கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் தலமைக்காரியாலயம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் திருகோணமலையில் காலை திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து பாலர் பாடசாலைகளையும் ஒன்றினைத்து ஓர் வரையறைக்குள் கொண்டு வருகின்றமை தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் கொண்டுவரப்பட்ட “பாலர் பாடசாலை கல்வி நியதிச்சட்ட மூலம்” அங்கிகரிக்கப்பட்டு இதற்கான முழுமையான அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேற்படி கிழக்கு மாகாண சபையின் பாலர் பாடசாலை பணிமனை இன்று உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இப்பணிமனையானது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து பாலர் பாடசாலைகளையும் பதிவு செய்தல், அனைத்து பாலர் பாடசாலை ஆசிரியர்களையும் பதிவு செய்தல,; பாலர்பாடசாலைகள் எதி;ர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்தல,; அத்தோடு பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பள சமமேம்பாட்டினை அமுல்படுத்தல் போன்ற திட்டங்களை செயற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபை பல்வேறு சட்ட மூலங்களை இயற்றி இருந்தது. அவற்றில் பல இன்றும் அங்கிகரிக்கப்படாத நிலையில், தற்போது பாலர் பாடசாலைப் பணியகத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் கொண்டுவரப்பட்ட பாலர் பாடசாலை கல்வி நியதிச்சட்டம் 2 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டாலும் அதனூடாக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அடிப்படைக் கல்வி பிரச்சினைக்கு ஓரிரு வருடங்களில் தீர்வுகளை பெறுவதற்கு இப் பணினையின் ஊடாக எமக்கு ஓர் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், பாலர் பாடசாலையின் கல்வியில் 9வது இடத்தில்இருப்பது வேதனைக்குரியது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் எதிர்வருகின்ற காலத்தில் பாலர் பாடசாலை கல்வியினை சீரமைப்பது தொடர்பில் இப்பணியகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூகத்திற்காக பாடுபடுகின்ற புத்திஜீவிகள் குழாமைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்ற இப்பணியகம் தன்னாலான தியாக சிந்தனையோடு சேவையாற்றுகின்ற போது நாம் எதிர்பார்க்கின்ற பலனை அடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாலர் பாடசாiலை கல்வியானது கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாகும் காரணம் கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களினால் சிறு பிள்ளைகளுக்கான கல்வியினை வழங்குவதில் பல இடர்பாடுகள் இருந்தன. பெற்றோர்கள் பிள்ளைகளை வெளியில் கொண்டு கற்பிப்பதற்கு அச்சப்பட்டார்கள். ஆனால் தற்போது அவ்வாறில்லை. இப்போதைய சாதகமான சூழலை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். விசேடமாக நகரப்புறங்களை அண்டிய முன்பள்ளிகள் மிகவும் திறமையாக செயற்படுகின்றது. இதனை வைத்துக் கொண்டு பாலர் கல்வி அபிவிருத்தி அடைந்திருக்கின்றது எனக் கூறமுடியாது. மிகவும் முக்கியமாக நாம் அக்கறை கொள்ள வேண்டிய பிரதேசங்கள் கிராமங்களே ஆகும். கிராமங்களில் இருக்கின்ற பிள்ளைகளுக்காக கல்வி சரியாக போதிக்கப்பட்டு ஊதியம் இல்லாமல் அனேகமான ஆசிரியர்கள் சேவை செய்தல் சாதகமான அம்சமாகும். பெற்றோர்களின் அக்கறை இன்மை பொருத்தமற்ற சூழல் என்பதன் காரணத்தினால் அங்குள்ள பிள்ளைகளின் கல்வி சீராக இடம்பெறுவதில்லை இவ்வாறான பிரச்சினைகளை எல்லாம் நிவர்த்தி செய்கின்ற ஓர் மையமாக இப்பணிமனை திகழ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் என் நடராஜா, கிழக்கு மாகாண முதலமைச்சரின் சிரேஸ்ட ஆலேசகர் கலாநிதி விக்கினேஸ்வரன், முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி அமலநாதன், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ர்p. ஏ. நிஸாம், திருகோண மலை வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி ஆனந்தராஜா,கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் நிருவாகம் கருணாகரன், பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின மாவட்ட செயற்றிட்டப் பணிப்பாளர்களான கோபாலகிருஸ்ணன், இப்ராஹிம், திருமதி பெர்னாண்டோ மற்றும் பெற்றோர்கள் பாலர் பாடசாலை ஆசியர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment