் தமிழர்களை அழிக்கப் போகிறது என்றெல்லாம் ஏடு இட்டோர் இயலில் எழுதியிருந்தேன்,
தேசியத் தலைவர் மாதிரி நான் ஒரு தீர்க்கதரிசி இல்லை, ஆனால் என் சிற்றரிவுக்கு இந்த உண்;மைகள் அப்போதே தெரிந்திருந்தன,
இவர்களுக்கு இப்போது தான் எல்லாம் ஓடி வெளிச்சிருக்கிறது. ரயில் என்ஜின் ராசையா அண்;ணை போல?
முழுமையாக இந்த அழிவுக்கான காரணத்தை இன்னமும் அறிந்து கொள்வதில் இவர்களுக்கு விருப்பம் இல்லை,
அதுவும் எங்கள் யாழ்ப்பாணப் புத்தி தான்,
உங்களுக்குத் தெரியும், அங்கே ஒவ்வொரு ஊரிலும் பல வீடுகளில் பல இரகசியங்கள். பரகசியங்கள் இருக்கும், எல்லாருக்கும் தெரிந்தது, யாருமே அதைப் பற்றி பேச மாட்டார்கள், எங்கட பொட்டுக்கேட்டை நாங்கள் வெளியில காட்டக் கூடாது, இது யாழ்ப்பாணத்தின் எழுதப்படாத விதி, எங்கட பல்லைக் குத்தி மற்றவனுக்கு மணக்கக் குடுக்கக் கூடாது, இது என் காதுபடக் கேட்ட திருவாசகம்,
சிறுவர்களான எங்களுக்கு இதில் பல விடயங்கள் தெரியாது, வேலிச்சண்;டை வரும், கிணற்றடிச் சண்;டை வரும், அப்போது தான் யார் யாரோடு படுத்தது யார் யாருக்குப் பிள்ளை பெற்றது யார் யாருடைய பிள்ளையை அழித்தது எல்லா விபரங்களும் வானலையில் தவழ்ந்து வரும்,
எங்களுக்குக் காலங் காலமாய் கற்பிக்கப்பட்டது இது தான், பொட்டுக்கேடுகளை மூடி மறை?
இன்றைய அழிவுக்கான காரணம் என்ன? அதன் சூத்திரதாரிகள் யார் என்பதெல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் அதை பகிரங்கமாக பேசுவதற்கு நாங்கள் தயார் இல்லை, காரணம். எங்கள் பொட்டுக்கேடுகள் அம்பலமாகி விடும்,
இதனால் தான் இன்று வரைக்கும் தேசியம். புனிதப் போராளிகள். மாவீரர்கள் என்று புலுடா விட்டுக் கொண்;டிருக்கிறோம், அதைப் பேச விரும்புகிறவர்களையும் இன உணர்வைக் காட்டி ஒரு குற்ற உணர்வுக்குள்ளாக்கி. அதைக் கதைக்கிறது எத்தனை பேருடைய வாழ்க்கையைப் பழுதாக்கிப் போடும் என்று பயமுறுத்தி மூடி மறைத்துக் கொண்டிருக்கிறோம்,
இதையெல்லாம் விசாரிக்கப் புறப்பட்டால். எங்களுடைய தவறுகள் அம்பலமாகி நாங்கள் தான் குற்றவாளிகள் என்று முடிந்து விடும், இதனால் கதையை மாற்றி குஞ்சப்புவைப் போல. விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று சமாளித்துக் கொர்;டிருக்கிறோம். எங்களை?
ஒவ்வொரு சமூகத்திலும் புத்திஜீவிகள் இருக்கிறார்கள், இவ்வாறான அழிவுஜகளின் போது முதலில் மௌனம் கலைப்பது அவர்கள் தான், தங்களுடைய சமுகம் இந்த இழிநிலைக்கு வந்த காரணம் என்ன என்பதை ஆராய்வது அவர்கள் தான்,
எங்கள் சமூகத்திலிருந்த புத்திஜீவிகள் எங்கே போய் விட்டார்கள். எங்கள் சமூகத்தில் படித்தவர்கள் இருந்தார்களே தவிர. சிந்தனையாளர்கள் இருந்ததில்லை, மந்தைப்புத்தி ஜீவிகள் தான் எங்கள் இனத்தில் இருக்கிறார்கள், கோழி மேய்த்தாலும் கவுண்மேந்தில மேய்க்க வேணும் என்பதற்காக பல்கலைக்கழகம் போனவர்கள் இவர்கள், இவர்களின் சிந்தனை எந்த விதத்திலும் வளர்ச்சியடைந்ததில்லை, பல்கலைக்கழகம் போனவர்கள் கூட அதைக் காட்டி சீதனம் வாங்குவதிலேயே குறியாக இருந்தார்கள்,
எமது சமூகம் மாற்றுச் சிந்தனையாளனை அங்கீகரித்ததில்லை, அவனை மட்டம் தட்டுவதிலேயே கண்ணாயிருந்தது, தனித்துவத்தை ஜீரணிக்க முடியாத கூட்டம் இது,
இந்த சாம்பலிலிருந்து எழுந்த பீனிக்ஸ் புலி என்ன செய்யும் தமிழில் அரசியல் பிரக்ஞை. சமூகப் பிரக்ஞை உள்ள எல்லாரையும் போட்டுத் தள்ளியது, சிந்திக்கத் தெரிந்தவர்கள் மண்;டியிட வைக்கப்பட்டார்கள், ஊhயசயஉவநச யளளயளளiயெவழைn செய்யப்பட்டு அவமானத்தால் மனம் வெதும்பி வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள்,
உலக நாடுகளிலெல்லாம் முற்போக்குச் சிந்தனை கொண்;ட பல்கலைக்கழகங்கள் போல இல்லாமல் தமிழ்த்தேசியக் குட்டையில் மட்டைகளை ஊறப் போட்டுக் கொண்;டிருந்தது யாழ் பல்கலைக்கழகம், மத அமைப்புகள். இலக்கிய அமைப்புகள். ஊடகங்கள். பத்திரிகையாளர்கள் என எல்லாம் புலிகளால் மண்டியிட வைக்கப்பட்டன, ஊதுகுழல்களாக்கப்பட்டன, முடியாதவை நிர்மூலமாக்கப்பட்டன,
மற்ற இயக்கங்கள். கட்சிகளில் இருந்த சிந்திக்கத் தெரிந்தவர்கள் புலிகளால் விசேடமாகக் குறி வைக்கப்பட்டார்கள்,
திட்டமிட்டு புலிகளால் இந்த இனத்தின் சிந்தனை எழுச்சி மழுங்கடிக்கப்பட்டது, மிஞ்சியது யார்? பதவிகளுக்காகவும். தங்கள் சமூக விரோதச் செயல்களுக்குப் பாதுகாப்புத் தேடுவதற்காகவும் புலிகளோடு ஒட்டிக் கொண்;ட அயோக்கியர்கள் தான் மிஞ்சினார்கள்,
பேராசிரியர் ரத்தினஜீவன் கூல் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட போது. புலிகள் குதிரை மூலமாக மார்வர்களைத் திரட்டி நடத்திய கூத்து எங்களுக்குத் தெரியும், தற்போது அவர் மீண்;டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றதும் இங்குள்ள கொல்கலாசார வானொலி செய்தி வெளியிடுகிறது, சென்ற தடவை அவர் நியமிக்கப்பட்ட போது. மாணவர்களின் எதிர்ப்புக் காரணமாக பதவியேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
சிந்தனை எழுச்சி எப்படி வரும் ஆன்மாவுக்கான தேடல் எப்படி வரும்
தென்னாபிரிக்காவில் வுசரவா யனே சநஉடிnஉடையைவiடிn என்று உண்;மையை அறிந்து பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சி போல. எங்கள் மர்;ர்pல் எப்படி வரும்
அப்படி ஒன்று வந்தால். புலிகளால் மக்களுக்கு இழைக்கப்பட்ட அக்கிரமமும் அட்டுழியமும் அநியாயமும் அம்பலத்திற்கு வந்துவிடும். அதன் பைனான்சியர்கள் யார் என்ற உண்;மை வெளியில் வந்து விடும்,
இப்படியாக இத்தனை அழிவுகளைக்கு உள்ளாகிய பின்பும் தன்னுடைய யாழ்ப்பாண மனோபாவத்தை அழிக்க மறுத்துக் கொர்;டிருக்கிறது இந்த இனம்,
முன்பு புலிகள் இருந்தபோது. புலிகளின் போக்கு மக்களை அழிவுப்பாதைக்குள் கொண்;டு செல்கிறது என்று சுட்டிக் காட்டினோம், சும்மா அவங்களை தேவையில்லாமல் விமர்சிக்கினம். போராட்டத்தைப் பின்னடையச் செய்யினம். கொச்சைப்படுத்தினம் என்றார்கள், இப்ப அவங்களோட சேர்ந்து அடிபட்டு ஈழத்தைப் பிடிப்பம். பிறகு எங்கட பிரச்சனை தீர்த்துக் கொள்வோம் என்றார்கள்,
முன்பு கூட்டணியும் சாதிப்பிரச்சனைக்கும் இதைத் தான் சொன்னது. முதல்ல எங்களோட சேருங்கோ. பிறகு எங்கட பிரச்சனையை தீர்ப்பம்,
ஒருபோதுமே தங்களின் தவறை உணர்ந்து திருந்தும் பழக்கம் இந்த சமூகத்திற்கு கிடையாது,
இப்போது கேட்கிறார்கள்,,, அவங்கள் இப்ப இல்லை. பிறகென்னத்துக்கு பழசுகளைக் கிளறுறியள்
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர். தலைவரும் புலிகளும் புனிதமானவர்கள். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று மூடி மறைக்கவே இந்த சமூகம் இன்றும் முனைகிறது,
எங்களுடைய சமுகத்தில் இப்படி ஒருவன் மாற்றுக் கருத்தைச் சொன்னால். அவன் யார் அவனுடைய பின்னர்p என்ன என்று அவனை ஒரு வகைப்படுத்தி முத்திரை குத்தி. அவனுடைய தனிப்பட்ட விடயங்களை விமர்சித்து அவனை மட்டம் தட்டி விரட்டுவதில் அக்கறை காட்டுவதைத் தவிர இந்த சமூகம் வேறெதையும் செய்ததில்லை, குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சொல்லி வைத்திருக்கிறது இந்தச் சமூகம், ஊரோடு ஒத்தோடு என்று கற்பிக்கின்ற சமூகம் எந்த ஒரு மனிதனுக்கும் தனித்துவம் இருப்பதை மறுக்கிறது, அவன் இன்ன சாதியைச் சேர்ந்தவன். இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனது இயல்பும் பொதுவானதாகத்தான் இருக்கும் என்பது தான் இந்தச் சமூகத்தின் முடிவு,
இன்றைக்கு. என்னைப் பார்த்துக் கூட. உவர் இப்ப உவையோடு நிக்கிறார் என்றோ. உவைக்காண்;டி வேலை செய்யிறார் என்றோ சொல்லக் கூடும்,
குலத்தளவே ஆகும் குணம் என்று மட்டம் தட்டி விட்டுப் போவதன் மூலம் என்ன செய்கிறோம்
சொல்லப்படுகின்ற மாற்றுக் கருத்தில் உண்;மை இருக்குமா என்ற விவாதத்தை அத்தோடு நிறுத்தி விடுகிறோம், காரணம் என்ன எங்களுடைய தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எங்களுக்கு இல்லை, சும்மா பழசைக் கிளறிக் கொண்;டிருக்கிறார் என்று உதறி விட்டுப் போவதன் காரணம் என்ன? பொட்டுக்கேடுகள். வண்டவாளங்கள் வெளியில் வந்து நாறிவிடும், எனவே பழையதைக் கூட்டி நிலவிரிப்பின் கீழ் மறைத்து விட்டு வருபவர்களுக்கு நாங்கள் சுத்தமானவர்கள் என்று காட்டுவதில் தான் எங்களுக்கு அக்கறை, பிரச்சனைகளை மூடி மறைத்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள், காதல் வந்தால் கூட. உணர்ச்சிகளை அடக்கி. குடும்பத்திற்கு பயந்து. கௌவரத்திற்காக கலியாணம் செய்ய வேண்;டும் என்று எதிர்பார்க்கும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் நாங்கள், உணர்ச்சிகளை அடக்கி. மற்றவர்களின் விருப்புகளுக்கும் வெறுப்புகளுக்குமாக வாழ வேண்;டும் என்று நிர்ப்பந்திக்கும் இனத்திலிருந்து வந்தவர்கள் நாங்கள், எதையும் திறந்த மனதோடு எதிர்கொண்;டும் விவாதிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்காத பரம்பரையினர் நாங்கள், பிழையையும் உண்;மையையும் ஏற்றுக் கொள்ளாமல் விதண்;டாவாதம் பணணி அதகடிக்கும் பழக்கம் கொண்;டவர்கள் நாங்கள், பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல். பேசாமல் விடுவதன் மூலம் பிரச்சனைக்கான காரண்த்தை. அதில் எங்களுடைய பங்களிப்பை மூடி மறைக்கலாம் என்று பாசாங்கு பண்ணிக் கொண்;டிருக்கிறோம்,
புலிகளைப் பாதுகாப்பது என்பதை விட. அவர்களை நம்பிய பொட்டுக்கேட்டை. அவர்களின் தோல்வியால் ஏற்பட்ட அவமானத்தை மறைக்க. எங்களுடைய நிலைக்கான காரணங்களை ஆராயாமல் மற்றவர்களைக் குற்றசாட்டுவதன் காரணம் இதுதான்,
பழசைத் தோண்;டினால் நாறும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும், எங்களுடைய பழைய பெருமையைக் காட்ட தோண்;டினோம்,,, கந்தரோடையில், கிண்று வெட்டப் பூதம் வந்த மாதிரி. புத்தவிகாரைகள் வந்தன, அத்தோடு பழையதைத் தோண்;டுவதை நிறுத்தி விட்டோம், பழையதைத் தோண்;டினால் தானே பிரச்சனை என்று புதிதாகத் தோண்;ட வெளிக்கி;ட்டோம்,,, பங்கர்களையும் புதைகுழிகளையும், இன்று முழு இனத்தையும் அதன் எதிர்காலத்தையும் சேர்த்து புதைத்து விட்டோம்,
பெரியோர்களே. நர்;பர்களே. ஆர்வலர்களே.
ஊருக்கு வா கவனிப்போம் என்றவர்கள் எல்லாம் இன்று காணாமல் போய் விட்டார்கள், இருந்தாலும் யாழ்ப்பாணப் பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேண இங்கே இருக்கிறார்கள் புத்திஜீவிகள்,,, உண்மையைச் சொல்வதென்றால் இதுவரைக்கும் தன்னுடைய சிந்தனைகளால் எங்களைப் பிரமிக்க வைத்த எவரையும் நான் கண்;டதில்லை, புத்திஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள் இங்கே ஏராளம்,
இவர்கள் மண்;டையில் போடுவதை மனதார ஏற்றுக் கொண்;டாலும். வெளியில் அவரோட கருத்துக்களோட எனக்கு உடன்பாடில்லை என்று தங்கள் புத்திஜீவித்தனமாக வேசம் போடுபவர்கள், இவர்களிடம் எதிரியை மடக்க கடைசியாக விடும் பெரிய நாகாஸ்திரம் ஒன்று இருக்கும்,
அதுதான்,,, அப்ப உம்மட தீர்வு என்ன?
எங்களைக் கேட்காமலேயே ஆயுதப் போராட்டம் தான் தீர்வு என்று படுகுழிக்குள் கொண்;டு போனவர்களைப் பார்த்து வாய் திறக்காதவர்கள் எல்லாம் மாற்றுக்கருத்து என்று வந்தவுடன் தீர்வு கேட்பார்கள், இவர்கள் தீர்வு கேட்பது ஒன்றும் அதைக் குறித்து விவாதம் செய்து சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதற்கல்ல, விமர்சிப்பதற்கு? கும்பலாகச் சேர்ந்து தர்ம அடி போடுவதற்கு?
சமூகத்தின் நன்மைக்காக. இந்த சமூகத்தின் அழிவை தடுத்து நிறுத்த வேண்;டும் என்ற நல்ல எண்ணம் கொண்;டவனை களைத்துச் சலிக்கப்பண்ணுவதற்காக?
தீர்வு என்பதை விட. நாங்கள் செய்ய வேண்;டும் என்று நினைக்கின்ற சில வழிமுறைகளை இங்கே தரலாம் என்று நினைக்கிறேன்,
11/28/2010
| 0 commentaires |
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 1)
ஜோர்ஜ் இ,குருஷ்சேவ்
நீ அந்தப் பெண்;ணைப் பார்த்துப் பாட்டுப் பாடியது உண்;மையா
ஓம் ஐயா?
எப்பிடிப் பாடினாய்?
குஞ்சப்பு ஏதோ அரசவையில் அம்பிகாபதி என்ற நினைப்பில் நீதிமன்றத்தில் பாடத் தொடங்கினார்,,
ஏரிக்கரை மேலே என்று,,,
இதுவரையும் பேசாமல் பார்த்துக் கொண்;டிருந்த நீதிபதி கையைக் காட்டி நிறுத்தி விட்டுச் சொன்னார்,,,
25 ருபா குடுத்திட்டுப் போ?
பாட்டுப் பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் இருக்கிறார், பிழை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், எங்கள் குஞ்சப்பு மட்டும் தான் பாட்டுப் பாடி அபராதம் கட்டியவர்,
இதைப் போல இன்னொரு குஞ்சப்பு இருந்தார், இவர் ஒருநாள் மாலை. ஆட்டுக்கு குழை பிடுங்க மரத்தில் ஏறியிருக்கிறார், மாலை நேரம் என்றாலேயே. குஞ்சப்பு மரண வெறியில் நிற்பவர், றோட்டால் நடந்து போகும் போது கூட. கிடுகுவேலியைப் பிடித்துக் கொண்டு கிழுவ மரத்தோடு வாக்குவாதப்பட்டு;க் கொண்;டிருப்பவர், மரத்தில் ஏறியிருக்கிறார், ஏறாதே ஏறாதே என் கணவா என்ற மனைவியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல். தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி மனைவிக்கும் தூசணத்தால் பேச்சுக் கொடுத்து குஞ்சப்பு மரத்தில் ஏறியிருக்கிறார்,
பிறகென்ன குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த மாதிரி. குஞ்சப்பு மரத்திலிருந்து விழுந்து விட்டார், இந்த குறுக்கால போனவனால மனிசர் நிம்மதியா இருக்கேலாது என்று மனைவி அலறிப் புடைத்துக் கொண்;டு ஓடி வருகிறார், அருகில் பொதுக்கிணற்றடியில் குளித்துக் கொண்;டிருந்தவர்கள் ஓடி வருகிறார்கள், கூக்குரல் கேட்டு நீண்;ட தூரங்களில் இருந்தும் ஓடி வருகிறார்கள், ஊரே திரண்;டு வந்தது என்பது போல,
நல்ல காலம், தென்னை மரம் என்றால். நேரடியாக வந்து விழுந்து குஞ்சப்பு முடிந்திருப்பார், அல்லது முள்ளந்தண்;டு. கை. கால் முறிந்திருக்கும், இது கொப்புள்ள மரம், நேரடியாக விழாமல். கொப்புகளில் எல்லாம் அடிபட்டு உள்காயங்களோடு கீழே விழுந்து கிடக்கிறார், சுற்றி வர நி;ற்பவர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்;டு போவதா இல்லை. புக்கை கட்ட ஒட்டகப்புலத்துக்கு கொர்;டு போவதாடூ என்று ஓடுபட்டுப் கொர்;டிருக்கிறார்கள், பேச்சு மூச்சில்லாமல் கிடந்த குஞ்சப்பு கணணைத் திறந்து பார்க்கிறார்,
அடிபட்டு நொந்து எழும்ப முடியாமல் கிடப்பது குஞ்சப்புவிற்கு பிரச்சனை இல்லை, அவருடைய பிரச்சனை கௌரவப் பிரச்சனை, தன்னுடைய பிழையை. குடிவெறியில் மரத்தில் ஏறிய தன்னுடைய மடத்தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத கௌரவப் பிரச்சனை, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பிரச்சனை, பெரிசுகள் எல்லாம் என்ன மட வேலை பாத்தனீ என்று தன் முட்டாள்தனத்தை திட்டும் என்ற வெட்கம்,
இந்த அவமானத்தை மூடி மறைத்து. விலாசம் காட்டும் முயற்சியில்,,,கண்;ணைத் திறந்து குஞ்சப்பு சொன்னார்,,,,
விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டன்?
குஞ்சப்பு விளையாட்டு என்று சொன்னது. சீனடி. சிலம்படி. கம்பு விளையாட்டுக்கள், குஞ்சப்புவிற்கு அப்படி ஒரு விளையாட்டும் தெரியாது, தன்னுடைய பிழையை மறைக்க. எடுத்து விட்டு கயிறு அது, பின்னால் நாலைந்து மாதமாய் குஞ்சப்பு நெஞ்சில் புக்கை கட்டியபடி அலைந்தார்,
நண்;பர்களே.
முப்பது வருடங்களாக மோகமும் மையலும் கொண்;டு துரத்தி வந்த ஈழம் என்ற மாயமான். முள்ளி வாய்க்காலில் மண்டை பிளந்து. கண்ணை;த் திறந்து பார்த்தபடியே ; கிடக்கிறது, பல்லாயிரக்கண்க்கானவர்கள் பலி கொள்ளப்பட்டிருக்கிறார்கள், அதை விட அதிகமானவர்கள் அவயவங்களை இழந்து போயிருக்கிறார்கள், லட்சணக்கானவர்கள் சொந்த வீடுவாசல்களை விட்டு இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் நிhமூலமாக்கப்பட்டு. பொருளாதாரம் இன்று சிதைக்கப்பட்டிருக்கிறது, மரணம் இல்லாத வீட்டில் கடுகு வாங்கிக் கொண்டு வரச் சொன்ன புத்தர் கதை போல இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறான், பொருளாதார ரீதியாகவோ. உறவுகளை இழந்தோ,,,
இதை விட முக்கியமாக. இலங்கை அரசியலில் தமிழர்கள் தலைநிமிர்ந்து தங்கள் உரிமைகளைக் கேட்க முடியாதபடிக்கு புலிகள் நட்டாற்றில் கொண்;டு வந்து தலை குனிய விட்டுப் போயிருக்கிறார்கள், அடுத்த நாற்பது வருடங்களுக்கு தமிழர் அரசியல். யூதர்கள் நாற்பது வருட காலம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தது போல. திக்குத்திசை தெரியாமல் போக்கிடம் தெரியாமல் எதிர்காலம் சூனியமாகிய அரசியல் கருந்துளைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது,
ஆனால். உண்;மை நிலையையும் எங்கள் தவறுகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்து. வரட்டுக் கௌரவப் பிரச்சனையாக,,,, குஞ்சப்பு போல,,, விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்;டிருக்கிறோம்,
நண்;பர்களே.
உலகில் இன்று அடிக்கடி பல்வேறு அழிவுகள் நடைபெறுகின்றன, இயற்கை அழிவுகள்,,, புயல். பூகம்பம். வெள்ளம். ஆழிப்பேரலை, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகள்,,, யுத்தம். தொழில் விபத்துக்கள். சுற்றாடல் அழிவுகள், லட்சக்கணக்கான மக்கள் கண்;ணை மூடித் திறக்கும் குறுகிய கால எல்லைக்குள் கொல்லப்படுகிறார்கள், கோடிகணக்கான சொத்துக்கள் அழிகின்றன, லட்சக்கணக்கானோர்கள் அகதிகளாக்கப்பட்டு. நிர்க்கதிக்குள்ளாகிறார்கள்,
ஆனால் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கும் அந்தந்த இனத்தைச் சேர்ந்த படித்தவர்கள் ஒரு வார்த்தையைப் பாவிப்பார்கள்,
We are resilient people.
இந்த வாரம் பர்மாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங் சான் Nகியி விடுவிக்கப்பட்டது பற்றி ரொறன்ரோ ஸ்டாரில் வந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்,,, resilient leader
எங்களுடைய ஆய்வாளர்களும் எழுதுகிறார்கள், பீனிக்ஸ் போல மீண்டு;ம் உயிர்ப்போம், இந்த ஆய்வாளர்களுக்கு பீனிக்ஸ் என்பது ஒரு கற்பனைப் பறவை என்பது தெரியுமோ தெரியாது,
அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் என. நாங்களும் அழிய மாட்டோம் என்றுதானே இவர்கள் சொல்வதாக சிலர் வக்காலத்து வாங்கக் கூடும்,
அழிவினால் மனம் சோர்ந்து விடாமல். தன்னம்பிக்கையைக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் resilence என்ற பதத்திற்கும். மேதாவித்தனத்தைக் காட்டி பேய்க்காட்டுகின்ற பீனிக்ஸ் என்ற பதத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்;டு,
முதலாவது அவர்கள் எல்லாம் நாங்கள் இயற்கையிடமோ. இந்தக் காரணிகளிடமோ தோற்று விட்டோம் என்ற உண்;மையை ஏற்றுக் கொண்;டு அந்த அழிவிலிருந்து மீண்;டும் கட்டியெழுப்ப எங்களுக்கு மனவலிமை இருக்கிறது என்று மனம் தளராமல் உற்சாகப்படுத்துகிறார்கள், என்னுடைய எலும்புகளை உடைக்கலாம். ஆனால் என் மன உறுதியை உன்னால் உடைக்க முடியாது என்று இயற்கைக்கும் எதிரிகளுக்கும் சவால் விடுகிறார்கள், ஆனால் நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்வது வெட்கக்கேடு என்பது போல. குஞ்சப்பு போல. விளையாட்டுத் தெரிஞ்சபடியால் தப்பியிட்டம் என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்;டிருக்கிறோம்,
இரண்;டாவது. இந்த பீனிக்ஸ் ஆய்வாளர்கள் சொல்வது எங்கள் தமிழ் மக்களை இல்லை, மீண்;டும் எழுவோம் என்று இவர்கள் சொல்வது புலிகளை, 12 ஆயிரம் பேரோடு தலைவர் காட்டுக்குள் தயாராக இருக்கிறார். திருப்பி வந்து மணியா வேலையைக் கொடுக்கப் போகிறார் என்ற கணமூடி விசுவாசத்தில்?
சுவாமி நித்தியானந்தா போலத் தான் புலி ஆதரவாளர்களும், நித்தியானந்தாவின் காமசாஸ்திர வீடியோ வெளிவருகிறது, இந்தச் சம்பவம் நடந்தபோது நான் ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தேன், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது,
தலைவர் கொல்லப்பட்ட போது. வீடியோக்கள். படங்கள் உலகமெல்லாம் சுற்றி வருகிறது, புலி ஆதரவாளர்களுக்கு அதெல்லாம் தெரியாது, காரணம் அவர்களும் ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தார்கள்,
சமீபத்தில் ஒரு ஆய்வாளர் எழுதுகிறார்,,, ஜப்பானியர்களும் யூதர்களும் போல. யாழ்ப்பார்த்தவர்களுக்கும் பெயர் ஜெ என்ற எழுத்தில் தொடங்குகிறதாம், அதனால் நாங்களும் அவர்களைப் போல சாதனை படைப்போம் என்பது தான் அவருடைய ஆய்வின் சாராம்சம், இதை வாசித்ததும் எனக்கு எரிச்சல் வந்தது, பரதேசி. ஜெகோவாவின் சாட்சிகளும் ஜெ என்ற எழுத்தில் தானே தொடங்குகிறது,
யாழ்ப்பாணத்தவர்களை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள் jaffna man என்று குறிப்பிடுவதுண்டு, ஆனால் இந்த ஆய்வாளர் புதிதாக jaffniite என்ற அகராதியில் இல்லாத சொல்லைக் கண்;டுபிடித்து அறிமுகப்படுத்துகிறார், ஷியா முஸ்லிம்களை shiites என்பது போல,
கார் வாங்கினால் கொண்டா. ரொயோட்டா. டி,வி வாங்கினால் சோனி மட்டுமே வாங்குபவர்களுக்கு ஜப்பானியர்களோடு தங்களை ஒப்பிடுவதில் குஷி ஏற்படுவதில் சந்தேகம் இல்லை,
கேட்டால். எல்லாரும் வாங்கினம். அப்பிடி எண்;டால் நல்லதாத் தானே இருக்க வேணும். Consumer Reports சஞ்சிகை இந்த வருடம் சம்சுங்கை சிறந்த தொலைக்காட்சியாக தெரிவு செய்திருக்கே,,
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, எல்லாரும் வாங்கிறதை வாங்கினால் பிரச்சனையில்லை, எல்லாருக்கும் நடக்கிறது தானே எங்களுக்கும் நடக்கும்,
ஊரோடு ஒத்தோடு, வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையுமே வராது,
ஆனால். தங்களுக்கு கிட்லரால் இழைக்கப்பட்ட இனஅழிப்பு அநீதியை வைத்து தங்களை பாதிக்கப்பட்டவர்களாக இன்றைக்கும் காட்டிக் கொண்;டு. பாலஸ்தீனியர்களை அடக்குகின்ற யூதர்களோடு அடக்கப்பட்டு பாதிக்கப்படும் இனமான தங்களை எப்படி ஒப்பிடுகிறார்கள் என்று நீங்கள் தலையைச் சொறியக் கூடும், இங்கே ஊடகங்கள். வர்த்தகங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து இங்குள்ள அரசுகள் இஸ்ரேல் பற்றிக் கொண்;டிருக்கும் கருத்துக்களை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் யூதர்களின் திறமை தங்களுக்கும் இருக்கிறது என்று இவர்கள் காணும் கனவின் எதிரொலி தான் இது,
தற்கொலைப் போராளிகள் என்பதை புலிகளுக்கு முன்பாகவே கண்;டுபிடித்தது ஜப்பான், சக்கரவர்த்திக்காக உயிரைக் கொடுப்பதும். தோல்வியடைந்தால் வயிற்றைக் கத்தியால் கிழித்துக் கொள்வதும் வீரம் என உயிர் ஜப்பானுக்கு. உடல் மண்ணுக்கு என்ற சிந்தனையால் மூளைச் சலவை செய்யப்பட்ட மாவீரர்களை நிறையக் கொண்;டிருந்தது ஜப்பான், அமெரிக்க போர்க் கப்பல்களை விமானத் தற்கொலைப் போராளிகள் நிர்மூலமாக்கிய நிலை, கடவுளின் அவதாரமாக. சூரிய தேவனாகத் தன்னைக் காட்டிய சக்கரவர்த்தி கடைசி நேரத்தில் மக்களை தற்கொலை செய்யுமாறும். அவ்வாறு செய்பவர்களுக்கு வீரசுவர்க்கத்தில் யுத்தத்தில் போரிட்டு இறந்;தவர்களுடன். மாவீரர்களுடன். சமமான இடம் கிடைக்கும் என்று அறிவித்ததை நம்பி பத்தாயிரம பேர் வரை தற்கொலை செய்திருந்தார்கள், இரண்;டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டுகளால் அழிக்கப்பட்டு. ஜப்பான் மண்;டியிட வைக்கப்படுகிறது, யுத்தமுடிவில் ஜப்பானிய சக்கரவர்த்தி சரணடைகிறார்;,
தங்கள் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு மதித்த சக்கரவர்த்தி அரசியலில் எந்த சம்பந்தமும் இல்லாமல் வெறும் சம்பிரதாயச் சின்னமாக நடமாடும் அளவுக்கு ஜப்பான் சிறுமைப்படுத்தப்பட்டிருந்தது, மன்னிப்புக் கேட்க வந்த சக்கரவர்த்தியை ஜெனரல் மக்ஆதர் சந்திக்க மறுத்து அவமானப்படுத்துகிறார்,
ஆனால். தங்களுடைய புராதன சிந்தனை தங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது என்பதை உணர்ந்து. தங்கள் எதிரியுடனேயே சமரசம் செய்து பொருளாதார ரீதியாக முன்னேறுகிறார்கள், 90கள் வரைக்கும் அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக சவாலாக இருந்தது ஜப்பான், அதாவது தங்கள் அழிவை ஏற்றுக் கொர்;டு அடுத்து என்ன செய்ய வேண்;டும் என்ற பாதையை வகுக்கிறார்கள்,
வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி. அன்னியனே வெளியேறு என்று ஆயுதப் போராட்டம் ஒன்றை தொடங்க அவர்களுக்குத் தெரியாதா அவர்களுக்கு என்ன நாட்டுப் பற்றுத் தான் இல்லையா எங்களை விட நாட்டுப் பற்று அதிகமானவர்கள் ஜப்பானியர்கள், வெறும் கனவுகளில் தொடர்ந்தும் வாழாமல். மாவீர உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு. தங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றிய ஜப்பானியர்களுக்கும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது
யூதர்களை எடுத்துக் கொள்வோம், கிட்லரின் நாசிகளின் இன அழிப்பில் அழிக்கப்பட்டாலும். இன்று மேற்கு நாடெங்கும் பரவி. பொருளாதார ரீதியாக வளர்ந்து. அரசியல் ரீதியான அழுத்தங்கள் மூலமாக தங்களுக்கு என ஒரு நாட்டை அமைத்திருக்கிறார்கள், இன்று அந்த நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க. மேற்கு நாட்டு அரசுகளின் ஆதரவைப் பெற அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக் கொண்;டிருக்கிறார்கள்,
உதாரண்த்திற்கு ஜெரி ஸ்வாட்ஸ் என்ற கனடிய தொழிலதிபர் ஒனெக்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர், இவரது மனைவி தான் இன்டிகோ புத்தக விற்பனை நிலையத்தின் சொந்தக்காரர், இவர்கள் இருவரும் கனடிய லிபரல்கள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறது என்பதற்காக தங்கள் ஆதரவை மாற்றிக் கொண்;டு கன்சர்வேட்டிவ் அரசுக்கு ஆதரவு கொடுத்து அதற்கு நிதி சேகரிக்க உதவி செய்து அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள், இதுவரையும் எந்தக் கனடிய அரசும் வழங்காத ஆதரவை தற்போதைய கனடிய அரசு இஸ்ரேலுக்கு வழங்கிக் கொண்;டிருக்கிறது, இதெல்லாம் வெளியில் தெரியாமல் நடத்தப்படுகிறது,
இந்த யூதர்கள் எல்லாம் ரொறன்ரோவில் என்ன மாபெரும் பேரர்pயா நடத்துகிறார்கள் இல்லை. சாலை மறியல் செய்கிறார்களா இங்குள்ள அரசியல் எவ்வாறு செயற்படுகிறது என்பதை கற்றுக் கொண்;டு. காதும் காதும் வைத்தது போல வெளியில் தெரியாமல் அதற்குரிய முறைகளில் தங்கள் விருப்பங்களைச் சாதிக்கிறார்கள்,
இவர்களுக்கும் தெருவில் நின்று கூச்சல் போட்டு. எங்களிடம் இரண்;டு லட்சம் வாக்குகள் இருக்கின்றன என்று மிரட்டும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கடவுள் தங்களுக்கு வாக்களித்த பூமி என்று நம்பி. மேற்கு நாடுகளில் வசதியான வாழ்க்கையையும் கைவிட்டு. பாலைவனத்தில் அடிப்படை வசதிகளோடு மட்டும் தங்கள் நாட்டைக் காக்க வேண்;டும் என்ற உணர்வோடு வாழும் யூதர்களுக்கும். எப்படியாவது வெளிநாட்டுக்கு போக வேண்;டும் என்ற கனவோடு திரியும் தமிழர்களுக்கும் என்ன ஒற்றுமை இருகு;கிறது
அவர்களுக்கு மூளை இருக்கிறது, எங்களுக்கு வாய் இருக்கிறது, இது தான் வித்தியாசம்,
ஆனால் இவர்களை விட ஜெகோவாவின் சாட்சிகளுக்கும் யாழ்ப்பாணத்தவர்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது, அதிகாலையில் குளிரில் ஆளுக்காள் வேலைக்கு ஓடிக் கொண்;டிருப்போம், சப்வே வாசலில் இரண்;டு சஞ்சிகைகளைக் கையில் வைத்துக் கொண்;டு இரண்;டு நேர் நிற்பார்கள், கவனயீர்ப்பு கேட்டு கடைசி வரைக்கும் அமெரிக்க தூதுவரகத்தின் முன் கொடி பிடித்துக் கொண்;டிருந்த தமிழர்கள் மாதிரி,
காவல் கோபுரம்? தேசியத் தலைவர் பிரபாகரன் எங்கள் காவல் கோபுரம்,
விழித்தெழு? புலிகளை அங்கீகரி,
முடிவு நெருங்கி விட்டது? மனம் திரும்புங்கள்?
யாழ்ப்பாணத்தவர்களுக்கு முடிவு ஏற்கனவே வந்து விட்டாலும் இன்னமும் மனம் திரும்பும் எண்ணம் கிடையாது,
இப்படியாக எவனுமே கவனிக்காமல் தன் பாட்டில் போய்க் கொண்;டிருந்தாலும் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது, இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
மத நம்பிக்கையில் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கும் இவர்களுக்கும் புலிகளின் மிரட்டலுக்குப் பயந்து வருமானத்தைக் கொடுக்கும் தமிழர்களுக்கும் தான் ஒற்றுமை அதிகம்,
இப்படி ஒரு கனவில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்;டிருக்கிறோம், இன்னமும் எங்களுக்கு ஏற்பட்ட அழிவின் கனத்தை நாங்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை,
எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், பெரியம்மாவின் மகன், இவனுடைய சகோதரியின் மகளை கடைசிக்கட்டத்தில் தப்பி வரும் போது புலிகள் சுட்டுக் கொன்றது பற்றி தாயகத்தில் எழுதியிருக்கிறேன், இந்த அண்ணன் சுவையான கதைகள் சொல்வான், அதில் ஒன்று இது,
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போதும் தொண்;டமான் ஒரு சிங்களக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வார், அவர் சேர்ந்ததால் தான் அந்தக் கட்சி வென்றதா இல்லை வெல்லப் போகும் கட்சியுடன் தான் அவர் கூட்டு வைத்துக் கொள்வாரா என்பது தெரியாது, ஒன்று மட்டும் நிச்சயம் தோல்வியடைந்த கட்சி மலையத்தமிழர்களுக்கு அடிக்கும், கலவரம் வெடிக்கும், தோட்ட லயன்கள்,,, வீடுகள் எரிக்கப்படும், மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள்,
அகதிகளாக்கப்பட்டவர்கள் எங்கே போவார்கள் வடக்கில் சூரியன் உதித்தால் மலையகத்தில் சேவல் கூவும், எனவே தங்கள் தமிழ்ச் சகோதரர்கள் தங்களுக்கு தஞ்சம் தருவார்கள் என்ற நம்பிக்கையில் புகையிரதத்தில் ஏறி. வந்தாரை வாழ வைக்கும் யாழ்ப்பாணத்திற்கு வருவார்கள்,,, அவர்கள் என்ன யாழ்ப்பாணத்தவர்களா தலை மாற்றி ஜெர்மன் கனடா போக ஆனால் யாழ்ப்பாணத்திற்கு விசா கிடைக்காது, எனவே கிளிநொச்சியில் இறங்கி விடுவார்கள், போவதற்கு இடம் இல்லை, என்ன செய்வது என்பதும் தெரியாது, புகையிரத நிலையத்தில் வாழ்க்கை ஆரம்பமாகும், அருகில் உள்ள மரங்களில் கட்டப்பட்ட ஏணைகளில் பிள்ளைகள் தூங்கிக் கொண்;டிருப்பார்கள், கொண்;டு வந்த சட்டி பானைகளுடன் ஓரமாய் சமையல் நடக்கும்,
அப்போது. வீட்டுத் தலைவர்கள் சுவரில் சாய்ந்து கொண்;டு தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்களாம்,,,
மச்சான். நாம இப்ப என்னா பண்ணிறமுன்னா,,, முதல்ல ஒரு பாதையை அமைச்சிக்கிறம், அங்க வெளியில ஒரு கொட்டிலை கட்டிக்கிறம், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் காட்டை வெட்டிறம், அதுக்கு அப்புறமாக நிலத்தைக் கொத்திறம், பிறகென்ன,,, நூறு கண்டுக்கு மொளவாய்க்கண்;டு. நூறு கண்;டுக்கு கத்தரி,, இன்னொரு நூறு கண்;டுக்கு தக்காளி,,, நட்டுக்க வேண்;டியது தான், நம்ம பெண்ண்;டாட்டி. புள்ளைங்களுக்கு என்ன வேலை,, அவங்க தண்ணியைப் பாய்ச்சி. பராமரிச்சிட்டுருப்பாங்க, நாங்க பீடியை அடிச்சிக்கிட்டு வரம்பு வழிய நடந்து கங்காணி வேலை பாத்துக்க வேண்டியது தான்,
அகதிகள், போக்கிடம் இல்லை, தங்கள் கனவு சாத்தியமானதா என்ற விபரமும் கிடையாது, நம்ம யாழ்;ப்பாணி விதானைமார். டி,ஆர்,ஓ விடுவார்களா அனுமதி இல்லாமல் காட்டை வெட்டினால். சட்டவிரோதமாய் காட்டு மரம் தறித்ததற்காக பொலிசைக் கூப்பிட்டு உள்ளே தள்ள மாட்டார்களா
இதைப் போலத் தான் நாங்களும், இவ்வளவு மக்களின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது, அரசியல் எதிர்காலம் எந்த நம்பிக்கையும் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது,
நாங்கள் இங்கே இருந்து கொண்டு,,,
நூறு கண்;டுக்கு,,, நாடு கடந்த தமிழீழம், நூறு கண்;டுக்கு மக்களவை, நூறு கண்;டுக்குபுடழடியட வுயஅடை குழசரஅ இன்னொரு நூறு கர்;டுக்கு யுத்தக் குற்ற விசாரணை என்று கனவு கண்;டு கொண்;டிருக்கிறோம்,
எங்களுக்கு ஏற்பட்ட அழிவின் கனத்தை நாங்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை, வெறும் கற்பனையில் எங்களை நாங்களே குஷிப்படுத்திக் கொர்;டிருக்கிறோம், அதாவது சுய இன்பம் கண்;டு கொண்;டிருக்கிறோம்,
எல்லா முட்டைகளையும் ஒரே கூடைக்குள் வைக்கக் கூடாது என்பார்கள், கூடை விழுந்தால் எல்லா முட்டைகளும் நொருங்கி விடும், எங்கள் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் புலிகள் என்ற கூடைக்குள் வைத்ததால் தான் எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் கண்ப் பொழுதில் தகர்ந்து போனது,
நாங்கள் அடித்த திமிர்க்கூத்திற்கு நடந்த முடிவைக் கண்டு வெட்கப்பட்டு. அவமானம் தாள முடியாமல் எங்களைத் திருப்திப்படுத்துவதற்காக நியாயங்களைக் கற்பித்துக் கொண்;டிருக்கிறோம்,
புலிகள் இல்லாட்டி சிங்களவன் தமிழனை அழிச்சுப் போடுவான் என்ற நாங்கள். தமிழர்கள் இன்று தங்கள் பாட்டில் வாழ்வதைச் சகித்துக் கொள்ள முடியாமல் கொதித்துக் கொண்;டிருக்கிறோம்,
புலிகள் தனியான அரசை நடத்திக் கொண்;டிருக்கிறார்கள், தலைவர் தீர்க்கதரிசி, புலிகள் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்கள்,,, சரணடைய மாட்டார்கள்,
இப்படியாக மார்தட்டிக் கொண்;டிருந்த நாங்கள் தலைவர் போரில் விழுப்புர்; பட்டு வீரமரணமடைந்தார் என்று மார் தட்ட முடியாமல் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்கிறோம், தலைவர் சரண்டைந்து அவமானப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பதையும் புலிகளின் முக்கிய தலைவர்கள் வெள்ளைக் கொடியோடு சரண்டைந்தார்கள் என்பதையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இன்றைக்கு பேச்சை மாற்றிக் கொண்;டிருக்கிறோம்,
காரண்ம் என்ன எங்களுடைய யாழ்ப்பாண மனோபாவம் தான்,
உங்களுக்குத் தெரியும், உயர்தர வகுப்புப் படித்த பின்னால் வேலை தேடும் வரைக்கும் யாழ்ப்பாணப் பெருமகன் வீட்டில் இருப்பார், பொழுதுபோகாமல் நண்;பர்களோடு ஊர் சுற்றப் போவார், சுற்றிப் போட்டு வருபவருக்கு வீட்டில் அர்ச்சனை நடக்கும், கண்;ட கண்;ட காவாலியளோடு சுத்துறான், அதாவது தன்னுடைய மகன் ஒரு அப்பாவி, மற்றவர்களுடைய பிள்ளைகள் தன் பிள்ளையைக் கெடுக்கிறார்கள் என்பது தான் இந்த தாயின் முடிவு, அப்படியானால். அந்த கண்;ட கண்;ட காவாலிகளின் தாய்மார் என்ன சொல்வார்கள்? அந்த படிக்கிற கெட்டிக்காரப் பெடியனை ஏன்டா கெடுக்கிறாய் என்றா சொல்வார்கள் இல்லை, கண்;ட கண்;ட காவாலிகளோட சுத்திறான் என்பது தான் அவர்களின் அர்ச்சனையாக இருக்கும், எல்லாருமே தங்கள் பிள்ளைகள் ஒண்ணும் தெரியாத பாப்பா. மற்றவர்கள் தான் தங்கள் பிள்ளைகளைக் கெடுக்கிறார்கள் என்ற தீர்மானமான முடிவோடு இருப்பார்கள்,
சுத்தித் திரிகின்ற தம்பிக்கு காதல் வரும், ஒரு தலைக்காதல் வயதுக் கோளாறால் இருதலைக்காதல் ஆக கூர்ப்படையும், வயதான இருவர்களுக்கு காதல் வந்து விட்டது. பெரியோர்கள் ஒன்று கலந்து பேசி திருமாணமா முடித்து வைக்கப் போகிறார்களா வழமை போல. யாழ்ப்பாணத்தார் லாப நட்டக் கணக்கு பார்ப்பார்கள், பெணணின் அம்மா திட்டுவா,,, ஐயோ. என்ரை பிள்ளையை ஏமாத்திப் போட்டான், தம்பியின் அம்மா திட்டுவா,,, என்ரை பிள்ளையை மயக்கிப் போட்டாள்,
இது நாங்கள் எங்கும் பார்க்கிற வழமையான விடயம், யாருமே தங்கள் தரப்பில் தவறு இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை,
புலிகள் என்பவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் செல்லம் கொடுத்துக் கெடுத்த. தறுதலைப் பிள்ளை, மற்ற இயக்கங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள், இதனால் தான் தங்கள் பிள்ளைகளின் தவறைக் கண்;டும் காணாமல் பெருமை பேசித் திரிந்ததுடன். மாற்றாந்தாய் பிள்ளைகளை கேவலமாக நடத்தினார்கள், அவர்களையும் தங்கள் பிள்ளைகளாக இவர்கள் கணக்கெடுத்ததேயில்லை, மாற்று இயக்கங்களில் இருந்து வந்த நண்;பர்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்,
எனவே இந்த அழிவு வந்ததும் நாங்கள் செய்த முதல் வேலை என்ன யாரில் பழியைப் போடலாம் என்று ஆள் தேடிக் கொண்;டிருக்கிறோம்,
ஐ,நா. பான் கி மூன். நோர்வே. எரிக் சொல்கெய்ம். அமெரிக்கா. ஒபாமா. இந்தியா. சோனியா. கருணாநிதி,,,, டக்ளஸ். கருணா,,, கே,பி, பிராந்திய அரசியலில் மட்டுமல்ல. சர்வதேச அரசியலிலும் சம்பந்தப்பட்ட எல்லாரையுமே நாங்கள் துரோகி என்றிருக்கிறோம், நல்ல காலம் புலிகள் மக்களை வெளியேற அனுமதித்து பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்;டும் என்று தலாய் லாமா சொல்லியிருந்தால் அவரையும் எளிய பிக்கு. சிங்கள பௌத்தனுக்கு சைட் பணண்pறான் என்று நாங்கள் திட்டியிருப்போம்,
ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியாரோஸ்டாமி வுயளவந ழக உhநசசல ஒரு படத்தை இயக்கியிருந்தார், சங்கரும் எந்திரனும் மாதிரி உலக அளவுக்கு பெரும் புகழ் பெறவில்லை, இந்தப் படம் பிரான்சி;ன் கான் பட விழாவில் தங்க இலை விருது பெற்றது, அதில் ஒரு வர்த்தகர் தற்கொலை செய்ய விரும்புகிறார், இதற்காக ஒரு புதை குழியையும் வெட்டி விட்டு. தற்கொலை செய்த தன் உடலைப் புதைப்பதற்கு ஆள் தேடித் திரிகிறார், இப்படி ஒரு வயதானவரைச் சந்தித்து அவரைக் காரில் ஏற்றிக் கொண்;டு தன்னுடைய திட்டத்தை விளக்கும் திட்டத்தில் கூட்டிக் கொண்;டு போகிறார், அப்போது அந்த வயதானவர் ஒரு ஜொக் ஒன்று சொல்வார்,
ஒவ்வொரு பிராந்தியத்திலும் இன்னொரு இனத்தவரை முட்டாள்கள் என்று மட்டம் தட்டி கேலிக் கதைகள் சொல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும், கனடாவில் நியுபவுர்;ட்லாந்துக் காரரைக் கிண்;டல் அடிப்பார்கள், இங்கிலாந்தில் ஸ்கொட்டிஸ்காரரைக் கேலி செய்வார்கள், இந்தியாவில் சீக்கியர்களைக் கிண்;டல் செய்வார்கள், வழமை போல. அதிபுத்திசாலிகளான தமிழர்கள் தங்களைத் தவிர எல்லாரையும் முட்டாள்கள் என்பார்கள், இந்த பட்டியலில் மோட்டுச்சிங்களவர்கள். மலையகத்தினர். முஸ்லிம்கள் மட்டுமன்றி. ஏழாலையார். தீவார்கள் என நிறையப் பேர் இருப்பார்கள், இதே போல. அரேபிய நாடுகளிலும் துருக்கியர் பற்றி கிண்;டல் கதைகள் உள்ளன, அரேபிய நாடுகளை துருக்கியரின் ஒட்டோமான் சாம்ராஜ்யம் அடக்கி வைத்திருந்ததால் வந்த கோபமாகக்கூட இருக்கலாம்,
இந்தப்படத்தில் அந்த வயதானவர் சொல்லுகின்ற கதை இது தான்,
ஒரு துருக்கியர் டொக்டரிடம் போனராம், போய் சொன்னாராம்,,, டாக்டர். எனக்கு மூக்கைத் தொட்டால் நோகிறது, வயிற்றைத் தொட்டால் நோகிறது, முழங்காலைத் தொட்டால் நோகிறது, முதுகைத் தொட்டால் நோகிறது, உடம்பில் எங்கே தொட்டாலும் நோகிறது,
டாக்டர் பரிசோதித்து விட்டுச் சொன்னராம்,,, உனக்கு ஒரு இடமும் நோவில்லை, உன் சுட்டுவிரலில் தான் நோ இருக்கிறது என்று,
நாங்கள் உலகத்தில் ஒருவர் மிச்சமில்லாமல் துரோகமிழைத்து விட்டார்கள் என்று பெரும் பட்டியலே போடுகிறோம், யNகி அகாசியை மட்டுமல்ல. அசினையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை, ஆனால். எங்களில் தவறு இருக்கும் என்ற உண்மையை நாங்கள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை, யார் மீதாவது பழியைப் போட்டு. அவர்கள் துரோகம் இழைக்காவிட்டால் எங்களுக்கு ஈழம் கிடைத்திருக்கும் என்று பிதற்றிக் கொண்;டிருக்கிறோம்,
அமெரிக்கா. நோர்வே. ஐரோப்பிய சமுகம். இந்தியா. ஜப்பான். சீனா என்ற நாடுகளும் பான் கி முன் தொடக்கம் சொல்கெய்ம் வரைக்கும் துரோகம் இழைக்காவிட்டால் தலைவர் தமிழீழத்தைப் பெற்றிருப்பார் என்று எங்கட பிள்ளையைக் கண்;ட கண்;ட காவாலிகளும் கெடுத்துப் போட்டாங்கள் என்று பழியைப் போடுகிறோம், இவ்வளவு பேரும் ஆதரவு தந்தால் தான் தமிழீழம் கிடைக்கும் என்றால் அதற்கு தேசியத் தலைவரா வேண்;டும் அதை யாழ்ப்பாண்த்தில் பஸ் ஸ்ராண்;டில் சுவீப் டிக்கட் விற்ற வைரமாளிகையால் கூட பெற்றிருக்க முடியும், ஏனென்றால். வைரமாளிகைக்கு கொஞ்சம் இங்கிலிஸ் பேசத் தெரியும்,
இவ்வாறான தடைகளையும் மீறி இலட்சியங்களை அடைவதற்குத் தானே நாங்கள் தலைவர்களைத் தெரிவு செய்து ஆதரவு வழங்குகிறோம், தட்டில் வைத்துக் கொடுப்பார்கள் என்றால் இப்படி எல்லாம் அனாவசியமாக உயிர்ப் பலி கொடுத்து எதற்காகப் போராட வே;ணடும் இப்படி மற்றவர்கள் மீது நொண்;டிச்சாட்டுச் சொல்லவா இவர் தன்னை தேசியத்தலைவர் என்று பிரகடனப்படுத்திக் கொர்;டிருந்தார்
இந்தத் தோல்வியின் இரண்டாவது கட்டமாக நாங்கள் எங்களைத் தோற்கடித்த ராஜபக்ச மீது தாங்கமுடியாத கோபத்தில் இருக்கிறோம்,
நீங்களும் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளைக் கண்;டிருப்பீர்கள், இளவட்டங்கள் சில நேரங்களில் பெண்; பிள்ளைகளோடு சொறிச் சேட்டைகளில் ஈடுபடுவார்கள், ஒரு தலைக்காதல் சேட்டைகள், சில நேரங்களில் விசயம் தெரியாமல் பெணணின் அண்ணன்மாரிடமோ. அல்லது அந்தத் தெருவில் உள்ள மற்ற போட்டிக் காதலர்களிடமோ மாட்டிக் கொண்;டு அடி வாங்குவார்கள், அதிலும் மிகவும் அவமானமானது. அந்தப் பெணணின் முன்னால் அடி வாங்குவது,
அடி வாங்கியவருக்கு உலகத்தில் இல்லாத கோபம் வரும், பெணணின் முன்னால் அடி வாங்கிய அவமானம், பழி வாங்க வேண்;டும் என்று துடித்துக் கொண்;டிருப்பார், திருப்பி அடிக்க தனக்கு திராணி இருக்காது, யாரையாவது பிடித்து பழிவாங்க வேண்;டும் என்று அலைவார், இத்தனைக்கும் இப்படி தேவையில்லாமல் அந்தப் பெண்;ணோடு சொறிச் சேட்டை விட்டது தன்னுடைய பிழை என்பதை இவர் ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்,
இன்றைக்கு தமிழர்களின் ராஜபக்ச மீதான மனநிலையும் இவ்வாறானது தான், எங்களை அவமானப்படுத்தி விட்டான், அவனைப் பழிக்குப் பழி வாங்காமல் விடக் கூடாது, எந்தச் சண்;டியனைப் பிடித்து என்றாலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தான் இன்றைக்கு பலரும் துடித்துக் கொண்;டிருக்கிறார்கள், இது கிட்டத்தட்ட ழடிளநளளழைn என்ற நிலைக்கு வந்து விட்டது, யுத்தக் குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என்பது முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் குழப்ப வேர்;டும் என்பது வரைக்கும் நாங்கள் முறுகிக் கொண்;டு நிற்கிறோம்,
இலக்கிய நர்;பர்கள் வாசித்திருப்பார்கள், சுந்தர ராமசாமியின் ஜெ,ஜெ சில குறிப்புகள், இதில் ஜெ,ஜெ ஒரு இலக்கியப் பிரகிருதி பற்றிச் சொல்வான்,,, அவனுடைய நிலைப்பாட்டை அவனது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்று, அதாவது அவனுக்கு என்று சொந்தமான நிலைப்பாடு எதுவும் இல்லை, அவனது எதிரிகள் எடுக்கும் நிலைப்பாடு எல்லாவற்றுக்கும் எதிரான நிலைப்பாட்டைத் தான் இவன் எடுப்பான் என்று,
இந்த ழடிளநளளழைn இன்று எந்த அளவில் வந்து நிற்கிறது எங்களுடைய அரசியலை இவ்வளவு நாளும் பிரபாகரன் நிர்ணயித்து வந்தது போய். இப்போது மகிந்த தீர்மானித்துக் கொண்;டிருக்கிறார்,
சரத் பொன்சேகாவை ஒரு விடுதலை வீரனாகச் சித்தரித்து. அவரது மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து நாங்கள் கணண்Pர் விடுவதில் வந்து நிற்கிறது, பிரபாகரனைக் கொன்றது நான் தான். ராஜபக்ச அல்ல என்று சிங்கள இனவாதிகளின் வாக்குகளை எடுப்பதற்காக சொன்ன ஒருவரை. தமிழர்கள் சம உரிமை கேட்கத் தகுதியில்லாதவர்கள் என்று கருத்துச் சொன்ன ஒருவரை. எங்கள் எதிரி மீதான கோபம் காரணமாக. எதிரிக்கு எதிரி நண்;பன் என்றும் முள்ளை முள்ளால் எடுக்க வேர்;டும் என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்;டு ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறோம்,
எங்களுக்கு அடித்து விட்டான் என்று நாங்கள் பழி வாங்க கூலிக்கு அழைக்கும் சண்;டியன் எங்களிடம் தொடர்ந்து கப்பம் கேட்பான் என்ற உண்;மை எங்களுக்குத் தெரியாத படிக்கு எதிரி மீதான கோபம் கண்;ணை மறைத்து விட்டது,
ராஜபக்ச ஒன்றும் புனிதர் இல்லை, ஆனால் ராஜபக்ச மீது மட்டும் கோபம் கொள்வதன் காரணம் என்ன
ராஜபக்சவை யதார்த்தவாதி என்று புகழ்ந்தது யாh எழுபது கோடி ்ருபா வாங்கி தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது யார் இவர்கள் சொல்லலாம், தாங்கள் பணம் வாங்கியதாக புலிகள் சொல்லவில்லையே என்று சப்பைக்கட்டு கட்டலாம், கீழ் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என்று தமிழ்ச்செல்வனே ஒப்புக் கொண்;டிருந்தார், எனவே புலிகள் புனிதர்கள் இல்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்,
ரண்pலை விட. மகிந்த ஒரு லட்சத்து எண்;பதாயிரம் வாக்குகளால் மட்டுமே வென்றார், யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க விட்டிருந்தால் ரணில் ஜனாதிபதியாகி இருப்பார் என்பது தெரிந்த உண்;மை, எனவே. மகிந்த ஜனாதிபதியானதற்கு காரணம். புலிகளே, புலிகள் மட்டுமே, புலிகளின் உதவி இல்லாமல் மகிந்த பதவிக்கு வந்திருக்கவே முடியாது, புலிகளுக்கும் மகிந்தவுக்கும் இடையில் ஒப்பந்தம் இருந்தது, எனவே தேசியத் தலைவர் யதார்த்தவாதி என்று மதித்த ஒருவர் மீது இவர்கள் கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது
புலிகள் கொள்கையை விட்டு விலகாதவர்கள். அவங்கள் ஈழத்தை கடைசி மட்டும் விடேலைத் தானே என்று தம்பட்டம் அடிக்கும் நாங்கள் புலிக்கும் ஒரு விலை இருக்கிறது. அது விலை போகும் என்பது மட்டுமல்ல. தமிழினத்தையும் விலை பேசி விற்கும் என்ற உண்;மையை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்
நீங்கள் சொல்லலாம், ஒப்பந்தம் இருந்தது உண்மை, எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றினோம், மகிந்த தான் வாக்குறுதியை மீறித் துரோகம் இழைத்து விட்டார் என்று,
புலிகள் ஒப்பந்தம் செய்த ஒவ்வொருவரையும் என்ன செய்தார்கள் என்ற வரலாறு எங்கள் கண்; முன்னே நிற்கிறது, இந்தியாவோடு புரிந்துணர்வோடு இருந்தார்கள், பிரேமதாசாவோடு புரிந்துணர்வுடன் இருந்தார்கள், சந்திரிகாவோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள், ஆனால் அவர்களைக் கொலை செய்த விவகாரங்கள் மகிந்தவுக்கு தெரிந்திருக்காதா புலிகள் எந்தக் காலத்தில் செய்த ஒப்பந்தங்களுக்கு உண்;மையாக இருந்தார்கள் நோர்வேயில் சமஷ்;டிக்கு சம்மதம் என்று கையெழுத்து வைத்து விட்டு வந்து ரணிலின் காலை வாரியதில் இருந்து தானே புலிகளின் அழிவு ஆரம்பிக்கிறது,
மகிந்தவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய பெருமை புலிகளைச் சாருகிறது, சிங்கள இனவாதிகளை நம்பக் கூடாது என்று. அரசுடன் தொடர்பு கொண்;ட சகலரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தி மண்டையில் போட்ட புலிகள் என்ன நம்பிக்கையுடன் மகிந்தவை நம்பினார்கள் மகிந்த என்ன ரணில் போல பச்சோந்தி வேடமா போட்டார் தான் சிங்கள இனவாதி தான். சிங்கள இனவாதிகளின் ஆதரவுக்காக எதையும் செய்வேன் என்று பகிரங்கமாகத் தானே அரசியல் நடத்தினார். தமிழருக்குப் பிரச்சனை இல்லை என்று தீர்வு கிடைப்பதைச் சகல வழிகளிலும் தடுத்த ஜெ,வி,பி. உறுமயவுடன் தானே கூட்டு வைத்தார் இதி;ல் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது
மகிந்தவை தேசியத் தலைவர் யதார்த்தவாதி என்ற போது. மகிந்த ஒரு இனவாதி. இனவாதியை நம்பி அரசியல் நடத்துவது ஆபத்தில் முடியும் என்று எந்த ஆய்வாளர். எந்த ஊடகவியலாளர் தலைவருக்குப் புத்திமதி சொன்னார்
தவறு மற்றவர்களில் அல்ல. உங்களிடம் இருக்கிறது, உங்கள் நுனி விரலில் தான் நோ இருக்கிறது,
புலிகள் விட்ட தவறை மறைத்து. மகிந்தவை எப்படியாவது அவமானப்படுத்தியே ஆக வேண்;டும் என்ற வெறியில் எங்கள் இனத்தின் எதிர்காலத்தை சிந்திக்க மறந்து விடுகிறோம், இன்றைக்கும் தமிழ் ஊடகங்கள்,, பத்திரிகைகள். வானொலிகள். இiர்யத்தளங்கள்,,, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களைச் செய்யத் தொடங்கி கால் ஊன்றத் தொடங்குகிறார்கள் என்ற உண்;மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன, இன்றைக்கும் வெள்ளைவான் கடத்தல். கற்பழிப்பு என்று கதை விட்டுக்கொண்;டிருக்கிறார்கள், அங்கே போய் வந்தவர்கள் எல்லாம் அங்கே மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கிறார்கள் என்று சொன்னாலும் நம்புகிறார்கள் இல்லை,
| 0 commentaires |
மலையக மக்களை இந்திய வம்சாவளியினரென அழைக்கக் கூடாது : பிரதமர் _
| 0 commentaires |
பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை; இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்
நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி சர்தாரிக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.
இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகப் பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் சர்தாரி ஆவார்.
இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் இலங்கையுடன் மிக நீண்டகாலம் நட்புறவு பேணும் நாடு. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் இலங்கைக்கு கைகொடுத்து உதவிய நாடு.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி 2008ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார். சார்க் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அவரது விஜயம் அமைந்திருந்தது.
ஜனாதிபதி பர்வேஷ் முஷரஃப் 2002ம் ஆண்டு பாக். அரச தலைவராக வருகை தந்திருந்தார்
11/27/2010
| 0 commentaires |
தென் கொரியாக்கு எச்சரிக்கை
இதனால், கொரியா தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்து பதற்றம் அதிகரித்து இருக்கிறது. எனினும் வழக்கமான கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவே அமெரிக்க கப்பல் தென்கொரியா செல்வதாக கூறப்படுகிறது.
கொரிய கடற் பகுதியில் இரு நாட்டுப் படைகளும் அடுத்தவாரம் கூட்டு கடற்படை போர் பயிற்சி மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வட கொரியாவுக்கு சீனாவின் ஆதரவு இருந்து வருகிறது.
எனவே, இந்த விவகாரம் குறித்து சீனாவுடன் பேச தென் கொரியா முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
ஏனெனில், தென்கொரியாவுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொள்ள இருந்த சீன வெளியுவு அமைச்சர் யாங் ஜியாச்சி, தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டார். வட கொரியாவை சீனா பகிரங்கமாக கண்டித்தால் மட்டுமே இந்த போர் பதற்றம் தணியும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
| 0 commentaires |
வடக்கு ரயில் பாதை நிர்மாணம்: 416 மில். டொலர் கடன் வழங்க இந்தியா இணக்கம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பின் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கிற்கான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் மூன்று கட்டங் களாக இடம்பெறவுள்ளன. மடு முதல் தலைமன்னார் வரையும் மதவாச்சியிலி ருந்து மடு வரையும் மற்றும் ஓமந்தையில் இருந்து பலாலி வரையும் பூர்த்தி செய் யப்படவுள்ளன.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த வர்களுக்கான 50,000 வீடமைப்புச் செயற் திட்டத்திற்காக ஆவணங்களை நிதியமை ச்சின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர மற்றும் இந்திய எக்சிம்
வங்கியின் முகாமையாளர் ஆகியோர் பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக இடம் பெற்றதுடன், இலங்கை ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு இந்திய வெளியுறவு அமைச்சர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தற்போது துரித முன்னேற்றம் கண்டுள்ள இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் பணி தொடர்பாகவும் ஜனாதிபதி இதன் போது இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த நட்புறவுகள் பேணப்படுவதாகவும், தற்போது காணப்படும் சூழ்நிலையானது அதனை மேலும் பலப்படுத்த உதவுமெனவும் இந்திய அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
பயங்கரவாதம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகள், அந்தப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இரண்டு தரப்பினரும் திருப்தியடைந்துள்ளமை இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்திய கொன்சியுலர் ஜெனரல் காரியாலயங்கள் இரண்டு முறையே இன்றும் நாளையும் திறக்கப்படுவதுடன், வடக்குப் புகையிரப் பாதையின் நிர்மாணம் தொடர்பான ஞாபகார்த்த பலகை நாளை திரை நீக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் வீடமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்வும் நாளை அரியாலையில் இடம்பெற உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எல். எம். கிருஷ்ணா, இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் ஆகியோர் இந்தியா சார்பிலும், வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், மின்சாரம் மற்றும் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலர் ரொமேஷ் ஜயசிங்க, நிதியமைச்சின் செயலர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர ஆகியோர் இலங்கை சார்பாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நேற்று பிரதமர் டி. எம். ஜயரட்ணவையும் சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கையில் வட பகுதி மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுப்பது பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.
இச் சந்திப்பின் போது இந்திய வெளியுறவு அமைச்சின் செயலர் நிரூபமா ராவ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
11/26/2010
| 0 commentaires |
நைஜீரியாவின் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் ஒத்திவைப்பு
அடுத்த வருடம் ஜனவரி மாதம் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல் களை நடத்த நைஜீரிய தேர்தல் திணைக்களம் தீர்மானித்திருந்தது. அரசியலமைப்பில் மாற்றம் செய்து புதிய முறையில் தேர்தலை நடத்த பாராளுமன்றம் அனுமதியளித்தது. அரசியலமைப்பை மாற்றம் செய்ய நாட்கள் தேவைப்படுமென்பதால் ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்து வதென தேர்தல் திணைக்களம் தீர்மானித்தது.
இதன்படி ஏப்ரல் மாதம் 09ம் திகதி ஜனாதிபதி தேர்த லையும் 16ம் திகதி பாராளுமன்ற தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியலமைப்பை மாற்றம் செய் வதனூடாக தேர்தலில் ஊழல் மோச டிகள் இடம்பெறுவதை தடுக்க நைஜீரிய அரசாங்கம் எண்ணியு ள்ளது.
நைஜீரிய வரலாற்றில் தேர்தல் நேர்மையாக நடந்த சரித்தி ரம் இல்லை. இதற்கு அந்நாட்டு அரசியலமைப்பும் ஒரு காரணமாயு ள்ளது. இதையுணர்ந்த அரசாங்கம் முதலில் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய எண்ணியுள்ளது. நைஜீரியா வில் 2007ம் ஆண்டு இறுதியாக ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல் கள் இடம்பெற்றன. இதில் உமரு யாரு ஜனாதிபதியாக தெரிவு செய் யப்பட்டார்.
11/25/2010
| 0 commentaires |
கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் 2ம் நாள் விவாதம்
| 0 commentaires |