10/28/2010

பெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர்: புலனாய்வுக் குழு

நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதி அவர் ராவல்பிண்டி நகரில் திறந்தவேனில் நின்றபடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில் பெனாசீர் பலியானார். மேலும் 24 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி காலித் முகம்மது என்பவர் தலைமையில் பாகிஸ்தான் தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்தது. கொலையில் சம்பந்தப்பட்ட அப்துர் ரகுமான், சதாம், பைஸ் முகம்மது ஆகியோர் தலைமறைவாக இருந்ததால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இவர்கள் சமீபத்தில் இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்த விசாரணை தொடர்பாக, பாகிஸ்தான் உள்துறை மந்திரிக்கு கேள்விப்பட்டியலை அனுப்பி பதில் பெற முதலில் தீர்மானிக்கப்பட்டது. பிறகு, அம்முடிவு கைவிடப்பட்டது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு குழுவின் விசாரணை முடிவடைந்தது. பெனாசீரை, தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம்தான் கொலை செய்ததாக, தேசிய புலனாய்வுக் குழு கண்டுபிடித்துள் ளது. அந்த அமைப்பின் தலைவரான, மறைந்த பைதுல்லா மெகத்தான், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகவும் தேசிய புலனாய்வுக்குழு கூறியுள்ளது.
அக்குழுவின் விசாரணை அறிக்கை தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வரும் 30ம் திகதி தாக்கல் செய்யப்படுகிறது.
கொலை தொடர்பாக, தலிபான் அமைப்பை சேர்ந்த ரபாகத், உசைன், ஷெர் சமான், அத்சாஸ் ஷா, அப்துல் ரஷித் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கொலையில் அவர்களின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment