10/15/2010

கிழக்கு மாகாண சபை வெளிக்கள உத்தியோகஸ்த்தர்களுக்கான பிரயாணப்படி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.


images1கிழக்கு மாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் செயற்படுகின்ற திணைக்களங்களில் சேவையாற்றுகின்ற வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான பிரயாணப்படி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இவ் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கடந்த காலமாக பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் எந்தவொரு வெகுமதிகளும் இல்லாமல் குறித்தொதுக்கப்பட்ட வேதனத்துடன் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர்களது பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் அறிந்தவன் என்ற வகையில் மேற்படி உத்தியோகத்தர்களுக்கான பிரயாணப்படிக் கொடுப்பனவு அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
உள்ளுராட்சி திணைக்களம்
கிராமிய அபிவிருத்தி திணைக்களம்.
விவசாய திணைக்களம்
கவாச்சார கைத்தொழில் திணைக்களம்
காணி நிருவாக திணைக்களம்
கலாச்சார சேவைகள் திணைக்களம்
காணி நிருவாக திணைக்களம்
சுகாதார சேவைகள் திணைக்களம்
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்
விளையாட்டு திணைக்களம்.
சமூக தேவைகள் திணைக்களம்.
சிறுவர் நன்னடத்தை திணைக்களம்.
மெற்குறித்த திணைக்களங்களில் சேவையாற்றுகின்ற வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரக்கான பிரயாணப்படி கொடுப்பனவு உடனடியாக இம்மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தி உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment