வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் வர்த்தக சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளார். கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், லிபியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை நேற்று ஆரம்பித்த ஹுகோ சாவெஸ் முதலில் ரஷ்யா செல்வார்.
ஜனாதிபதி டிமிதீரி மெத்விடிவ் மற்றும் ரஷ்ய தலைவர்களுடன் பேச்சு நடத்தும் அவர் புதிய உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவார் 7 ஆயிரம் வீடுகளை வெனிசூலாவில் அமைத்தல் ரஷ்ய, வெனிசூலா வங்கியை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்களை இப் புதிய ஒப்பந்தம் உள்ளடக்கியிருக்கும்.
எரிபொருள் தொடர்பான உடன்படிக்கை யொன்றிலும் ரஷ்ய, வெனிசூலா தலை வர்கள் ஏற்கனவே கை எழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதையடுத்து ஈரான், லிபியா, போர்த்துக்கல், சிரியா, உக்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் பயணிப்பார்.
அமெரிக்காவின் பரம வைரியாக ஈரானுள்ளது. இங்கு செல்லும் சாவெஸ் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகளைக் கண்டித்து உரையாற்றுவார். 2006ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய வெனிசூலா ஜனாதிபதி அமெரிக்காவை கடுமையாகக் கண்டித்தார்.
அதிகார வெறி பிடித்தவையும் பேய் எனவும் உரையாற்றினார். இதனால் சாவெஸ் அமெரிக்காவின் பரம வைரியானார். இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் சாவெஸ் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அணியை ஒன்றுதிரட்டவுள்ளார் எனவும் கருதப்படுகிறது.
சாவெஸின் இவ்விஜயம் வர்த்தக நோக்கத்தையுடையதாகயிருந்தாலும் அரசியல் நோக்கம் கொண்டதெனவும் விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க தாகும்.
0 commentaires :
Post a Comment