10/25/2010

கினியில் அரசியல் வன்முறைகள்: ஜனாதிபதி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

கினியில் நேற்று நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன. அங்கு இடம்பெற்ற வன்முறைகளையடுத்து தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் அலுவலகம் அறிவித்தது.
கினியில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வருடம் ஜூன் 27ல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இதில் 43 வீத வாக்குகளை முன்னாள் பிரதமர் டாலியன் டயலோ பெற்றிருந்தார். எதிர்க் கட்சித் தலைவர் அல்பா கொண்டி 18 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். எவரும் பெரும்பான்மையை பெறவில்லை. வாக்கு மோசடிகள் பயமுறுத்தல்கள் நடந்ததாக இரண்டு கட்சியினரும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து பெரும் பதற்றம் எழுந்தது. இதனால் நேற்று 24 ஞாயிற்றுக் கிழமை தேர்தலை நடத்த ஏற்பாடானது. வெள்ளிக்கிழமை முதல் கினியாவில் அரசி யல் மோதல்கள், வன்முறைகள் வெடித்துள்ளதால் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது. இதையடுத்து வேறு ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் அலுவலகம் அறிவித்தது. அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஆலோசனை பெறப்பட்ட பின்னரே ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

0 commentaires :

Post a Comment