10/12/2010

அரசாங்கத்தை அமைக்க உதவுமாறு சதாம் ஹுஸைனின் கட்சிக்கு அழைப்பு மறப்போம் மன்னிப்போம் என்கிறார் ஈராக் பிரதமர் நூரிமாலிகி

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் ஆதரவாளர்களை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். ஷியா தலைமையிலான பிரதமரின் கட்சி ஆட்சியமைக்க ஆசனப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றது. இன்னும் 30 ஆசனங்கள் பிரதமருக்கு தேவைப்படுவதால் ஏனைய கட்சிகளையும் அழைத்துள்ளார்.
மார்ச் 07ல் நடந்த ஈராக் பாராளுமன்ற தேர்தலில் எக்கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. 07 மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கவில்லை. இதனால் சுன்னி முஸ்லிம்களைக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் கட்சியான பாத் கட்சியை அரசாங்கம் அமைக்க உதவுமாறு அழைத்துள்ளார்.
ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் சதாம் ஹுஸைனுடன் உறவு வைத்திருந்த ஐநூறுக்கும் மேலானோர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. சதாம் ஹுஸைனின் பாத் கட்சியும் தடைசெய்யப்பட்டது.
எனவே சதாம் ஹுஸைனின் ஆதரவாளர்கள் வேறு ஒரு கட்சியில் போட்டியிட்டு பல ஆசனங்களை வென்றனர். இவர்களிடமே பிரதமர் நூரி அல் மாலிகி உதவியைக் கோரியுள்ளார். இதுவே பிரதமரின் முதல் அழைப்பாகவும் உள்ளது. இது தொடர்பாக மேலும் உரையாற்றிய ஈராக் பிரதமர் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
தவறுகள் தவறாக இருக்கட்டும். இவர்களுக்கான கதவுகள் மீளவும் திறந்துள்ளன.
அரசாங்கத்தை அமைக்க ஆதரவுதாருங்கள் யார் நாட்டைவிட்டு ஓடினார்களோ அனைவரும் மீண்டும் வாருங்கள். நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம். இரத்தக் கறைகளைக் களைவோம் என்றார் பிரதமர் நூரி அல் மாலிகி. மிதவாத ஷியா அமைப்பைக் கொண்ட இயாட் அலாவி தலைமையிலான கட்சியும் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.
குர்திஷ் சுன்னி முஸ்லிம்களின் கட்சிகளை வளைத்துப்பிடிப்பதில் இயாட் அலாவி, நூரி அல் மாலிகி கடுமையாக முயற்சிக்கின்றனர். முப்பது ஆசனங்களைப் பெறவேண்டிய நிலையில் இவர்களது கட்சிகள் உள்ளன. நீண்டகாலமாக ஈராக்கில் அரசாங்கம் அமையாது இழுபறியுண்டானமை இதுவே முதற்தடவை.

0 commentaires :

Post a Comment