10/03/2010

ஈகுவடார் அதிபரை போலீசார் தாக்கினர்: ராணுவம் மீட்டது

     சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், போலீசாரின் போனஸ் தொகையை குறைக்க உத்தரவிட்ட ஈகுவடார் அதிபரை போலீசார் தாக்கினர். பின்னர் ராணுவம் வந்து அவரை மீட்டது.

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் அதிபர் ரபேல் கொரியா (வயது 47). இவர், 4 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்து வருகிறார். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், போலீசாரின் போனஸ் தொகையை குறைக்கவும், பதவி உயர்வை நிறுத்தவும் இவர் அறிவிப்பு வெளியிட்டார். அதை எதிர்த்து போலீசார் போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடையே ரபேல் கொரியா பேச முயன்றபோது, அவரை போலீசார் தாக்கினர். காயம் அடைந்த அவர், ஓர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த ஆஸ்பத்திரியை போலீசார் முற்றுகையிட்டனர். உள்ளே நுழைய முயன்றனர். அதிபரின் ஆதரவாளர்கள் விரைந்து வந்து, போலீசார் மீது கல்வீசித் தாக்கினர்.

இதற்கிடையே, அதிபருக்கு ஆதரவாக ராணுவம் களமிறங்கியது. போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது. இதில், ஒரு போலீஸ்காரர் பலியானதாக கூறப்படுகிறது. இறுதியாக, ஆஸ்பத்திரியில் இருந்து அதிபரை வெற்றிகரமாக மீட்டு, அதிபர் மாளிகைக்கு அழைத்துச் சென்றது. குய்ட்டோ விமான நிலையத்தை ஒரு கும்பல் கைப்பற்றியதால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ___

0 commentaires :

Post a Comment