மட்டக்களப்பு 234 வது இராணுவ தலைமையகம் முதல் முறையாக ஏற்பாடு செய்திருந்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் மோதிய இராணுவ அணியைத் தோற்கடித்து மட்டக்களப்பு புனித மிக்கேல் அணி சாம்பியனானது.
மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே தலைமையில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட முகாமின் இறுதியில் இச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் இராணுவ அணிகளும், 4 விளையாட்டு கழகங்களும் பங்குகொண்டிருந்தன.
புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் 50 – 42 என்ற புள்ளி அடிப்படையில் புனித மிக்கேல் அணி வெற்றிபெற்றது.
இதில் படை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment