10/12/2010

வெற்றிலைச் செய்கைக்கான அலம்பல் பெறுவதற்கு அனுமதி.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட குறிப்பாக களுதாவளை, செட்டிபாளையம் மற்றும் மாங்காடு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த வெற்றிலைச் செய்கையாளார்கள் பல காலமாக எதிர் நோக்கி வந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு எட்டப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (கிழக்கு மாகாண முதலமைச்சர்)தலைமையில் மட்டக்களப்பு கச்சேரியில் இடம் பெற்றது.  மேற்படி பிரச்சினை தொடர்பாக களுதாவளைப் பிரதேச மக்கள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தார்கள். இது தொடர்பில் இன்று அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசி அதற்கான அனுமதியினையும் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அனுமதி வழங்கும்படி உரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
பிரதி அமைச்சர்களான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், வி. முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உயர் அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மாநகர மேயர், பிரதி மேயர், தவிசாளர்கள் எனப்  பலர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment