10/02/2010

முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறார்.- எம். ரி.ஏ. நிஸாம்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமாக இருக்கின்ற முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டி வருகிறார் என கிழக்கு மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்துள்ளார். இன்று கோரளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மட் முறுத்தானை ஸ்ரீ முருகன் வித்தியாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், கிழக்கு மாகாணம் தற்போது கல்வியில் வெகுவான வள்ர்ச்சி கண்டுவருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பிடத்தக்;க வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்களைக் குறிப்பிடமுடியும். ஆயினும், முதலமைச்சர் சந்திரகாந்தனது முயற்சியும் ஓர் முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சராக தான் இல்லாத போதும்கூட, அவர் கல்விக்காக பல்லாயிரக்கான ரூபாய்களைச் செலவளித்திருக்கின்றார். விசேடமாக அதிகஸ்ட மற்றும் கஸ்டப் பிரதேசம் என அடையாளம் காணப்பட்டிருக்கின்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு அபிவிருத்திகளை கல்விக்காக மேற்கொண்டு வருகின்றார்.
யுத்தத்தினால் வெகுவாககப் பாதிக்கப்பட்ட பிரதேசப் பாடசாலைகளை புணரமைப்பதற்கும் அவர் பல இலட்சம் ரூபாய்களைச் செலவு செய்திருக்கின்றார். எல்லாவற்றிக்கும் மேலாக வசதிகள் மிகக் குறைந்த பிரதேசங்களை உள்ளடக்கி புதிதாக ஓர் கல்வி வலயத்தினை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமாக உருவாக்கி இருக்கின்றார். நான் நினைக்கின்றேன் வருகின்ற 2011ம் ஆண்டிலிருந்து அதுவும் செயற்படத் தொடங்கும். முதலமைச்சர் சந்திரகாந்தன் வெறுமனே கிராமப் பறப் பாடசாலைகளையும் மற்றும் கஸ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்க வில்லை. மாறாக நகர்ப்ப புறப் பாடசாலைகளுக்கும் பலவேறு வகையான உதவிகளை அவர் புரிந்து கொண்டே இருக்கின்றார். பாடசாலைகளக்கான பௌதீக வளங்களோடு மாத்திரம் நின்று விடாது ஏனைய வளங்களையும் பகிர்ந்தளித்து கல்வியிலே கிழக்கு மாகாணம் தனி இடத்தைப் பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம். அதற்கு அதிகாரிகளாகிய நாங்கள் என்றுமே தயாராக இருக்கின்றோம். அதேபோல் மாணவர்களும் எதிர்காலத்தில் நல்ல பெறு பேறுகளை தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் இருக்கின்ற காலத்தில் கல்வியில் பாரிய ஓர் புரட்சியனை ஏற்படுத்தவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவும் கேட்டுக் கொண்டார்.

0 commentaires :

Post a Comment